Valentine’s day special: உங்கள் காதலனுக்கான Best Love Quotes!

Love quotes for him
Love quotes for him
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

காதலர் தினம் என்று கூறுவதை விட காதலர் மாதம் என்று கூறுவதே சரி. ஏனெனில் காதலர் தினத்திற்கு முன் தொடர்ந்து பல ஸ்பெஷலான நாட்கள் வரும். முன்பெல்லாம் காதலர்கள் தங்கள் அன்பை பேனாவின் மூலம் பரிமாறிக்கொள்வார்கள். இன்று ஸ்டேட்டஸ் மூலம் பரிமாறிக்கொள்கிறார்கள். காலங்கள் மாறினாலும் பரிமாறிக்கொள்வதன் விதம் மாறினாலும் அன்பு ஒன்று மட்டும் அப்படியே உள்ளது. அதேபோல் அன்பின் ஆழத்தை அப்படியே புரியவைக்கும் மேற்கோள்கள், கவிதைகள் சொல்வதும் மாறவே இல்லை. அந்தவகையில் சில காதல் மேற்கோள்களைப் பார்ப்போம்.

1.  காரணங்கள் மூலம் தான் காதல் வரும் என்று நினைத்தவளை, காதலுக்கு காரணம் தேவையில்லை என்பதை உணரவைத்தாயடா நீ!

2.  உன்னை நினைத்து வருந்தும் போதும் கூட எனக்கு நானே அழகாய் உணர்கிறேன்.

3.  ரகசியம் சுவாரசியமானதுதான்! உன்னை எண்ணி தனிமையில் சிரிக்கும்போதும், யாருக்கும் தெரியாமல் உன்னை வந்து பார்க்கும்போதும்.

4.  காதல் கடிதங்களில் காதல் என்ற பெயரை விட உன் பெயரே அதிகம் உள்ளன.

இதையும் படியுங்கள்:
Valentines Gift for boyfriend: உங்கள் காதலனுக்கு இந்த 8 பரிசுகளைக் கொடுங்கள்!
Love quotes for him

5.  பனி விழும் இரவில், பேருந்து நிலையத்தில் பௌர்ணமி நிலவாய் உன் நியாபகங்கள்.

6.  என் கவிதை உனக்கு மட்டும்தான்!

7.  அளவில்லா ஆனந்தமும் அடைக்கலம் புகும் உன் அரிய பார்வை அம்பினால், அமைதியான அண்டமும் அட்டகாசம் செய்யும் உன் மூச்சு காற்றினால்.

இணையத்தில் எடுத்த சில மேற்கோள்கள்:

1.  விழியோர பார்வையில் விழுந்து, இதழோர புன்னகையில் இதயம் சேர்ந்து, கடலோர காவியங்களாய் காத்துக் கிடக்கிறது, என் உயிர் கல்லறையில் அவனுக்காக. – மகேஷ்வரி.

2.  வாழ்க்கை அழகானது இல்லை, அழகாக்கப்படுவது. நம்மை நேசிக்கும் ஒருவரது அன்பினால்.. உன்னுடைய அன்பினால்!

3.  அளவில்லாத கோபத்தையும் அளவுக்கு அதிகமான அன்பையும் உன்னிடம் மட்டும் தான் காண்பிக்க முடிகிறது.

4.  எதையும் எதிர்பார்க்காமல் உன்னை நேசிக்கிறேன், உன்னிடம் எதிர்பார்ப்பது ஒன்றுத்தான், அது உன் அன்பு மட்டும்தான்.

5.  காரணம் கேட்காமல் என்னை புரிந்துக்கொள்ளும் உன்னிடத்திலும் காரணங்களைக்ப கேட்க மனம் வரவில்லை, காதலால் என் வாயை மூடிவிட்டாய்!

6.   நீ கொடுக்கும் அனைத்துப் பரிசுகளும் காதலின் அடையாளமே. இனி அதில் பெரிது சிறிது என்று நினைத்து பயப்படாதே.

7.  இப்போது நீ என்னோடு இல்லையென்றாலும் நீ கொடுத்த நினைவுகளே போதும் நான் உயிர் வாழ.

8.  உன்னைப் பார்ப்பது என் கண்களாக இருந்தாலும், உன்னைப் பார்க்க ஆசைப்படுவது என் இதயமே.

9.  என் சிறு இதயத்தில் இருக்கும் அளவுக்கதிகமான அன்புக்கு காரணம், என் மேல் இருக்கும் உன்னுடைய அன்புத்தான்.

10. இந்த உலகத்தில் உன்னைப் போல் யாரும் இல்லை என்பதைவிட, என் மனதில் உன்னை தவிர யாரும் இல்லை என்பதே உண்மை.

logo
Kalki Online
kalkionline.com