மதுரை மல்லிக்கு மட்டுமல்ல; அப்பளத்துக்கும்தான் பேமஸ்!

Madurai is not just for Jasmine; Waffles are also famous!
Madurai is not just for Jasmine; Waffles are also famous!https://www.youtube.com
Published on

ப்பளம் ஒவ்வொரு இந்திய உணவிலும், பசியை உண்டாக்கும் உணவாக அல்லது காய் இல்லாத நேரத்தில் ஒரு விரைவான பக்க உணவாக நீங்கள் அவற்றை உண்ணலாம். அவை சுவையானது மட்டுமல்ல, விருந்துகளில் இடம்பெறும் கலாசார உணவும் கூட. அப்பளத்தின் பெயர் ஆந்திராவில், ‘அபதம்’ என்றும் கேரளாவில் ‘பப்படம்’ என்றும் மாறுகிறது. இது கர்நாடகாவில், ‘ஹப்பலா’ என்றும் வட இந்தியாவில், ‘பாப்பாட்’ என்றும் மாறுகிறது. பாப்பாட் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலும் பரவலாக பிரபலமாக உள்ளது. அப்பளம் இந்தியாவில் தோன்றினாலும், அது மற்ற தெற்காசிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. அப்பளம் பிரபலமடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவியது.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 103 நாடுகளுக்கு அப்பளம் ஏற்றுமதி ஆகிறது. வட இந்தியாவிலிருந்து அப்பளம் ஏற்றுமதி செய்தாலும், சென்னை அப்பளத்துக்கு வரவேற்பு அதிகம். முக்கியமாக, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகளுக்கு மட்டுமே இந்தியாவின் மொத்த அப்பள ஏற்றுமதியில் 80 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது, ஆப்பிரிக்க நாடுகள் அப்பள ஏற்றுமதிக்கு புதுச் சந்தையாகத் திகழ்கிறது.

மதுரை என்றால் மல்லி என்பது போல், அப்பளம் என்றால் அதுவும் மதுரைதான். அப்பள உற்பத்தியில் முதலிடத்தில் மதுரை மாவட்டமே உள்ளது. தமிழகத்தின் ஒரு ஆண்டிற்குத் தேவையான அப்பளத்தின் 70 சதவீதத்தை பூர்த்தி செய்வது மதுரையில் தயாராகும் அப்பளங்கள்தான். கிட்டத்தட்ட ஆண்டிற்கு 320 டன்கள்.

மதுரையில் 700க்கும் மேற்பட்ட அப்பளத் தொழிற்சாலைகள் உள்ளன. அதில் 336 தொழிற்சாலைகள் லைசென்ஸ் பெற்று இயங்குகின்றன. இதில் உருவாகும் அப்பளங்களின் வியாபார மதிப்பு ஆண்டுக்கு 300 கோடிகள். இந்த மதுரை அப்பளத் தொழில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மதுரை மக்களின் வாழ்வாதார தொழிலில் முக்கியமானது அப்பளத் தொழில்.

மதுரை மாவட்டத்தில் தயாராகும் அப்பளங்கள் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. தமிழகத்தில் மதுரை தவிர சென்னை, கோவை, திருச்சியில் அப்பளங்கள் தயாராகிறது. மதுரை மாவட்டத்தில் அனுப்பானடி, சிந்தாமணி, ஜெய்ஹிந்த்புரம் மற்றும் சோழவந்தான் பகுதிகளில் அப்பளங்கள் தயாராகிறது.

அப்பளங்கள் ஓர் இந்திய உணவு. இதன் பூர்வீகம் கேரள மாநிலம். 1940ம் ஆண்டு கேரள மாநிலம், திருச்சூரிலிருந்து மதுரைக்கு பிழைக்க குடிபெயர்ந்த ஒரு தம்பதியினர் மதுரையில் நிலவும் அதிக சூரிய வெளிச்சம் மற்றும் குறைந்த மழை பொழிவும் உள்ள சூழ்நிலை அப்பளத் தொழிலுக்கு உகந்தது எனக் கருதி முதன்முதலாக அப்பளம் தயாரித்து விற்றார்கள். தற்போது அது தமிழகத்தில் நம்பர் ஒன் மாவட்டமாக அப்பளத் தொழில் உள்ளது.

கேரள மாநிலத்தின் பப்பட்டிற்கும், மதுரை அப்பளத் நிற்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அதை வெயிலில் காயவைக்கும் நேரம்தான். கேரள பட்டம் ஒரு நாள் மட்டுமே வெயிலில் காய வைக்கப்பட்டு தயாராகிறது. மதுரை அப்பளங்கள் இரண்டு, மூன்று நாட்கள் வரை வெயிலில் காய வைக்கப்பட்டு தயாராகிறது. அதனால்தான் அந்த அப்பளங்களின் பயன்பாட்டு காலமும் அதிகரிக்கின்றது.

அப்பளத்திலும் பல 'வெரைட்டி' கள் இருந்தாலும் வட்ட வடிவத்தில் உள்ள அப்பளம் தான் பெருவாரியான மக்களால் விரும்பப்படுகிறது. நான்கு அளவுகளில் அப்பளங்கள் மதுரை மாவட்டத்தில் தயாராகின்றன. இரண்டரை, மூன்றரை, நான்கரை இன்ஞ் மற்றும் பேபி சைஸ். இவைதான் 'ஸ்டாண்டர்ட் அப்பளத்தின் அளவுகள். இங்கு தயாராகும் அப்பளங்கள் ஆறு மாதங்கள் வரை கெட்டுபோகாமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ரோஜாப்பூவும் முற்செடியும்!
Madurai is not just for Jasmine; Waffles are also famous!

வெளிநாட்டில் எவ்வளவுதான் தின்பண்டங்கள் இருந்தாலும் உணவு உண்ணும்போது அப்பளம்தான் அவர்களுக்கு மிகவும் பிடித்த தின்பண்டமாக இருக்கிறது. சென்னை, கோவை திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அப்பளத் தொழில் நடைபெற்றாலும் மதுரைதான் வெளிநாட்டின் அப்பளத் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்தத் தொழிலுக்கு தேவையான உளுந்து 70 சதவிகிதம் பர்மாவில் இருந்து பெறப்படுகிறது. இந்தியாவில், தஞ்சை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாவட்டங்களில் இருந்து 30 சதவிகிதம் உளுந்துதான் பெறப்படுகிறது. இந்தியாவில் இருந்து பெறப்படும் உளுந்துக்கு பசைத்தன்மை இருப்பதாலும், அப்பளத் தயாரிப்பில் பிரயோகப்படுத்தும் அனைத்து வகையான வேலைகளும் கைகளினால் செய்யப்படுவதும் அப்பளம் சுவையாகவும், கெடாமலும் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com