

வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தின்படி 20 வகை செடிகளை குறிப்பிட்ட திசைகளில் வளர்ப்பது எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்கிறது. மூங்கில், பணச் செடி, துளசி, ரப்பர், ஜேட், லட்சுமி கமல் போன்ற தாவரங்கள் செல்வம், ஆரோக்கியம், ஆன்மீக வளர்ச்சி, குடும்ப ஒற்றுமை, மன அமைதி, வணிக வெற்றி ஆகியவற்றை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.
வீட்டில் குறிப்பிட்ட இடத்தில் வாஸ்து சாஸ்திரத்தின்படி செடிகளை வளர்த்தால் வீட்டின் எதிர்மறை ஆற்றல் நீங்கி, மகிழ்ச்சி நிலவி, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
1. மூங்கில் செடி:
வீட்டின் கிழக்கு, தென்கிழக்கு பகுதியில் மூங்கில் செடியை வளர்த்தால் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், புகழ், அமைதி மற்றும் செல்வம் கிடைக்கும். மேலும் பரிசளிக்க மங்களகரமான தாவரமாகவும் கருதப்படுகிறது.
2. பணச் செடி:
வீட்டின் முன் அறையில் தென்கிழக்கு மூலையில் பணச் செடியை வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரத்தின்படி நம்பப்படுகிறது.
3. லாவண்டர் செடி:
வீட்டின் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு திசையில் லாவண்டர் செடியை வளர்ப்பது மன அழுத்தத்தை குறைத்து தளர்ந்த நரம்புகளை அமைதிப்படுத்துகிறது.
4. அமைதி லில்லி:
வீட்டின் தெற்கு, மேற்கு திசையில் வளர்த்தால் வீட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டு, உறங்கும் முறை மேம்பட்டு, கனவுகளை தவிர்க்கலாம்.
5. பாம்பு செடி:
வீட்டில் தெற்கு, கிழக்கு, தென் கிழக்கு திசையில் ஜன்னலோரத்தில் பாம்பு செடியை வைக்கும்போது ஆக்சிஜன் ஓட்டம் மேம்பட்டு நச்சுக்களை அகற்றுகிறது.
6. துளசி:
வீட்டின் கிழக்கு, வடகிழக்கு ,வடக்கு திசையில் புனிதமான துளசி செடியை வைப்பதால் துளசியிலிருந்து அதிக ஆக்சிஜன் வெளிப்பட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
7. கிரிசாந்திமம்:
வீட்டில் ஜன்னலுக்கு அருகிலுள்ள வரவேற்புரையில் கிரிசாந்திமம் வைப்பதால் திருப்தி, புத்திசாலித்தனம் மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்கிறது.
8. ஆர்க்கிட்கள்:
வீட்டின் தென்மேற்கு மூலையில் வெற்றியின் சின்னமான ஆர்கிட்கள் வளர்ப்பதால் நேர்மறை அதிர்வுகளை ஈர்த்து குடும்பத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
9. டேஃபோடில்:
வீட்டின் வடக்கு, வடகிழக்கு திசையில் டேஃபோடில் வைத்து வளர்ப்பதால் குடும்பத்தின் உரிமையாளருக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அதிர்ஷ்டம் தருவதாக நம்பப்படுகிறது.
10. ரப்பர் செடி:
வீட்டின் தென்கிழக்கு திசையில் மங்களகரமான ரப்பர் செடியை நட்டு வளர்த்தால் நிதி, செல்வம், செழிப்பு உள்ளிட்ட வணிக வெற்றியை கொடுக்கும்.
11. ஜேட் செடி:
வீட்டின் வடகிழக்கு திசையில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் ஜேட் செடியை வளர்த்தால் நட்பை வளர்க்கும்.
12. மல்லிகை செடி:
வீட்டிற்குள் தெற்கு நோக்கிய ஜன்னலுக்கு அருகிலும், வீட்டிற்கு வெளியில் கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையிலும் மல்லிகைச் செடியை வளர்ப்பதால் இனிமையான நறுமணத்தால் நொடிப்பொழுதில் மனநிலை மாறி பதட்டம் மன அழுத்தம் குறைகிறது.
13. கற்றாழை:
வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் ஆலுவேரா செடியை வளர்க்க வீட்டின் மகிழ்ச்சி மேம்பட்டு செழிப்பு அதிகரிக்கிறது.
14. கோல்டன் போத்தோஸ்:
வீட்டின் வடகிழக்கு பகுதியைத் தவிர மற்ற இடங்களில் கோல்டன் போத்தோஸ் செடிகளை வளர்க்க எதிர்மறை ஆற்றல் அகன்று இயற்கையான காற்று சுத்திகரிப்பானாக செயல்படுகிறது.
15. பியோனி:
அன்பு மற்றும் நம்பிக்கையின் சின்னமான பியோனி செடியை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைப்பதோடு காதலை வளர்க்கவும், துணைக்கு பரிசு வழங்க சிறந்த செடியாகவும் உள்ளது.
16. சாமந்தி;
வீட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் நுழைவாயிலில் சாமந்திப்பூ செடியை வைத்தால் செல்வம் பெருகும்.
17. செம்பருத்தி:
வாஸ்து செடியான செம்பருத்தியை வீட்டின் வடக்கு ,கிழக்கு திசையில் வைத்தால் மங்கள தோஷத்தை நீக்க உதவுவதோடு துடிப்பான சக்தியையும் பரப்புகிறது.
18. பாக்கு மரம்:
பாக்கு மரத்தை வீட்டின் வடக்கு, வடகிழக்கு திசையில் வைப்பதால் நன்மை கிடைப்பதோடு குடும்ப உறுப்பினர்களுக்கு அமைதியையும் செல்வத்தையும் ஈர்க்கிறது.
19. ரோஜா செடி:
வாஸ்து சாஸ்திரத்தின்படி மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரோஜா செடியை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து வளர்க்க வீட்டில் வசிப்பவர்களின் மன ஆரோக்கியம் மேம்படுகிறது.
20. லட்சுமி கமல்:
லட்சுமி தேவியின் அம்சமாக இருக்கும் லட்சுமி கமல் செடியை வீடு, அலுவலகத்தில் வீடு அல்லது அலுவலகத்தில் வடகிழக்கு திசையில் வைத்து வளர்த்து வந்தால் ஆன்மீக வளர்ச்சி ஏற்பட்டு செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.
மேற்கூறிய செடிகள் அனைத்தும் வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து அன்பு, ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை செல்வ செழிப்பு மகிழ்ச்சி போன்றவற்றை ஈர்ப்பதோடு மன அழுத்தத்தையும் போக்குவதால் அவரவர் வீட்டிற்கு ஏற்ற தாவரங்களை தேர்வு செய்து வளர்க்கலாம்.
சரியான திசையில் சரியான செடிகளை வளர்ப்பதன் மூலம், உங்கள் இல்லம் ஒரு நேர்மறை ஆற்றல் களமாக மாறி, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உணர முடியும்.