நட்ட விதையே பயிராகும்; நல்ல மனமே உயர்வாகும்!

Fulfilling life
Fulfilling life
Published on

லருக்கு பிறப்பு முதல் இறப்பு வரை பிரச்னைதான். பிரச்னை இல்லாத வாழ்க்கையே இல்லை. சிலரது வாழ்க்கையில் இயல்பாகவே சங்கடங்கள் வருவது உண்டு. சிலரோ சங்கடங்களை தாமாகவே வலியப் போய் தேடிப்பிடித்து அழைத்து வருவதும் உண்டு. பொதுவாகவே, நாம் நிதானத்தைக் கடைபிடித்து வாழ வேண்டும். வயதுக்குத் தகுந்தாற்போல நம்முடைய பழக்க வழக்கங்களையும் குண நலன்களையும், வரையறை செய்து கொள்ள வேண்டும். அனைவரிடமும் அன்பு பாராட்டுவது, முடிந்த வரை உதவி செய்வது இப்படி பல்வேறு நிலைகளை நாம் பக்குவமாகக் கடைபிடிக்கவேண்டும். வெளி வட்டாரத்தில் நமது பழக்க வழக்கங்களால் நமக்கான மரியாதையை வளா்த்துக்கொள்ளலாம்.

மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல. நாமாக சம்பாதித்து வைத்துக்கொள்ள வேண்டும். நமக்கென உறவிலோ நட்பிலோ நாலு பேராவது நமக்கானவர்கள் என அலசி ஆராய்ந்து பழகுவது நல்லது. அதேபோல, நமக்குக் குழந்தைகள் பிறந்தவுடன் அதற்கு ஏற்றாற்போல நல்ல நெறிமுறைகளைப் பின்பற்ற சொல்லிக் கொடுத்து வாழக் கற்றுக்கொடுப்பதே நமது கடமை. அதேபோல, அவர்களை வாழ்க்கையில் நல்லவிதமாக வாழ தீா்மானித்துக் கொடுப்பதும் நமது கடமைகளில் ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையின் இருப்பு நிலை பற்றி தெரியுமா?
Fulfilling life

அதுபோலவே, பெண்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பதிலும், நமக்குத் தலையாய கடமை உண்டு. அதே தருணம் பிள்ளைகளுக்கும் வேலை வாய்ப்பு வந்தவுடன் நல்ல குடும்பமாகப்  பார்த்து மருமகளைத் தோ்வு செய்தல் நல்ல விஷயமே.

மேலும், அவர்களுக்கு நாம் தொல்லை தராத வகையில் நமக்கான பக்குவத்தை நாமே வளா்த்துக்கொள்ள வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் ஒவ்வொரு பிள்ளைகள் வீட்டிலும் தலா பதினைந்து நாட்கள் தங்குவது போன்ற நிலைப்பாட்டினை எடுக்கக் கூடாது. இது விஷயத்தில் நாம் சோ்த்து வைத்துள்ள சொத்துக்களை உயிரோடு இருக்கும்போதே வித்தியாசம் பாராமல் யார் மனதும் பாதிக்காத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவதே நல்லது.

பல விஷயங்களில் நிதானத்துடன் செயல்படுவதே நமது கடமையாகும். நம்மால் பிற்காலத்தில் வாரிசுகளுக்குள் பிரிவினை வரக் கூடாது. இதுபோன்ற நிலைப்பாடுகளை பெரியவர்களாகிய நாம் நமது ஆயுள் காலத்திலேயே செய்து வைப்பது நல்ல தீா்வாகும். வாழும் வரை நமக்காக மட்டுமல்லாது, பொதுவாக தயாள  மனதுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இல்லற வாழ்வை புதிதாய் தொடங்குவோர்க்கு இனிதாக 7 ஆலோசனைகள்!
Fulfilling life

முடிந்த வரை பிறருக்குத் தொல்லை தராத வகையில் யாரையும் எதிர்பாராமல், சேமிப்பை உயர்வாக்கி, செலவினங்களைக் கட்டுப்படுத்தி விவேகமுடன், தெய்வ வழிபாடுகளுடன் பற்றுதல் பாசமாக வாழ்வதோடு, எந்த விஷயத்திலும் மனமாச்சர்யங்களுக்கு இடம்கொடுக்காமல்  வஞ்சக எண்ணம் கொள்ளாமல் இறுக்கமில்லா மனதோடு விசாலமாக வாழப் பழகிக்கொள்வதே நல்லது.

நல்லதை நினைத்தால், நல்லதை செய்தால் அதற்குப் பலன் உண்டு. மனசாட்சியோடு வாழ்வதே நல்ல ஆரோக்கியமான மனநிறைவான  வாழ்க்கையாகும். விதை ஒன்றை விதைத்தால் நட்ட விதையே பயிராகும் என்பதை உணர்ந்து வாழ்வதே நல்ல வாழ்வாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com