ஆயுளை அதிகரிக்கும் இரகசியங்கள் இவைகள்தான்!

Lifestyle articles
Be healthy...
Published on

ம் அனைவருக்குமே நீண்ட ஆயுளோடு நிறைவான ஒரு வாழ்க்கையை வாழவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் அதற்கான ரகசியத்தை அனைவரும் தெரிந்து கொள்வதில்லை. நீண்ட ஆயுளோடும் இருக்கவேண்டும் என்றால் நிச்சயமாக ஆரோக்கியமாக இருக்கவேண்டும் இல்லையா?

நீண்ட ஆயுள் என்பது நல்ல மரபணுக்களை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடிய விஷயம் அல்ல. அதையும் தாண்டி, நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு நாம் செய்யக்கூடிய தேர்வுகள் மற்றும் தினமும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க நாம் செய்யக்கூடிய விஷயங்களும் அடங்கும். ஒருவேளை உண்மையிலேயே உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் தனிமையில் இருப்பது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு நீங்கள் 15 சிகரெட் பிடிப்பதற்கு சமம் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே எப்பொழுதும் உங்களை சுற்றி பாசிட்டிவான நபர்களை வைத்துக் கொள்வது மன அழுத்தத்தை குறைத்து, உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தும். எனவே அதிக நேரத்தை நண்பர்கள் குடும்பம் மற்றும் உங்களுக்கு பிடித்த நபர்களோடு செலவு செய்யுங்கள்.

தினமும் புதுப்புது டயட் டிரெண்டை பின்பற்றுவதற்கு பதிலாக கவனத்தோடு சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள். அதாவது நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் அதனை சாப்பிடும் போது நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை கவனம் செலுத்த வேண்டும். உணவை பொறுமையாக மென்று 80% கூழாக்கி அதனை விழுங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நீலகிரியின் தந்தை ஜான் சல்லிவன் பற்றி தெரியுமா?
Lifestyle articles

உங்களை ஆக்டிவாக வைத்துக் கொள்வதற்கு நீங்கள் ஒரு ஜிம்மிற்கு செல்ல வேண்டுமென்று அவசியம் கிடையாது. நீண்ட ஆயுளை கொண்ட மக்கள் வாழும் பகுதிகளில் இயற்கையாகவே அன்றாட பழக்கத்தில் ஒரு சில செயல்பாட்டுகளை சேர்ப்பார்கள்.

அதிகமாக நடப்பது, படிக்கட்டுகளை பயன்படுத்துவது, தோட்டத்தை பராமரிப்பது அல்லது புத்துணர்ச்சியோடு வீட்டை சுத்தம் செய்வது போன்ற எந்த வேலையாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். இந்த குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சிகளை நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் இருப்பதற்கான அபாயம் குறையும்.

உங்களுடைய கவனத்தை தாவர அடிப்படையிலான உணவுகள் மீது செலுத்துங்கள். இதற்காக நீங்கள் வெஜிடேரியனாக மாற வேண்டும் என்பது கிடையாது. மாறாக, பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் பல்வேறு வகையான வண்ணமயமான காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். இவற்றில் நார்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாத்து, உங்களை புற்றுநோய் மற்றும் இதய நோய் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
நட்ட விதையே பயிராகும்; நல்ல மனமே உயர்வாகும்!
Lifestyle articles

தூங்குவது மட்டுமே உங்கள் உடலை மீட்டெடுக்க போதுமானதாக இருக்காது. மாறாக பகல் நேரத்தில் குட்டி தூக்கம், தியானம் அல்லது இயற்கையோடு நேரத்தை செலவழிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். 20 நிமிட குட்டி தூக்கம் உங்களுடைய கவனத்தை மேம்படுத்தும். தியானம் செய்வது மன அழுத்த ஹார்மோனை குறைக்கும், இயற்கையோடு நேரத்தை செலவிடுவது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தி, ஆற்றலை ரீசார்ஜ் செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com