வாஸ்து மற்றும் மனையடி சாஸ்திரம்: எந்த வடிவ நிலத்தில் வீடு கட்டினால் என்ன பலன் கிடைக்கும்?

ஒருவர் தான் வசிக்கும் வீட்டில் ஆரோக்கியம், அமைதி, சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ மனையடி சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
manaiyadi sastram - வாஸ்து சாஸ்திரம்
manaiyadi sastram - வாஸ்து சாஸ்திரம் AI Image
Updated on

வாஸ்து சாஸ்திரம் மற்றும் மனையடி சாஸ்திரம் என்பது வெறும் செங்கற்களையும் சிமெண்டையும் அடுக்கி வைக்கும் கலை மட்டுமல்ல, அது பிரபஞ்ச ஆற்றலுக்கும் நாம் வாழும் இடத்திற்கும் இடையிலான ஒரு நுட்பமான உறவை விளக்கும் அறிவியலாகும். சங்க காலம் தொட்டே தமிழர்களின் கட்டிடக்கலையில் இந்த சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது நிலத்தின் அமைப்பு, திசைகள் மற்றும் பஞ்சபூதங்களின் சமநிலையை அடிப்படையாகக் கொண்டு, வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்குவதையும், ஆரோக்கியம், செல்வம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொதுவாக மனையடி சாஸ்திரம் என்பது ஒரு மனையில் கட்டப்படும் வீட்டின் அகல நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்? எந்த அகல நீளத்தில் வீட்டின் அறைகள் இருந்தால் என்ன பலன்கள் உண்டாகும்? இப்படி வீட்டின் அளவை குறித்து முழுமையாக விளக்குவதே மனையடி சாஸ்திரம்.

இந்த உலகமானது பஞ்சபூதங்களை வித்தாக கொண்டது. அதில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் என எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது.. ஒருவர் தான் வசிக்கும் வீட்டில் ஆரோக்கியம், அமைதி, செல்வத்துடன் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ இந்த மனையடி சாஸ்திர படி வீடு அமையும் பொழுது இவை எல்லாம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஒரு நிலத்தை வாங்கும் முன் அதன் வடிவம், திரை மற்றும் அதிர்வு ஆகியவற்றை ஆராய்வதே இதன் அடிப்படை. மனையடி சாஸ்திரத்தின்படி, மனைகளை அதன் வடிவத்தை கொண்டு பல வகைகளாக பிரிக்கலாம்.

* இதில் சதுர மனை (சதுர வடிவம்) முதன்மையானது. இதன ‘பூர்ண மனை’ என்றும் அழைப்பார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, சதுர வடிவிலான மனை (நிலம்) மிகச் சிறந்ததாகவும், முதல் தரமானதாகவும் கருதப்படுகிறது. இது நான்கு பக்கங்களும் சமமான நீளத்தைக்கொண்டு, ஆற்றல் சமநிலையை முழுமையாகப் பேண உதவுகிறது. நான்கு பக்கங்களும் சமமாக இருக்கும் இந்த மனையில் ஆற்றல் சீராக சுழலும் என்பதால் அங்கு வசிப்பவர்களுக்கு நிலையான மகிழ்ச்சியும், மன அமைதியும், செல்வ செழிப்பும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

* இதற்கு அடுத்தபடியாக செவ்வக மனை (ஆயுத மனை) போற்றப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, சதுர மனைக்கு அடுத்தபடியாக செவ்வக மனை மிகவும் உகந்தது. இது வளர்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. குறிப்பாக நீளம் அகலத்தை விட இரண்டு மடங்குக்கு மிகாமல் இருப்பது நலம் பயக்கும்.

அதாவது மனையின் நீளம் மற்றும் அகலம் 1:2 என்ற விகிதத்தில் இருப்பது மிகச்சிறந்த பலன்களைத் தரும். மேலும், வட திசையில் நீளமும், மேற்கு திசையில் அகலமும் அமைவது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் பெருக்கும். கிழக்கு-மேற்கு அச்சு, வடக்கு-தெற்கு அச்சை விட நீளமாக இருப்பது வாஸ்துப்படி சிறந்தது. மனையின் பிரம்மஸ்தானம் எனப்படும் மையப்பகுதி காலியாகவோ அல்லது லேசான எடையுள்ளதாகவோ இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் வறுமை சேர காரணம் இதுதான்! நீங்கள் செய்யும் இந்த வாஸ்து தவறுகளை உடனே மாற்றுங்கள்.
manaiyadi sastram - வாஸ்து சாஸ்திரம்

* மற்றொரு சுவாரஸ்சியமான வகை சிம்ம முகம் (Shermukhi Plot)மற்றும் கோமுகம் ஆகும். வாஸ்து சாஸ்திரத்தில், நிலத்தின் முன்புறம் அகலமாகவும் பின்புறம் குறுகலாகவும் (சிங்கம் போன்ற வடிவில்) இருந்தால் அது ‘சிம்ம முக மனை’ எனப்படும். இது வணிக நிறுவனங்களுக்கு ஏற்றது.

அதாவது, சிம்ம முகம் மனை வாஸ்து முறைப்படி வணிகக் கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது தலைமைப் பண்பு, ஆற்றல் மற்றும் லாபத்தை ஈர்க்கக்கூடியது. ஆனால் குடியிருப்பு வீடுகளுக்கு இந்த மனை பொதுவாகப் பரிந்துரைக்கப் படுவதில்லை. ஏனெனில் இது ஆக்கிரமிப்பு மற்றும் அதிக ஆற்றல் (Dominant energy) கொண்டதாக இருக்கும்.

மாறாக, முன்புறம் குறுகியும், பின்புறம் விரிந்தும் இருக்கும் ‘கோமுக மனை’ (பசுவின் முகம் போன்றது). அதாவது வாஸ்து சாஸ்திரத்தில், பசுவின் முகம் போன்று முன்பக்கம் குறுகலாகவும், பின்பக்கம் அகலமாகவும் இருக்கும் மனைகள் கோமுகம் மனை (கோமுகி மனை) என்று அழைக்கப்படுகின்றன. குடும்பங்களுக்கு மிகவும் மங்களகரமானது என கருதப்படுகிறது. இது செல்வத்தை சேமித்து வைக்கும் தன்மையை கொண்டது. மேலும் வணிக நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கு இந்த மனைகள் மிக உகந்ததாகக் கருதப்படுகின்றன.

மனையடி சாஸ்திரம் - வாஸ்து சாஸ்திரம்
மனையடி சாஸ்திரம் - வாஸ்து சாஸ்திரம் AI Image

மனையின் வடக்கு அல்லது கிழக்கு திசைகளில் சாலை அமைந்து, இந்த வடிவம் அமைந்தால் மிகுந்த செல்வ வளத்தையும், நற்பெயரையும் தரும். கோமுகி மனையின் முன்பகுதி குறுகலாக இருந்தாலும், பிரதான நுழைவாயில் வாஸ்து விதிகளின்படி சரியான திசையில் அமைய வேண்டும்.

* அதேபோல் வட்ட வடிவம் (வட்ட மனை) ஆன்மீக ரீதியில் உயர்ந்தது என்றாலும், தனி மனிதர்களின் குடியிருப்புக்கு இது உகந்ததல்ல. இது வீட்டில் வசிப்பவர்களுக்குத் தடைகளையும், துரதிர்ஷ்டத்தையும் தரும் என்று கருதப்படுகிறது. இவை பொதுவாக கோவில்கள் அல்லது தியான மண்டபங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வட்ட வடிவ மனைகளில் மூலைகள் (ஈசானியம், அக்னி, நைருதி, வாயு) சரியாக அமையாது என்பதால், இதில் பஞ்சபூத சக்திகள் சீராக இயங்காது.

நீங்கள் ஒரு வட்ட வடிவமான கட்டடத்தையோ அல்லது பொதுக் கட்டிடங்களான (கோயில், பூங்கா, விளையாட்டு அரங்கு போன்றவை) கட்டடங்களையோ அமைக்க விரும்பினால் மட்டுமே வட்ட மனை உகந்தது.

சதுர அல்லது செவ்வக வடிவ நிலத்தை வாங்குவதே சிறந்தது. வட்ட வடிவ நிலத்தில் வீடு கட்ட நேரிட்டால், அதைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைத்து, நடுப்பகுதி சதுரமாக வருமாறு வீட்டை வடிவமைத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் வறுமை சேர காரணம் இதுதான்! நீங்கள் செய்யும் இந்த வாஸ்து தவறுகளை உடனே மாற்றுங்கள்.
manaiyadi sastram - வாஸ்து சாஸ்திரம்

* முக்கோண மனை (திரிகோண மனை - Triangle plots) ) மற்றும் பலகோண மனைகள் பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின்படி, உகந்தவையாக கருதப்படுவதில்லை.

இந்த வடிவம் எதிர்மறை ஆற்றலை வெளியிடுவதாகவும், குடும்பத்தில் நிதி இழப்பு மற்றும் நிம்மதியின்மையைத் தருவதாகவும் நம்பப்படுகிறது. ஏனெனில் இவற்றில் கூர்மையான மூலைகள் ‘முரண் அதிர்வுகளை’ உருவாக்கி நிம்மதியை குலைக்கக்கூடும் என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

இருப்பினும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வாஸ்து நிபுணரின் ஆலோசனையின்பேரில் சில திருத்தங்களைச் செய்து கட்டடங்களைக் கட்டலாம். முக்கோண மனையின் நடுப்பகுதியில் ஒரு சதுர அல்லது செவ்வக வடிவப் பகுதியை மட்டும் தேர்வு செய்து, மற்ற கூர்மையான முனைகளைச் சுவர்கள் அல்லது தோட்டக்கலை மூலம் பிரிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் செல்வம் செழிக்க வளர்க்க வேண்டிய 20 வாஸ்து செடிகள்!
manaiyadi sastram - வாஸ்து சாஸ்திரம்

முக்கோண மனையில் உள்ள கூர்மையான மூலைகளில் (கோணங்கள்) வாஸ்து தோஷத்தைக் குறைக்க நீரூற்றுகள் (fountains) அல்லது வாஸ்து தாவரங்களை வைக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com