
தங்களது படித்த பெண்களின் விருப்பத்திற்கேற்ப, அவர்களது திருமண விஷயத்தில், பெண்ணின் பெற்றோர்கள் இப்போதெல்லாம் நிறையவே மாறிவிட்டார்களென பலர் பேசுகின்றனர். சில வீடுகளில் சம்பாதிக்கும் பெண்களின் கையே ஓங்கி இருக்கிறது. பெற்றோர்கள் வாயில்லா பூச்சிகளாக இருக்கின்றனர். "யாரைக் குற்றம் சொல்ல..?"
வெளிநாட்டு பையன் வேண்டாம்!
இந்தியாவில் இருக்கிற, அதுவும் நாம இருக்கிற ஊரில்தான் பையன் வேலைல இருக்கணம்!
க்ளீன் ஹேபிட்ஸ் இம்பார்ட்டெண்ட்! இப்படி ஒரே கண்டிஷன் மயம்.
அநேக வீடுகளில், திருமணத்திற்காக மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடுவது எல்லாம் உல்ட்டாவாக மாறி, தனக்கு வரும் மாப்பிள்ளை குறித்து பெண்கள்தான் ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள் போடுகிறார்கள் என்று எனக்கு மிகவும் தெரிந்த பையன் வீட்டவர்கள் கூறி வருத்தப்பட்டனர்.
இன்றைய பெண்களின் புது டிரெண்ட் என்னவென்றால், "கல்யாணம் ஓகே. குழந்தை பெற்றுக்கொள்வது, "நாட் ஓகே"
இரு பாலர்களிடையே அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும் அநேக வேறுபாடுகள் உள்ளன.
பெற்றோரிடம் 34 வயது பெண் கூறியது, "பையனோட செல் நம்பர்ல பேசிப்பார்த்தேன். சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. நேத்து கோவிலுக்கு போனேன்னு அவன்கிட்டே சொன்னதும், ‘யார்கூட போனே?’ ன்னு கேட்டான். மேனர்ஸ் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் ஒத்து வருவான்!’’
எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளும் லைஃப் தேவையே இல்லை என்று சொல்லும் 28 வயது பெண்.
எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது என்று பெருமை பேசும் பெற்றோர்.
எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு - கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்.
லைஃப்ல எனக்குன்னு ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்! என்று கூறும் பெண்கள் பலர்.
தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய் வருவது சகஜமாகிவிட்டதால், நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள். தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்று நினைப்பதால், காதல் திருமணம் செய்து கொள்ளவும் யோசிக்கிறார்கள். பயப்படுகிறார்கள்.
பொண்ணுக்கு இருபத்தி ஐந்து வயசாச்சே! கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும் கூட, வேளை வரவில்லை* என்கிறார்கள்.
நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன்.
நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால், அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது’ “லக்கேஜ்" தனிக்குடித்தனம் வேண்டும் என்று கூறுகிறார்கள் பல பெண்கள்.
இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக்கொண்டே போய் திருமணம் முடிக்கும் பெண்கள், வாழ்க்கையில் இழப்பது…
வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை, பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக்கொள்ள வேண்டிய நிலை.
வயதான பெற்றோர்கள் மகளின் பல்வேறு கண்டிஷன் காரணம் ஏற்படும் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு, மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாவது, என பலவகை.
இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை, நகர்ப்புறங்களில் வாழும், படித்த அநேக இளம் பெண்களின் சிந்தனை மிகவும் மாறிப்போயிருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.
இது சரியா..? தவறா..?
யாரைக் குற்றம் சொல்ல? பெற்றோர்களையா.? பிள்ளைகளையா?.