அதிர்ஷ்டம் VS உழைப்பு: உங்கள் வெற்றிக்கு எது கைகொடுக்கும்?

Luck and hard work
Faith and superstition
Published on

ழைத்து வாழ்வது நம்பிக்கை; உழைக்காமல் தவறாக வழிகாட்டுபவர்களை நம்புவது மூட நம்பிக்கை. நம்பிக்கை என்பது இயல்பானது. நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது. எந்த ஒரு கருத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் ஏன், எதற்கு என்ற வினாக்களை எழுப்பி ஆராய்வது புத்திசாலித்தனம். அதுவே ஒரு விஷயத்தை ஆய்வு எதுவும் செய்யாமல் நம்பினால் அது மூடநம்பிக்கையாகும்.

காகிதப் பூக்களை உருவாக்கவே ஒரு படைப்பாளி தேவைப்படுகிறான். அப்படியிருக்க, உண்மையான ரோஜாக்கள் ஒரு படைப்பாளி இல்லாமல் எப்படி உருவாகும்? ஆனால், இன்று நிறைய பேர் தங்களை புத்திசாலிகளாக காட்டிக்கொள்வதற்காக இயற்கை தோற்றுவித்ததாகக் கூறுகிறார்கள். இது நம்பிக்கையா அல்லது மூடநம்பிக்கையா?

ஒரு ஆடையை வடிவமைத்தவரை பார்த்து, ‘இவர்தான் இந்த ஆடையை உருவாக்கினார்’ என்று கூறும் நாம், உலகில் உள்ள பல்வேறு அதிசயங்களை வடிவமைத்தவர் யார் என கேட்டால், ‘அவை இயற்கையின் அற்புதம்’ என்று கடந்து செல்கிறோம். அந்த இயற்கையின் பின்னால் உள்ள வடிவமைப்பாளரை மறக்கின்றோம். இது நம்பிக்கையா அல்லது மூடநம்பிக்கையா?

இதையும் படியுங்கள்:
தீபாவளியில் தீபங்கள் ஏற்றுவதன் பின்னால் உள்ள குபேர ரகசியம்!
Luck and hard work

இன்றைய பகுத்தறிவாளர்கள் விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத எந்த ஒரு நம்பிக்கையையும் மூடநம்பிக்கை என்று கூறுகிறார்கள். எந்த ஒரு செயல் நம்மை ஊக்குவித்து நல்வழியில் வாழ துணை புரிகிறதோ அந்த நம்பிக்கை எல்லாம் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்படாவிட்டாலும் சிறந்த நம்பிக்கையே! தீய வழியில் இட்டுச் செல்லும் எந்த ஒரு செயலும் மூடநம்பிக்கைதான்.

நம்பிக்கை என்பது வேறு, மூடநம்பிக்கை என்பது வேறு. எதையும் கண் மூடித்தனமாக நம்புவது மூடநம்பிக்கை. பிறருடைய நம்பிக்கைகளை நம் மேல் திணிக்க முற்படுவது மூடநம்பிக்கை. நாம் எடுக்கின்ற காரியம் நிச்சயம் நல்லபடி முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி அடைவது நம்பிக்கை. அதுவே அதிர்ஷ்டத்தை நம்பி குருட்டாம்போக்கில் உழைப்பே இல்லாமல் எந்த முயற்சியும் எடுக்காமல் முன்னேற நினைப்பது மூட நம்பிக்கை.

செய்ய வேண்டியதை நல்ல முறையில் செய்து அதன் பலனை எதிர்பார்ப்பது நம்பிக்கை. எதையும் செய்யாமல் சோம்பி இருந்து பலனை மட்டும் எதிர்பார்ப்பது மூடநம்பிக்கை. இதை உதாரணத்துடன் விளக்க வேண்டும் என்றால் நம் பிள்ளை நன்றாகப் படிப்பதை பார்த்து அவன் நிச்சயம் பெரிய ஆளாக வருவான் என்று நினைத்தால் அது நம்பிக்கை. அவன் செயலைப் பார்த்து நமக்கு ஏற்படும் பொது உணர்வு நம்பிக்கை. அதுவே பிள்ளை படிப்பில் முட்டாளாக இருக்கும்போது, ‘அவன் முதுகில் மச்சம் இருக்கிறது, உள்ளங்கையில் மச்சம் இருக்கிறது, ஜாதகத்தில் யோகம் இருக்கிறது, நிச்சயம் அவன் பெரிய ஆளாக வருவான் என்று நம்பினால் அது மூடநம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
கடனுக்கு ‘குட்பை’: இந்த 6 வழிகளை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
Luck and hard work

கடவுள் நம்பிக்கையில் கூட நம்பிக்கை, மூடநம்பிக்கை என்று இரண்டு உண்டு. எதிர்பார்ப்புகள் இல்லாமல் நடப்பதெல்லாம் நன்மைக்கே, எல்லாம் கடவுளின் சித்தம், நம்மால் முடிந்த முயற்சிகளை செய்வோம் விளைவை இறைவனிடம் விட்டுவிடுவோம் என்று இருப்பது இறை நம்பிக்கை. மூட நம்பிக்கை என்பது எந்த முயற்சியும் எடுக்காமல் எல்லாம் அவன் பார்த்துப்பான், செடி வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான் என்று தத்துவம் பேசி வீணாகப் பொழுதை போக்குவது மூட நம்பிக்கை.

மூட நம்பிக்கை உள்ளவர்கள் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தையும், ஜோசியம், ஜோதிடம் என்று நம்புவது வழக்கம். ஒவ்வொருவரின் வாழ்விலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். முதலில் நம்மை நம்புவதும், நம்மை சுற்றியுள்ளவர்களை நம்புவதும் நமக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை உண்டாக்கும். நம்பிக்கைதான் எல்லாம். அதுதான் நம்மை உயர்த்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com