
தற்போதைய உலகில் எது வேண்டுமானாலும் எப்போதும் நடக்கலாம் என்ற நிலைபாடும் செயல்களும் உள்ளது. விஞ்ஞானம் அபரிமிதமாக வளா்ந்தாலும், அது பலவகையில் தவறான நோக்கத்திற்கே பயன்படுத்தப்படுகிறது.
செல்போன் இல்லாத கைகளே இல்லை. உள்ளங்கையில் உலகம்தான், யாரும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உள்ளத்தின் செயல்பாடுகளில் நல்ல ஒழுக்கமான நிலைபாடுகள் ஒட்டிக்கொள்ள மறுக்கின்றனவே!
நல்ல விஷயங்களைத் தவிர பல வகையிலும் சமுதாய சீரழிவிற்கான விஷயங்களும் மலிந்து கிடப்பதும், அதனால் இளைஞா் முதல் பொியவர் வரை அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் நல்லதல்ல.
வெளியில் தொியக்கூடாத நான்கு சுவற்றிற்குள் நடக்கக்கூடிய பல விஷயங்கள் விஷம்போல பரவி வருகிறது. போலியான செய்திகளும் சோஷியல் மீடியாவில் வலம் வருவதும் வாடிக்கையாகிவிட்டது.
பல தலைவர்கள், இளைஞர்களின் எதிா்காலம் பற்றியும், அவனால் இந்த உலகம் மேன்மை அடையப்போகிறது என்றெல்லாம் தனது கருத்தாக சொல்லிவந்துள்ளாா்கள்.
பொதுவாகவே செல்போன் பலவகையிலும் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டாலும், அதன் நல்ல செயல்பாடுகள் குறைவுதான். வாட்ஸ்ஆப், முகநூல், இன்ஸ்டா, போன்ற நவீனங்கள் வந்தாலும் அவை நல்ல விஷயங்களுக்கு பயன்படாமல் தவறான விஷயங்களுக்கே பயன்படுவது அபாயத்திலும் அபாயமே!
இதனால் பாதிக்கப்படுவது பதின்ம வயது இருபாலர்களுமே. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் சமுதாய அக்கறை இல்லாமல் வளா்ந்து வருவதும் ஒரு வகையில் ஆபத்துதான்.
மாணவர்கள் முடியை ஒழுங்காக வெட்டிக்கொள்ளாமல் வருவது, ஆசிாியர்கள், பெற்றோா்கள், பொியவர்களுக்கு, மதிப்பு கொடுக்காதது இப்படி பட்டியல் நீளும். மேலும் போதை வஸ்துகள், கூடா நட்புகள், சமுதாயத்தின் மீது மதிப்பு காட்டாத தன்மை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
தற்கால இளைஞன் தன்னுடைய தலைவனாக, சினிமா நடிகர்களை நம்புகிறான், அந்த அளவிற்கு அவர்களால் சொல்லப் படும் நல்ல கருத்துகளை உள்வாங்காமல் படிப்பிலும் நாட்டம் காட்டாமல் சமுதாய அவலங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தானும் கெட்டு தன்னைச் சாா்ந்தவர்களுக்கும் பாரமாக ஆகிவிடுகிறான்.
பாலியல் தொல்லைக்கு தண்டனை உண்டு எனத்தொிந்தும் மேலும் மேலும் தவறுசெய்கிறான். ஏன் வயதானவர்கள், பள்ளி ஆசிாியர்கள், அரசியல் வாதிகள், போலி முகம் கொண்ட சாமியாா்கள் என சிலரிடம் பலவகையிலும் பாலியன் அரக்கன் புகுந்து விளையாடுகிறான்.
அதற்கு பதின்ம வயது தொடங்கும் இளைஞர்களும் விதிவிலக்கல்ல. அதேபோல லஞ்ச லாவண்யமும் ஊழலும் மடைதிறந்த வெள்ளமாய் ஓடுவதும் அச்சம் அடைய வைக்கிறது.
நல்ல பல ஒழுக்கமான செயல்களை கற்றுக்கொள்ள வேண்டிய பள்ளி கல்லூாி படிப்புகளில் நாட்டம் குறைந்து சமுதாய அவலங்களுக்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சீரழிந்து போகிறான்.
சட்டம் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும், புத்தன், ஏசு, காந்தி, பாரதியாா் அம்பேத்காா் போன்ற பல நல்ல தலைவர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களையும் அவன் கேட்கவில்லை. பலவேறு நிலையில் கஷ்டப்பட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் சொல்லிய நல்ல விஷயங்களையும் தற்கால இளைஞன் உள் வாங்கிக் கொள்ளவில்லை. மாணவப்பருவத்தில் கற்றுக் கொள்வதை அவன் கற்றுக்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக தன் வாழ்க்கைப்பாதையை வடிவமைத்துக் கொள்கிறான்.
பொிய பொிய ஆளுமை மிக்க தலைவர்கள் தன்னுடைய சுயலாபத்திற்காக இளைஞர்களை தவறான பாதைக்கு ஆளாக்கிவருவதும் நல்லதல்ல.
இதைத்தான் விவேகானந்தர் இளைஞர்களுக்கான அறிவுறையாக "நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்" (ஆனால் முயற்சிதேவை) என விவேகானந்தர் சொல்லியுள்ளாா்.
பல்வேறு தலைவர்கள் அறிஞர்கள் விட்டுச்சென்ற நல்ல அறிவுரைகளை கடைபிடித்து சமுதாயத்தில் பொறுப்பு மிக்க இளைஞனாக மாற்றிக்கொள். புடம் போட்ட தங்கமாய், வைரமாய், வைடூரியமாய், நீ பரவலாக உயர்ந்த உன்னத நிலைக்கு வா! உன்னால் முடியும் என நீ நினைத்தால் முடியும். முடியாதென நினைத்தால் முடியாது. முடியும் உன்னாலும் முடியும்! தன்னம்பிக்கை தளராதே!