பீச் வெட்டிங் ஆசையா? தமிழக அரசின் இந்த புதிய திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

beach wedding decoration
beach wedding decoration
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பீச் வெட்டிங் என்பது கடற்கரை மணல் பரப்பில், இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையில் இதமான காற்று வீச மணல் பரப்பில் நடக்கும் இந்த திருமணம், சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் ஒரு சிறிய விடுமுறை சுற்றுலாபோல அமையும். ஆடம்பர செலவுகள் இல்லாமல் புதுமையான மற்றும் ரம்யமான சூழலில் திருமணம் செய்ய விரும்புவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். வெளிப்புறங்களில் திருமணத்தை நடத்த விரும்புபவர்களுக்கு பரந்து விரிந்த கடலைப் பின்னணியாகக்கொண்டு திருமணம் செய்வதில் ஒரு சந்தோஷ உணர்வு வெளிப்படும். இங்கு குறைந்தபட்ச அலங்காரங்களே போதும்.

குறைந்த பட்ஜெட்டில் கடற்கரை திருமண யோசனைகள்:

குறைந்த பட்ஜெட்டில் கடற்கரை திருமணங்களை அழகாகச் செய்யலாம். நல்ல சீசனில் திருமணங்களை திட்டமிடுவதை விட ஆஃப்-சீசனில் திட்டமிட பட்ஜெட் பெருமளவில் குறையும். அதேசமயம் மோசமான வானிலை ஏற்பட்டால் மாற்றுத் திட்டத்தை வைத்திருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வார இறுதி நாட்களைவிட வார நாட்களில் திருமணங்கள் செய்வது பட்ஜெட்டிற்கு ஏற்றதாக இருக்கும். அத்துடன் பல அழகான கடற்கரைகள் உள்ளன. நம் விருப்பத்திற்கு ஏற்ப இடத்தை தேர்வு செய்து அனுமதித் தேவைகளைப் பற்றி விசாரிக்கலாம்.

குறைந்த பட்ஜெட்டில் கடற்கரை திருமணம் செய்வதற்கு அதிகாலை அல்லது அந்திசாயும் நேரத்தில் விழா நடத்துவது சிறந்தது. இயற்கையான கடற்கரை பின்னணியை பயன்படுத்தி, எளிமையான பந்தல், உள்ளூர்  அலங்காரப் பொருட்களான கடலில் கிடைக்கும் சிப்பிகள், கிளிஞ்சல்கள் மற்றும் காய்ந்த மரக்கட்டைகள் வைத்து மேடையை அலங்கரிக்கலாம். DIY அலங்காரங்கள் போன்றவற்றின் மூலம் செலவை குறைக்கலாம்.

கடற்கரை திருமணத்தின் உண்மையான அழகு எளிமையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறைந்த செலவில் லாந்தர்களின் உதவியுடன் ஒரு மயக்கும் சூழலை நம்மால் உருவாக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
மேகாலயாவின் 'செவன் சிஸ்டர்ஸ்' அருவி - ஒரு சொர்க்கலோக பயணம்!
beach wedding decoration

ஆடம்பரமான விலையுயர்ந்த திருமஅழைப்பிதழ்களை அடிப்பதைவிட ஆன்லைன் டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி அல்லது கடல் ஓடுகள், நங்கூரங்கள் போன்ற கூறுகளைப் பயன்படுத்தி அழைப்பிதழை வடிவமைக்கலாம். அஞ்சல் செலவை சேமிக்க டிஜிட்டல் அழைப்பிதழ்களை தேர்வு செய்யலாம். அத்துடன் மறக்காமல் ஆடைக் குறியீடு மற்றும் நடைபெறும் இடத்திற்கான வழிகள் போன்ற நடைமுறை விவரங்களையும் மறக்காமல் சேர்த்து விடலாம்.

முறையான விருந்துக்கு பதிலாக உணவு டிரக்குகள் (food trucks), BBQ அல்லது சிறிய வகை உணவுகளை (buffet) பரிமாறலாம்.

கடைசியாக,

முன்பு இது ஒரு விலையுயர்ந்த நிகழ்வாக கருதப்பட்டது. ஆனால் சமீபத்தில் தமிழக அரசின், சென்னை கடற்கரைகளில் குறைந்த கட்டணத்தில் திருமணங்கள் எனும் புதிய திட்டத்தால் அனைவரும் அணுகக் கூடிய வகையில் இந்த கடற்கரை திருமணங்கள் உள்ளது. பொதுவாக பெரும் பணக்காரர்கள் மட்டுமே ஈசிஆர் பகுதிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் பீச் வெட்டிங்கை இனி  சாதாரண மக்களும் குறைந்த செலவில் நடத்தும் வகையில் தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் நடுத்தர மக்களின் கடற்கரை திருமண கனவை நினைவாக்கவும் திட்டத்தை வகுத்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com