
சாப்பிடும் போது ஒரு பக்கம் போன்ல யூடியூப் வீடியோ ஓடிட்டு இருக்கும், இன்னொரு பக்கம் டிவி. இது நம்மில் பலரோட, குறிப்பா இளைஞர்களோட டெய்லி ரொட்டீனாகவே மாறிடுச்சு. டிவி, செல்போனைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது ஒரு சாதாரண பழக்கம் மாதிரி தெரியலாம். ஆனா, இந்த ‘சின்ன’ பழக்கத்தால நம்ம உடம்புக்கும் மனசுக்கும் எவ்வளவு பெரிய பாதிப்பு வருதுன்னு நாம என்னைக்காவது யோசிச்சுப் பார்த்திருக்கோமா? வாங்க, அதைப் பத்தி கொஞ்சம் விரிவா பார்க்கலாம்.
நாம ஒரு விஷயத்த நல்லா புரிஞ்சுக்கணும். நம்ம கவனம் எங்க இருக்கோ, அங்கதான் நம்ம மூளையும் வேலை செய்யும். நீங்க டிவி அல்லது போன்ல மூழ்கி இருக்கும்போது, நீங்க என்ன சாப்பிடுறீங்க, எவ்வளவு சாப்பிடுறீங்கங்கிற கணக்கே உங்க மூளைக்கு போகாது. இதனால, வயிறு நிறைஞ்ச பிறகும் நீங்க சாப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க.
சில ஆய்வுகள் என்ன சொல்லுதுன்னா, இப்படி சாப்பிடுறவங்க சாதாரணமா சாப்பிடுறவங்களை விட 10% அதிகமா சாப்பிடுறாங்களாம். அதுமட்டுமில்லாம, கவனமில்லாம சாப்பிடுறதால 25% வரைக்கும் அதிகமான கலோரிகளும் உடம்புல சேருதுன்னு சொல்றாங்க. இது நேரா உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
வயிறு பண்ற பஞ்சாயத்து:
சாப்பிடுறதுக்கு முன்னாடியே, நம்ம மூளை நம்ம வயித்துக்கு 'டேய், சாப்பாடு வருது, ரெடியா இரு'னு சில சிக்னல்களை அனுப்பி, செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்க வைக்கும். ஆனா, நம்ம கவனம் முழுக்க ஸ்கிரீன்ல இருக்கும்போது, இந்த சிக்னல் சரியா போய்ச் சேராது. இதனால, உணவு சரியா ஜீரணமாகாம, செரிமானக் கோளாறு, கேஸ், வயிறு உப்பசம் மாதிரியான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். சாப்பாட்டை சரியா மென்னு சாப்பிட மாட்டோம், வேகவேகமா முழுங்குவோம். இதுவும் செரிமானப் பிரச்சனைக்கு ஒரு முக்கியக் காரணம்.
சாப்பாட்டை ரசிக்கிறதே இல்ல:
சாப்பாடுங்கிறது வெறும் வயிறு நிரப்புற விஷயம் மட்டுமில்ல. அது ஒரு அனுபவம். அதோட நிறம், மணம், சுவை எல்லாத்தையும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடணும். ஆனா, போனைப் பார்த்துட்டே சாப்பிடும்போது, தட்டுல என்ன இருக்குன்னு கூட பார்க்காம, எதையோ அள்ளிப் போட்டுட்டு போற மாதிரிதான் இருக்கும். இந்த பழக்கம், உணவு மேல இருக்கிற மரியாதையைக் குறைக்கிறது மட்டுமில்லாம, நம்ம மனசுக்கும் ஒருவிதமான திருப்தியின்மையைக் கொடுக்கும்.
அதனால, இனி சாப்பிடும்போது, அந்த போனையோ, டிவி ரிமோட்டையோ ஒரு அரை மணி நேரம் தள்ளி வைங்க. உங்க குடும்பத்தோட உட்கார்ந்து பேசிட்டே சாப்பிடுங்க. தனியா சாப்பிட்டாலும், சாப்பாட்டை மட்டும் கவனிச்சு, ரசிச்சு சாப்பிடுங்க. இந்த ஒரு சின்ன மாற்றத்தை செஞ்சு பாருங்க, உங்க உடல் ஆரோக்கியம் மட்டுமில்ல, மன ஆரோக்கியமும் மேம்படுறதை நீங்களே உணர்வீங்க. நம்ம உடம்பு ஒரு கோயில்னா, சாப்பாடுதான் அதுக்கான பிரசாதம். அதை மரியாதையோட சாப்பிடுவோம், ஆரோக்கியமா வாழ்வோம்.