
நாம் சில நேரங்களில் மிகவும் மோசமான கனவு என்று சிலவற்றை நினைத்துக்கொண்டு கலங்கி எழுவோம். ஆனால் அதன் பலன்களை பார்த்தால் எதிர்மறையாக இருக்கும். அப்படி எதிர்மறையானவை என்று நினைத்தவை, நேர்மறை சிந்தனையைத் தூண்டும் கனவுகள் என்னென்ன என்று இதில் பார்ப்போம்.
நண்பன் இறந்ததாக கண்டால் சந்தோஷ வார்த்தை வரும். சுடுகாட்டை கனவில் கண்டால் விரைவில் திருமணம் நடக்கும். தாய் சம்பந்தமான பொருள் தன்னை வந்து சேரும்.
பிணத்தைக் கண்டால் விருந்து, போகம், பொருட்பேறு முதலியவை உண்டாகும்.
எதிரிகளின் வேண்டுகோள் கண்டால் வெற்றி.
இறந்த பெரியோரை கனவில் கண்டால் காரியசித்தி, தனலாபம் உண்டாகும். இறந்தவருடன் பேசினதாகக் கண்டால் புகழ்.
தன்னைப் பித்தன் ஆகவும், பித்தன் இடத்தில் இருப்பதாகவும் கண்டால் சம்பத்து உண்டாகும்.
தன்னை சிலர் தூக்குவதாக கண்டால் காரிய சித்தி உண்டாகும்.
மிருகம் மற்றும் பறவைகளின் தலையை தான் உடைத்ததாக கண்டால் புகழ் உண்டாகும்.
தலை முழுகக் கண்டால் ஆபத்து நிவர்த்தி.
கர்ப்பம் கரைந்ததாகக் கண்டால் கஷ்டம் விலகும்.
முகம் வாடி இருந்ததாகக் கண்டால் திரவிய லாபம்.
சிங்கார வனத்தில் வேட்டையாடுவதாக கண்டால் சௌக்கியம்.
ஒருவன் மேல் கோபித்ததாக கண்டால் அவன் நண்பனாவான். தன்னை பிறர் அடித்ததாக கண்டால் அவன் நண்பனாவான்.
எதையோ கண்டு பயந்ததாகக் கண்டால் காரிய சித்தி.
அம்மை வார்த்ததாக கனவில் கண்டால் தன வரவு உண்டாகும்.
அழுகிறதாகக் கண்டால் அபிவிருத்தி. சண்டை இடுவதாக கண்டால் காரிய சித்தி.
தான் இறந்ததாகக் கண்டால் நலம். உறவினர்கள் இறந்ததாகக் கண்டால் பீடை நிவர்த்தி. அவர்களைத் தான் கொன்றதாகக் கண்டால் தன லாபம், உபகாரத்தை அடைவார். தன்னை அவர்கள் கொன்றதாகக் கண்டால் தனலாபம்.
தான் சிறையில் இருப்பதாகக் கனவு கண்டால் அதிகார விருத்தியும் புகழும் உண்டாகும்.
கழுதையைக் கனவில் கண்டால் தீமை ஒழியும்.
தாம்பூலம் கண்டால் தனலாபம். தாம்பூலம் போட்டுக் கொண்டால் விரோதம்.
மலத்தை மிதித்ததாகவும், பூசிக் கொண்டதாகவும் கண்டால் தனலாபம். போன பொருள் மீளும்.
மழை இல்லாமல் இடி மின்னல் கண்டால் வர்த்தகம் பலிக்கும். சுபம்.
குற்றவாளி தன்னை சூரிய ஒளி மூடப்பட்டதாக கண்டால் விடுதலை அடைவான்.
தேவ மாதர்களைக் கண்டால் தன நஷ்டம்.
மொட்டை தலையணை கனவில் கண்டால் செல்வம் உண்டாகும். தேசம் சுபிட்சமாய் இருக்கும்.
ஆதலால் இனிமேல் யாராவது இதுபோல் கனவுகளை கண்டால் பதறி அடித்துக் கொண்டு எழ வேண்டாம். இதனால் நல்லது நடக்கும் என்ற நற்சிந்தனையுடன் எழுவதே நலம் பயக்கும்.