1 டன் ஏசி வாங்க போறீங்களா? இதுதான் பெஸ்ட்!

கோடையில் குளிர்ச்சியான அனுபவம்: LG 1 Ton AC-யின் அதிகாரபூர்வ வழிகாட்டி
LG 1 Ton 4 Star AC
LG 1 Ton 4 Star AC

கோடை வெப்பத்தை நாம் சமாளிக்க திறமையான மற்றும் நம்பகத்தன்மையான ஏர் கண்டிஷனர் நமக்குத் தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு சிறிய படுக்கை அறை கொண்ட வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், LG 1 Ton 4 Star AC என்பது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது ஆற்றல் சேமிப்பு அம்சங்களுடன் வரும் மிகவும் சக்தி வாய்ந்த குளிரூட்டும் செயல்திறன் கொண்ட 1 Ton ஏசி ஆகும். இந்தப் பதிவில் LG 1 Ton 4 Star AC-யின் முக்கிய அம்சங்களை நாம் தெரிந்து கொள்வோம். 

சிறந்த குளிரூட்டும் செயல்திறன்: LG 1 Ton 4 Star AC சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறைகளுக்கு (Up to 120 sq.ft) சிறந்த குளிர்ச்சியைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விரைவாக இடத்தை குளிர்வித்து கோடைகாலத்தில் உங்களுக்கு வசதியான சூழலை உருவாக்குகிறது. இதனாலையே அதிக நபர்கள் தேர்வு செய்யும் ஒரு ஏசியாக இது உள்ளது. 

ஆற்றல் மற்றும் சேமிப்பு: இந்த ஏசியின் தனித்துவமான அம்சங்களில் அதன் ஆற்றல் திறனும் அடங்கும். 4 Star (ISEER: 4.7) ரேட்டிங் கொண்டிருப்பதால், ஏசி குறைந்த ஆற்றலையே பயன்படுத்துகிறது. இதன் மூலமாக மின்கட்டணம் குறைவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் பங்களிக்கிறது. 

Advanced Technology: LG 1 Ton 4 Star AC-யில் செயல் திறனை மேம்படுத்த பல குளிரூட்டும் தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. Dual Inverter Compressor, குறைந்த ஆற்றல் நுகர்வு மற்றும் (21dB) அமைதியான செயல்பாடு போன்றவற்றை இந்த ஏசி உறுதி செய்கிறது. AI அம்சத்தின் மூலமாக அறை வெப்பத்தை கணக்கிட்டு தானாகவே சரிசெய்து கொள்கிறது. 

ரிமோட் அம்சங்கள்: இந்த ஏசிக்கு கொடுக்கப்படும் பிரத்யேக ரிமோட் மூலமாக, அதன் அமைப்புகள் முழுவதையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். 6-1 ஆற்றல் பயன்பாடு, டைமார்கள், Auto Clean, ஸ்லீப் மோட், ஆட்டோ ரீஸ்டார்ட் போன்ற அம்சங்களை நீங்கள் பயன்படுத்த முடியும். 

உத்தரவாதம் (Warranty): வாரண்டி மற்றும் கஸ்டமர் சப்போர்ட்டில் எல்ஜி சிறந்து விளங்குகிறது. இந்த ஏசிக்கு 1 வருட ப்ராடக்ட் வாரண்டி, 5 வருட PCB வாரண்டி மற்றும் 10 வருட கம்ப்ரஸர் வாரண்டி கொடுக்கப்படுகிறது. எனவே தாராளமாக இந்த ஏசியை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
AC வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
LG 1 Ton 4 Star AC

LG 1 Ton 4 Star DUAL Inverter Split AC (Copper, AI Convertible 6-in-1 Cooling, 4 Way Swing, HD Filter with Anti-Virus Protection, 2024 Model, TS-Q13JNYE, White)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com