வீட்டு முன்புறம் – வாசல் பராமரிப்பின் முக்கியத்துவம்!

Lifestyle articles
Home Door maintenance
Published on

வீட்டின் முகம் என்பதை அதன் முன்புறம் (வாசல்) என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல், வீட்டில் வருகை தரும் அனைவருக்கும் முதல் பார்வையில் ஒரு “மனஅழகு” உணர்வை தரும் பகுதியாக வாசல் விளங்குகிறது. எனவே, வாசலின் சீரமைப்பும், தூய்மையும், பாதுகாப்பும் மிக முக்கியமானது.

1. வாசல் பராமரிப்பின் முக்கியத்துவம்: வாசல் என்பது வீட்டின் முகநூல்போல. சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் அழுக்குத்தன்மை ஏற்படும். பூச்சி, எறும்பு, கொசுக்கள் கூடுதல் ஆகும். உடைபாடுகள் ஏற்பட்டு பாதுகாப்பு குறையும்

2. தூய்மை பராமரிப்பு: அடிக்கடி செய்ய வேண்டியது தினமும் வாசல் பகுதியில் உள்ள தூசி, குப்பை, உதிர்ந்த இலைகள் ஆகியவற்றை அகற்றல், கதவுகளின் மேல் மற்றும் பக்கங்களில் உள்ள தூசியை துடைத்து பயன்படுத்துதல். வாசலில் உள்ள தரைத்தட்டு (திண்ணை), படிகளை வாரத்திற்கு 1 முறை சோப்புநீர் கொண்டு தேய்த்து சுத்தம் செய்தல்

3. சுகாதார பராமரிப்பு: வாசலில் நீர்த்தேக்கம் ஏற்படாமல் இருக்க நீர் பாய்ந்து விடும் வழிகள் அமைத்தல் அடிக்கடி கொசு மருந்து தெளித்தல், குறிப்பாக மழைக்காலங்களில்.

4. அலங்கார பராமரிப்பு: வாசல் அழகு என்பது மனநிம்மதிக்கும், வீட்டின் முழு தோற்றத்திற்கும் நேரடியாக உதவுகிறது. மணம் நிறைந்த, கண்ணை கவரும் வகையில் சின்னச்சின்ன பூச்செடிகள் வைத்து பசுமை உருவாக்கலாம். வாசலில் மங்கிய கலரிங் அல்லது உடைந்த டைல்ஸ் இருந்தால் வருடத்திற்கு ஒருமுறை சீரமைக்கலாம். அழகான நுழைவு வாசல் விளக்கு (decorative lighting) அமைக்கலாம். நுழைவு நேர்த்தி கொலங்கள் மற்றும் நல்ல வாசனை தரும், துளசி போன்ற செடிகள் வைக்கலாம். களைச் செடிகள் வளர்ந்து இருந்தால் அதை வெட்டி மாற்றி சுத்தப்படுத்தி விடலாம்.

வீட்டு வாசலில் பூந்தோட்டம் அமைப்பது அழகும், ஆனந்தமும், நேர்மறை ஆற்றலையும் தரும் ஒரு சிறந்த முயற்சி. வாசலில் துளசி, மல்லிகை, ரோஜா – இவை மூன்றும் இணைந்து வீட்டு நன்மையை அதிகரிக்கின்றன. வாசலில் “வாஸ்து” பின்பற்றுபவர்கள், தென்கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் பூந்தோட்டம் அமைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
அத்தியாவசிய எண்ணெய் வகைகளும், அவற்றின் பயன்களும்!
Lifestyle articles

5. பாதுகாப்பு பராமரிப்பு: கட்டாயமாக கவனிக்க வேண்டியது கதவின் பூட்டு, தாழ்ப்பாள் சரியான நிலையில் உள்ளதா என்பதை வாராந்தம் பரிசோதிக்கவும். கதவின் கிளிப்ஸ், பைசைன்கள், hinges எல்லாம் சிதைவில்லாமல் இருக்க எண்ணெய் தடவுதல். நுழைவுப் பகுதியில் சிசிடிவி, தீயணைப்பு கருவி போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தால் அவற்றின் செயல்திறன் சரிபார்க்க வேண்டும்.

6. மழைக்கால பராமரிப்பு: வாசல் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க சரியான வடிகால் அமைப்பு இருக்க வேண்டும். வாசல் கூரை (நீண்ட வராண்டா) இருந்தால், நீர் கசியவில்லை என பரிசோதிக்கவும். படிகள் வறண்டு இருக்க சிமென்ட்/பாதுகாப்பு மேல் பூச்சு செய்யலாம்.

வெயில் காலத்தில் வீட்டு வாசலை பராமரிப்பது மிகவும் முக்கியம்.

தண்ணீர் தெளிப்பு – வாசலின் வெப்பத்தை குறைக்க தினமும் காலை/மாலை தண்ணீர் தெளிக்கவும்.

தண்ணீர் ஊறாத வகையில் வாசலில் குளிர்ச்சி தரும் பசுமை கல் அல்லது செங்கல் அடுக்கவும். தூசி, இலைகள் தங்காமல் தினசரி துடைக்கவும். குளிர்ச்சி தரும் தாவரங்கள் வளர்க்கவும். இவை வாசலை குளிர்ச்சியாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க உதவும்.

வீட்டு வாசல் என்பது நம்முடைய வீட்டு பராமரிப்பு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. அதனை தூய்மையாகவும், அழகாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, விருந்தாளிகளுக்கும் ஒரு இனிய அனுபவத்தை வழங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com