காய், கனி, கிழங்கு வகைகள் பயன்படுத்தும் போது சிலவற்றை கவனிக்க வேண்டும் அவை என்னவென்று பார்ப்போம்!

Fruits and vegetables
Fruits and vegetables
 • காய்கறி, பழங்களை புதிதாக பார்த்து வாங்க வேண்டும். அவ்வப்போது தேவைக்கேற்ப வாங்குதல் நல்லது.

 • ஃப்ளூரசென்ட் விளக்குகளின் கீழே வைத்துள்ள பழங்களை வாங்க கூடாது. அந்த விளக்குகளின் கீழே வைத்திருக்கும் பழங்களில் ரசாயனமாற்றம் ஏற்பட்டு அதிலுள்ள சத்துக்கள் குறைந்து விடும்.

 • கவரில் போட்டு வைத்துள்ள பழங்களை விட உதிரியாக கொட்டி வைத்தவைகளே சிறந்தது தரமானதாக பார்த்து வாங்க சுலபமாக இருக்கும்.

 • காய்கறிகளை அளவான நீரில் வேக வைப்பது நல்லது அப்படியும் நீர் இருந்தால் அதை வீணாக்காமல் அதில் அரிசி பருப்பு போன்றவற்றை வேக வைக்கலாம்.

 • உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்றவற்றை தோல் சீவாமல் கழுவி விட்டு சமைக்கலாம். தோலில் தான் உயிர்சத்து அதிகம் உள்ளது.

 • காய்கறிகள் வாங்கியதும் தண்ணீரில் சிறிது நேரம் வைத்த பிறகு ஃப்ரிட்ஜில் வைத்தால் அவை வெகு நாட்கள் வரை பசுமையுடன் இருக்கும்.

 • காய்கறிகள் வேகும்போது அவை தேவையான அளவு வெந்த பின்பே உப்பு சேர்க்க வேண்டும். முதலிலேயே உப்பு சேர்த்தால் அதில் உள்ள நீர்ச்சத்து வீணாகிவிடும்.

 • ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம் போன்றவற்றை நறுக்கிய பிண் சாப்பிட்டு மீதம் இருந்தால் அவற்றில் எலுமிச்சம்பழச் சாறு கலந்து வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

 • வாழையிலையை பின்புறமாக சிறிது தணலில் காட்டி விட்டு பார்சல் செய்ய பயன்படுத்தினால் கிழியாது.

 • உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற நிலத்துக்கு அடியில் காய்க்கும் காய்களை வாங்கும் போது மண் இருப்பதை வாங்க வேண்டும். அதேபோல வீட்டில் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருக்க நினைத்தாலும் கழுவாமல் மண்ணுடன் வைத்திருந்தால் சீக்கிரம் காய்ந்து போகாமல் இருக்கும்.

 • காலிபிளவரை சமைப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக பூக்களை பிரித்து எடுத்து அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அதில் சிறிது உப்பும் மஞ்சள் பொடியும் போட்டு கலக்கி அரை மணி நேரம் கழிந்ததும் எடுத்தால் அதில் இருக்கும் பூச்சிகள் அழிந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
பிக் மீ பெண்களின் இயல்புகள் என்ன தெரியுமா?
Fruits and vegetables
 • பாகற்காயை நறுக்கியதும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கழித்து பிழிந்து சமைத்தால் கசப்பு சுவை குறையும் சத்துக்களும் வீணாகாது.

 • மாம்பழம் சாப்பிட்டவுடன் சிறிது பால் குடிக்க வேண்டும். அப்போதுதான் மாம்பழத்தின் சத்துக்கள் அனைத்தையும் கிரகித்துக் கொள்ளலாம். வயிற்று கடுப்பு ஏற்படாது.

 • கீரைகளை உடனுக்குடன் சமைத்து விட வேண்டும் மீதி இருந்தால் செய்தித்தாளை நீரில் நினைத்து அதில் சுற்றி வைத்தால் சீக்கிரம் வாடாமல் இருக்கும்.

 • வெங்காயத்தை பாதியாக நறுக்கி சற்று நேரம் தண்ணீரில் போட்டு வைத்தால் உரிக்கும் போது கண்களில் நீர் வராது.

 • முற்றிய கோவைக்காயில் பொரியல் செய்யும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடும்.

 • காய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கூட்டு குழம்பு சாம்பார் செய்தால் அவற்றில் உள்ள சத்துக்கள் அதிகம் வீணாகாது.

 • கத்திரிக்காய் சமைக்கும்போது ஒரு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்தால் கருப்பாக மாறாது.

 • தக்காளி பழங்களை உப்பு கரைத்த நீரில் போட்டு வைத்தால் இரண்டு மூன்று நாட்கள் கெடாமல் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com