பெண்ணை அவளுக்கான வாழ்க்கையை வாழ விடுங்கள்!

பெண்ணை அவளுக்கான வாழ்க்கையை வாழ விடுங்கள்!

ரு பெண் எந்த காலகட்டத்திலும் அவளுக்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டாள். முதலில் பெற்றோருக்காக, அப்புறம் கணவனுக்காக, அதன் பிறகு பிள்ளைகளுக்காக என அவளது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆனதாகவே இருந்து விடுகிறது. இந்த முந்தைய தலைமுறை (தாயை) பெண்களைப் பார்த்து வளரும்  இன்றைய பெண் குழந்தைகள் இப்பொழுது அதிகமாக எமோஷனல் லேபர் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். 

ஒரு பெண் காலையில் எழுந்து காபி போடுவது முதல், இரவு சமையல் முடித்துவிட்டு சமையல் அறையை சுத்தம் செய்து வைப்பது வரை வேலை... வேலை... வேலைதான். ஆண்களைப் போலவே அலுவலகத்தில் உழைத்து விட்டு, அவர்களைப் போலவே அலுப்போடு வருகிற ஒரு பெண், வீடு திரும்பியதும் இவ்வளவும் செய்துவிட்டு தன் வலிகளைப் பற்றி எந்தப் புகாரும் செய்யக்கூடாது என ஆண்கள் எதிர்பார்க்காமல் இருந்தால் 'எமோஷனல் லேபர்' குறையும். 

ஒரு மனைவியாக, ஒரு அம்மாவாக, குழந்தைகளுக்கு ஒரு டீச்சர் ஆக, ஒரு வேலைக்காரியாக, ஒரு சமையல் காரியாக, பல அவதாரங்களை எடுத்து, செய்கிற பணிகளுக்கு இடையிலும்  உங்கள் தேவைகளை புரிந்து கொண்டு அவள் செய்கிற சேவைகளில் ஆண்கள் குறைகள் கண்டு பிடிக்காமல் ஒத்தாசையாக நின்று வைத்த கை தாங்கினால் போதுமே! இதை அம்மா அப்பா செய்தால், அதைப் பார்த்து வளர்கிற பெண் குழந்தை, நமக்கும் இப்படி ஒரு நல் வாய்ப்பு கிடைக்கும். நாமும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நம்பிக்கை வைப்பார்கள். இதனால் சுமை குறையுமே! 

சரி இதிலிருந்து மீள என்ன வழி? அதுவும் பெண்கள் கையில்தான் இருக்கிறது அப்பா கணவன் மகன் என யாரோ ஒரு ஆண் வந்து தன்னை மீட்பார் என பெண்கள் நம்பக் கூடாது மற்றவர்களுக்காக வாழ்கிற தியாக பாத்திரத்தையே தனக்கு இந்த வாழ்க்கை கொடுத்திருக்கிறது என நினைக்கக் கூடாது முக மூடியற்ற வாழ்வின் வழியாக தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள முன் வர வேண்டும். 

ஒவ்வொரு பெண்ணும் தனது மகனை பெண்கள் மீது அக்கறை காட்டும் மனிதனாக வளர்க்க வேண்டும். சமையலறை வேலை பெண்களுக்கானது என சொல்லி கொடுக்காமல், சின்னச் சின்ன வேலைகளை செய்யப் பழக்க வேண்டும். சகோதரியை மதிக்கவும், அவளுக்கு உதவிகள் செய்யவும் கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்கிற, நேசிக்கிற அக்கறை காட்டுகிற மனிதனாக மகனை வளர்க்க வேண்டும்.

இப்படிச் செய்தால் அடுத்த என்ன?  இந்தத் தலைமுறைகளே இந்தச் சுமைகளை இல்லாமல் செய்து விடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com