அதிர்ஷ்ட தாவரம் லக்கி பாம்பூவை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் 6 வகை நன்மைகள்!

அதிர்ஷ்ட மூங்கில்
அதிர்ஷ்ட மூங்கில்Image Credit: gardenerspath
Published on

ற்காலத்தில் புதிதாக வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரப்படி எந்த மூலையில் சமையல் அறை இருக்க வேண்டும், படுக்கை அறை எந்தப் பக்கம், வாட்டர் டேங்க் எந்தப்புறம் என ஒவ்வொன்றையும் சாஸ்திரப்படி பார்த்துப் பார்த்து அமைத்து வீட்டைக் கட்டுவது வழக்கமாக உள்ளது. வீட்டைக் கட்டி முடித்த பின் உள்அலங்காரமாக பல வகையான நவீன விளக்குகள், இருக்கைகள் என பலவற்றையும் வாங்கிப் பயன்படுத்துகின்றோம்.

இதற்கிடையில் வீட்டிற்குள் குளிர்ச்சி தர, காற்று மாசை சுத்தப்படுத்த, அஷ்ட லட்சுமிகளையும் அழைத்து வர என பல்வேறு காரணங்களுக்காக, குறைந்த அளவு பராமரிப்பிலேயே நன்கு வளரக்கூடிய வாஸ்து செடிகளையும் அழகாக வரிசைப்படுத்தி வளர்த்து வருவது ட்ரெண்டிங்காக உள்ளது. அவ்வாறான செடிகளில் மிகுந்த அதிர்ஷ்டம் தரக்கூடியதாகக் கருதப்படுவது மூங்கில் செடி. இந்த லக்கி பாம்பூவை (Lucky Bamboo) வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் 6 வகை நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. லக்கி பாம்பூ எந்த சூழலையும் தாங்கி வளைந்து கொடுத்து வளரும் குணம் கொண்டது. இருக்கும் இடத்திற்கு அழகு தரக் கூடியது. வீட்டில் உள்ளவர்களின் வளமான வாழ்வுக்கும் இதன் வளர்ச்சிக்கும் தொடர்பு உள்ளதாக நம்பப்படும் அபூர்வ தாவரம் இது. குறைந்த அளவு பராமரிப்பிலேயே தான் இருக்கும் இடத்திற்கு நேர்த்தியான அழகும் நளினமும் சேர்க்க வல்லது.

2. இந்த மூங்கில் பிளான்ட் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதோடு, வீட்டிற்கு உகந்த நேர்மறை சக்தியையும் அளிக்கக் கூடியது. இதை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதால் வீடு நிறைவான சமநிலை பெற்றுத் திகழும்.

3. இந்த செடிக்கு அவ்வப்போது சிறிது தண்ணீர் விட்டு குறைந்த வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைத்து, குறைந்த அளவு கவனிப்பு தந்தாலே அது நன்கு வளர்ந்து நிறைந்த நன்மைகளைத் தரும்.

இதையும் படியுங்கள்:
உடலின் நீர்ச்சத்தை சரி செய்யும் 5 விதமான மோர்கள்!
அதிர்ஷ்ட மூங்கில்

4. இந்த லக்கி பாம்பூ வெளிக்காற்றில் கலந்து வரும் மாசுக்களையும் கிருமிகளையும் வடிகட்டி சுத்தமான காற்றை மட்டும் வீட்டுக்குள் வர உதவும். இதனால் வீடு அதிகளவு ஆரோக்கியம் நிறைந்த காற்றினால் நிரப்பப்பட்டு வீட்டிற்குள் நல்லதொரு சூழல் உருவாகும்.

5. இதன் அடர் பச்சை நிறம் கொண்ட தோற்றம் மனதை அமைதிப்படுத்தும்; மன அழுத்தத்தைக் குறைத்து உடலை தளர் நிலைக்குக் கொண்டு செல்லும். இதனால் ஒரு தெய்வீகமான அமைதி நிறைந்த சூழல் வீட்டிற்குள் உருவாகும் வாய்ப்பு உண்டாகும்.

6. எந்த மாதிரியான உள் அலங்காரத்திற்கும் உகந்தது லக்கி பாம்பூ. அதன் அழகும், நேர்த்தியும், பார்ப்போரைத் தன் பக்கம்  கவர்ந்திழுக்கும் குணமும் அது வீட்டினுள் எந்த இடத்தில் வைக்கப்பட்டாலும் அந்த இடத்தை அமைதியும் அழகும் நிறைந்ததாக மாற்றிவிடும்.

நம் வீட்டிலும் அழகும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க லக்கி பாம்பூ வளர்ப்போம்; வளம் பல பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com