Valentines Gift for boyfriend: உங்கள் காதலனுக்கு இந்த 8 பரிசுகளைக் கொடுங்கள்!

Valentine's day Gift ideas for Boyfriend.
Valentines Gift for boyfriend
Valentines Gift for boyfriend

காதலர்கள் வெகுக்காலம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த காதலர் தினம் இன்னும் சில நாட்களில் வரப்போகிறது. அன்று எத்தனை பேர் முதல் முறையாக தன் காதலை சொல்லப் போகிறார்களோ? இல்லை எத்தனை பேர் தங்கள் காதலை பலப்படுத்தப் போகிறார்களோ? எதுவாயினும் சரி! அன்று பரிசுகள் கொடுப்பது இரண்டு தரப்பினருக்குமே மிகவும் அவசியம்.

இது காதலை பலப்படுவதோடு, மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும். அதேபோல் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தவும் உதவும். பரிசுகள் என்பது எதிரே உள்ளவர்களுக்கு அது ஒரு பொருளாக தெரியக்கூடாது. அது உணர்வுப் பூர்வமாக தெரிய வேண்டும். அப்போதுதான் அது ஸ்பெஷலாக இருக்கும். அந்தவகையில் மெமரபுள் பரிசுகளின் சில ஐடியாக்களைப் பார்ப்போம்.

1. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நீண்ட கால ஆசை என்று ஒன்றிருக்கும். அதனை அனைவரிடமும் அவர்கள் சொல்ல மாட்டார்கள். தன் வாழ்வில் முக்கியமான இரு நபர்களிடம் மட்டுமே கூறியிருப்பார்கள். ஒன்று அதனைப் பற்றிய விவரங்களைக் கேட்க கூகிலிடம் (Google) தெரிவித்திருப்பார்கள். இன்னொன்று காதலியான உங்களிடமே கூறியிருப்பார்கள். ஆகையால், அந்த ஆசையை காதலர் தினத்தன்று நிறைவேற்றுங்கள். உதாரணத்திற்கு வெகுகாலமாக ஒரு இடத்திற்கு ட்ரிப் போக வேண்டும் என்று உங்களிடம் சொல்லியிருந்தால், அன்று கூட்டிக்கொண்டு செல்லுங்கள். இதனால் அவர் எப்போதும் இந்தப் பரிசை மறக்கவே மாட்டார். உங்களையும் தான்!

2. 'போதுமான பணம் கையில் இல்லை. பரிசு வாங்கவும் முடியாது வெளியில் செல்லவும் முடியாது' என்று வருந்துகிறீர்களா? அப்போது இந்த ட்ரிக்கைப் பயன்படுத்துங்கள். மனிதராக பிறந்த ஒவ்வொருக்கும் தனக்குப் பிடித்தமானவர்கள் தன்னை எப்படி பார்க்கிறார்கள், எவ்வளவு அன்பு அவர்களுக்கு தன்மீது உள்ளது என்று தெரிந்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். இது இயற்கை. ஆகையால் அவரைப் பற்றி நீங்கள் நினைக்கும் அனைத்தையும் அடிமனதிலிருந்து எழுதி அதனை வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து க்ரீட்டிங் கார்டு மாதிரி செய்து பரிசாகக் கொடுக்கலாம்.

3. அதேபோல் சிலருக்கு மிகவும் சோகமாக இருக்கும்போதும் ஒன்றில் தோல்வியடையும்போதும் சில பாடல்கள் கேட்டால் ஆறுதலாக இருக்கும். ஆகையால் வாக்மேன் வாங்கி அந்த பாடல்களைப் பதிவிறக்கம் செய்துக்கொடுங்கள். இது விலை அதிகமே என்று நினைப்பவர்கள் பென் ட்ரைவ், கேஸட் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது ஹெட்போன் மட்டுமே கூட வாங்கிக்கொடுக்கலாம்.

4. ஆண்களுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது நாம் அறிந்ததே. அதற்காக பைக் வாங்கித் தர வேண்டுமா என்று நினைத்துப் பயந்துவிடாதீர்கள். பைக் ஸ்டிக்கர்ஸ், கீச்செயின் போன்றவை வாங்கித்தரலாம்.

5. அதேபோல் ஒரே மாதிரியான கப்புல் டீ ஷர்ட் (Couple T shirt), கப்புல் வாட்ச் போன்றவைப் பரிசாக அளிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
யார் இந்த பிரசன்னா அகோரம்? தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் ஜொலிக்கும் தமிழர்!
Valentines Gift for boyfriend

6. காதலர்களுக்குள் தேவையான ஒன்று நேரம் செலவிடுவது. காதலர் தினத்தன்று உங்களுக்கான ஸ்பெஷல் இடம், கோவில், அழகான ஆறு, மலை, தோட்டம் போன்ற இடங்களுக்குச் சென்று கொண்டாடலாம். அதாவது உணவு எடுத்துக்கொண்டு சென்று ஒன்றாக சாப்பிட்டு, மடிக்கணினியில் படம் பார்த்துக்கொண்டு நேரத்தைக் கழிக்கலாம். குறிப்பாக இது காதலை முதல் முறையாக சொல்பவர்களுக்கு ஏற்றது.  

7. நீங்கள் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி ட்ரெண்டிற்கு ஏற்றவாரு ஒரு ஆல்பம் போட்டு பரிசாக அளிக்கலாம்.

8. நீங்கள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், உங்களுடைய ப்ரோப்பஸல் மொமன்ட்டை (Proposal Moment) மீண்டும் கொண்டு வந்து உங்கள் காதலனை ஆச்சர்யமடைய செய்யலாம்.

ரத்த பந்தம் இல்லாமல் வரும் அன்பு என்ற காதலும் ஆச்சரியமானதுதான், பரிசுகள் கொடுக்கும் வாழ்நாள் நியாபகங்களும் ஆச்சர்யமானதுதான். ஆகையால் நினைவுகளைக் கொடுக்கும் பரிசுகளைக் கொடுத்து காதலையே ஆச்சர்யப்படுத்தத் தயாராகுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com