லிப்ஸ்டிக் குறியீட்டு கோட்பாட்டின் சாதக, பாதகங்களை அறிவோம்!

Economic recession
Economic recession
Published on

லிப்ஸ்டிக் குறியீட்டு கோட்பாடு (Lipstick index theory)  என்பது பொருளாதாரம் மந்தமாக கடினமான சூழ்நிலையில் கூட மக்கள் மலிவு விலையில் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைக் குறிக்கிறது.

பொதுவாக, மக்கள் தாங்கள் பிறரின் பார்வையில் எப்படித் தெரிகிறோம் என்றுதான் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். மற்றவர்கள் மதிப்பில் தான் உயர்ந்து நிற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கடினமான காலகட்டத்தில் கூட தங்களால் ஆடம்பரப் பொருட்களை வாங்க முடியும் என்று பிறருக்குக் காண்பிப்பதற்காக அவர்கள் மலிவு விலையில் ஆடம்பரப் பொருட்களை வாங்குகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் கூட சில சமயங்களில் அதிக செலவு செய்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படம் பார்ப்பதும் உணவகங்களில் அதிகப் பணம் செலவழித்து உண்பதும் லிப்ஸ்டிக் குறியீட்டு கோட்பாட்டின் விளைவினால்தான்.

அவர்கள் ஆடம்பரமான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க முடியாது. அதிக விலை கொண்ட கைப்பைகள் அல்லது ஆடைகள் போன்றவற்றை வாங்க முடியாது. அதற்கு பதிலாக மலிவு விலையில் லிப்ஸ்டிக் போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குகிறார்கள்.

லிப்ஸ்டிக் இன்டெஸ் தியரியின் நன்மைகள்:

1. நுகர்வோர் நடத்தை நுண்ணறிவு: லிப்ஸ்டிக் குறியீட்டு கோட்பாடு பொருளாதார வீழ்ச்சியின்போது கூட நுகர்வோரில் நடத்தை எவ்வாறு மாறுகிறது என்கிற நுண்ணறிவை வழங்குகிறது. அவர்கள் சிறிய ஆடம்பரப் பொருட்களை வாங்க விரும்புவதால் அவற்றை அதிகமாக சந்தைப்படுத்துகிறது வணிக உலகம். அதன் மூலம் தயாரிக்கும் வணிகர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. மக்கள் பணம் செலவழிக்கத் தயாராக இருப்பதால் மேக்கப் பொருட்களை விற்கும் வணிகர்களும் அழகு சாதனப் பொருட்களின் வணிகமும் பயனடைகிறது.

2. மன மகிழ்ச்சியும் திருப்தியும்: சிறிய ஆடம்பர செலவுகளில் ஈடுபடுவதன் மூலம் மக்களுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது. அதில் ஒரு திருப்தியும் அவர்கள் அடைகிறார்கள்.

3. தற்காலிக உற்சாகம்: பொருளாதார மந்த நிலை என்பது மனிதர்களுக்கு ஒரு அச்ச உணர்வைத் தருகிறது. தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்வதற்காக இதுபோன்ற பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் சற்றே தங்கள் பணக்கஷ்டத்தை மறந்து இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
செஞ்சி கோட்டையிலிருந்து பாண்டிச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்ட கலைநயமிக்க தூண்கள்!
Economic recession

இதன் தீமைகள்:

1. லிப்ஸ்டிக் குறியீட்டுக் கோட்பாடு எல்லா மனிதர்களையும் பாதிப்பதில்லை. இது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். மனிதரின் மனநிலையும் வித்தியாசப்படும். எனவே, அழகு சாதனப் பொருட்களின் பொருளாதாரத்தை பற்றி உறுதியாகக் கூற முடியாது.

2. அழகு சாதனப் பொருட்களின் விற்பனை கூடும் அதே நேரத்தில், பிற ஆடம்பரப் பொருட்களின் விற்பனை அந்த அளவுக்கு உயராது என்பது வணிகர்களுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

3. பொருளாதார மந்த நிலையின்போது நிலையான வருமானம் இல்லாமல் தங்களுடைய வேலையைப் பற்றிய அச்ச உணர்வு இருக்கும் சூழ்நிலையில் கூட அழகு சாதனப் பொருட்களை வாங்க முற்படுவது அவர்களது பலகீனமான மனத்தைக் காட்டுகிறது. இதனால் அவர்கள் தங்களது பண பிரச்னையை மறந்துவிட்டு, தங்களை தற்காலிகமாக திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்.

4. தங்களுக்குப் பொருளாதார நெருக்கடி இருந்தபோதும் ஆடம்பரப் பொருட்களுக்கு அதிகமாக செலவு செய்ய அவர்கள் தயாராக இருப்பதால், உண்மையிலேயே தேவையான செலவுக்கு பணம் இல்லாமல் போகிறது. கடன் வாங்கி செலவை சமாளித்து மீண்டும் பணப் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com