ஓட்டு வீடு டூ அல்ட்ரா மாடர்ன் சீலிங்: உங்கள் வீட்டை அரண்மனையாக மாற்றும் 10 மாஸ் டிசைன்கள்!

Home Interior Design - சீலிங் டிசைன்கள்
Home Interior Design - சீலிங் டிசைன்கள்AI Image
Updated on

ஒரு காலத்தில், “வசதியான வீடு” என்றால் அழகான ஓடுகளாலான இரட்டைக் கோப்பு வீடு மிகவும் பிரசித்தியாக இருந்தது. வீட்டில் உள்ள தூண்களும் சட்டங்களும் அந்த வீட்டின் அழகையும் ஆடம்பரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.

ஓட்டு வீடுகள் குளிர்ச்சிக்கும் நல்ல காற்றோட்டத்துக்கும் ஏற்றவையாக இருந்தன, மேலும் குடும்ப ஆரோக்கியத்துக்கும் மேம்படுத்தும் வகையில் இருந்தது.

காலப்போக்கில் ஓட்டு வீடுகள் மெல்ல காணாமல் போனது. மக்கள் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் கலவை மூலம் கான்கிரிங் மேல்தளம் கொண்ட (மச்சு வீடு) மாடி வீடுகளில் விருப்பம் கொண்டனர். வெள்ளை சுண்ணாம்பு பூச்சை மறந்து அழகிய வண்ணப்பூச்சுகள் தேர்ந்தெடுக்க, அவை அறைகளுக்கு அழகும் புத்துணர்ச்சியையும் கொடுத்தது.

ஆனால் இன்று, வீட்டின் உள் அறைகளின் அமைப்பில் Interior Design மிகவும் டிரெண்ட் ஆகிவிட்டது. நான்கு சுவர்கள் இருந்த பழைய நிலை தற்போது மாற்றப்பட்டு, மேற்க்கூரை என்பது ஐந்தாவது அலங்கார சுவராக பயன்படுத்தப்படுகிறது.

அதன் பின்னர் பழைய சினிமாப் படங்களில் பார்த்த பல வகை Sealling Design கொண்ட நவீன கூரை (sealing) வடிவமைப்புகள் பல மாடல்களில் கிடைக்க தொடங்கின: அவற்றில் சில...

ஹை போர்டு (High board) – பல ஆண்டுகள் நீடிக்கும் வலிமை வாய்ந்தது.

POP (Plaster of Paris) – வளைந்த வடிவங்கள் மற்றும் அழகான டிசைன்கள் எளிதாக செய்யலாம்.

PVC பேனல்கள் – ஈரப்பதம் தாக்காது, பராமரிப்பு குறைவு.

மரப் பேனல்கள் – வீட்டிற்கு வெப்பமான மற்றும் இயற்கையான தோற்றம் தரும்.

இந்த பொருட்களை பயன்படுத்தி, இன்றைய கட்டிட வடிவமைப் பாளர்கள் அழகான சீலிங்களை உருவாக்குகிறார்கள். இது வீட்டில் உள்ள அறைகளுக்கு stylish மற்றும் premium look கொடுக்கிறது.

அவற்றில் பிரபலமான சில வடிவங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்

1. மென்மையான பழுப்பு நிற ஹை போர்டு அடுக்கு சீலிங்

சிறிய வீடுகளில், சிறிய விளக்குகள் பொருத்திய ஹை போர்டு அடுக்கு சீலிங், அறையை வெளிச்சமாகவும், அகலமாகவும் காட்டும்.

2. ஸ்கை ப்ளூ வளைந்த சீலிங்

குழந்தைகள் அறைகள் மற்றும் மாஸ்டர் படுக்கையறைகளுக்கு ஏற்றது. வளைந்த வடிவங்களில் பொருத்தப்பட்ட LED ஸ்ட்ரிப் விளக்குகள் வான நீலத்தில் உள்ள சீலிங் பார்க்க பிரமிக்க வைக்கும்.

3. சாம்பல் நிற தட்டு சீலிங்

சீரான மட்டத்தில் LED ஸ்ட்ரிப் விளக்குகள் இணைந்த இந்த Design, living room ஐ அழகாகக் காட்டுகிறது.

4. மர பலகைகள் + வெளிர் பீச் நிறம் கொண்ட சீலிங்

மரத்தால் செய்யப்பட்ட உயர் தரத்தையும் ஆடம்பரத் தோற்றமும் தரும். வெளிர் பீச் நிறம் அறையில் அலங்காரம் மற்றும் வெளிச்சம் தரும் வகையில் இருக்கும்.

5. கடற்படை நிறம் கூடிய தீவு வடிவ சீலிங்

மையப் பகுதி நீல, வெளிப்புற பகுதி வெளிர். PVC பேனல்கள் சேர்க்கப்பட்டால் அறைக்கு நவீன, தனித்துவமான மேற்புறம் ஒரு தீவு போன்ற தோற்றம் கிடைக்கும்.

6. மர பீம்களுடன் கூடிய வெள்ளை நிற சீலிங்

மர பீம் கூரைகள் அல்லது மர டிரிம்களைப் பயன்படுத்தி வெள்ளை நிறக் சீலிங் design செய்த இந்த ஹால் சீலிங் வெள்ளை வண்ண வடிவமைப்பு நல்ல ரிச் லுக்கை தருகிறது.

7. Double colour sealing இரட்டை வண்ண சீலிங் பார்டர் வடிவமைப்பு

இரட்டை நிற வண்ண கலவை மையத்தை வெள்ளை அல்லது பழுப்பு நிறமாக வைத்து, ஓரத்தில் சாம்பல் அல்லது ஆலிவ் போன்ற அடர் நிறத்தைப் பயன்படுத்திய இந்த இரட்டை வண்ண சீலிங் உங்கள் open living hall அழகான ரம்மியமான தோற்றம் கொண்டதாகவும் அடுக்குகளாகவும் தோற்றமளிக்கச் செய்கிறது.

படுக்கையறைக்கு அமைதி தரும் நவீன சீலிங் டிசைன்கள்:

Home Interior Design - சீலிங் டிசைன்கள்
Home Interior Design - சீலிங் டிசைன்கள்AI Image

8. லாவெண்டர் நிறத்தில் LED விளக்குடன் கூடிய சீலிங்

தட்டு அல்லது அடுக்கு ‘Designல் லாவெண்டர் நிறத்தில் LED விளக்குடன் கூடிய சீலிங் படுக்கையறைக்கு ஏற்றது குறைவாக ஒளி தருவதாயும் புதிய தோற்றத்துடனும் காட்சி தரும்.

9. தனித்துவமான மண் போன்ற ஆலிவ் பச்செ வண்ண சீலிங் Design

மண் போன்ற ஆலிவ் பச்சை நிற சீலிங் ஹை போர்டு அல்லது நுட்பமான POP வடிவங்களில் செய்யப்பட்ட சீலிங்களில் ஆலிவ் பச்சை நிறம் அழகாக இருக்கும். இது மர சட்டங்களுடன் இயற்கை

சுற்றுச்சூழலுடன் காட்சியளிக்கும். சீலிங்க்கு ஆலிவ் பச்சை நிறம் பெயிண்ட் செய்யும் போது study room & living room அமைதியான, சாந்தமான உணர்வை தரும்.

10. ஆடம்பர உலோக வண்ண கூரை

முழு கூரை வண்ணம் செய்யாமல், பேனல்கள்/ஓரங்களில் பயன்படுத்தி, ஷாம்பெயின் தங்கம் அல்லது மென்மையான வெள்ளி வண்ண டோன்கள் கொண்டு அமைத்த பெரிய ஹால் சீலிங் ஆடம்பர வீடுகளில் உள் தோற்றத்தை மேம்படுத்தும்.

நவீன சீலிங் வடிவங்கள் வீட்டிற்கு அழகும், வசதியும் தருவதுடன், உள் அறைகளுக்கு புதிய உயிரூட்டும் தன்மையையும் கொண்டுள்ளன. வண்ணம், வடிவம், பொருள் மற்றும் விளக்குகள் அனைத்தும் சேர்ந்து வீட்டின் மொத்த அழகை உயர்த்துகின்றன.

logo
Kalki Online
kalkionline.com