Mistakes that should not be done while cooking in an iron pan!
Mistakes that should not be done while cooking in an iron pan!

இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்!

Published on

இரும்பு பாத்திரங்கள் இந்திய சமையலறைகளில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை நீடித்த மற்றும் நிலையான சூட்டை விநியோகிக்கும் திறன் கொண்டவை. இருப்பினும் இரும்பு பாத்திரங்களை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அவை சேதம் அடையலாம் அல்லது உணவின் சுவையை பாதிக்கலாம். இந்தப் பதிவில் இரும்பு பாத்திரத்தில் சமைக்கும்போது செய்யக்கூடாத சில பொதுவான தவறுகளைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

1. சரியான பராமரிப்பின்மை: இரும்பு பாத்திரங்களை சரியாக பராமரிக்காவிட்டால் அவை துருப்பிடித்து உணவின் சுவையை பாதிக்கும். எனவே, ஒவ்வொரு முறை இரும்பு பாத்திரங்களை பயன்படுத்திய பிறகும் அவற்றை சூடான தண்ணீரில் கழுவி, நன்கு உலர வைக்க வேண்டும். தேவைப்பட்டால் அதன் மேலே எண்ணெய் தடவி துருப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

2. அமில உணவுகளை சமைத்தல்: எலுமிச்சை சாறு, தக்காளி மற்றும் வினிகர் போன்ற அமில உணவுகள் இரும்பு பாத்திரங்களுடன் வேதிவினை புரிந்து உணவிற்கு உலோக சுவையை கொடுக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அமிலம் சார்ந்த உணவுகளை சமைக்க மற்ற பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது. 

3. உணவை அதிக நேரம் சமைப்பது: இரும்பு பாத்திரங்கள் சூட்டை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும். எனவே உணவை அதிக நேரம் சமைத்தால் அது அடிப்பிடித்து, கருகி போகும் வாய்ப்புள்ளது. எனவே சமைக்கும்போது அடிக்கடி கிளறி குறைந்த தீயில் சமைப்பது நல்லது. 

4. தவறான கரண்டிகளைப் பயன்படுத்துதல்: இரும்பு பாத்திரங்களில் உலோக கரண்டிகளைப் பயன்படுத்துவது பாத்திரத்தை கீறி சேதப்படுத்தலாம். இதை தடுப்பதற்கு இரும்பு பாத்திரங்களில் மரம் அல்லது பிளாஸ்டிக் கரண்டிகளை பயன்படுத்தவும். 

இதையும் படியுங்கள்:
இவற்றுக்கு பதில் இவை... வழக்கமான சமையல் பொருட்களை மாற்றினால்?
Mistakes that should not be done while cooking in an iron pan!

5. தவறான சமையல் முறைகள்: இரும்பு பாத்திரங்களை மைக்ரோவேவ் அடுப்புகளில் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அதிக வெப்பத்தில் இரும்பு சமையல் பாத்திரங்கள் சேதமாகும் வாய்ப்புள்ளது. அது உணவின் தரத்தை மோசமாக்கி, உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இரும்பு பாத்திரங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இரும்பு பாத்திரங்கள் நம் வீட்டு சமையலறையில் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், அதை சரியாக பராமரித்து முறையாக பயன்படுத்துவது நல்லது. இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள தவறுகளை நீங்கள் தவிர்ப்பதன் மூலம் இரும்பு பாத்திரங்களை சரியான நிலையில் நீங்கள் வைத்திருக்க முடியும். மேலும், அதன் மூலமாக சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம். 

logo
Kalki Online
kalkionline.com