குரங்குத் தொல்லை தாங்கலையா? அடிக்க வேண்டாம், விரட்ட வேண்டாம்... இந்த 5 ட்ரிக்ஸ் போதும்!

Monkey
Monkey
Published on

"குரங்கு கையில் பூமாலை"ன்னு பழமொழி கேள்விப்பட்டிருப்போம். ஆனா, நிஜத்துல நம்ம வீட்டுத் தோட்டத்துல குரங்கு புகுந்தா, அது பூமாலை இல்ல, போர்க்களம் தான். காய போட்டுருக்க துணியைக் கிழிக்கிறது, ஜன்னல் வழியா உள்ள வந்து பிஸ்கட் பாக்கெட்டைத் தூக்கிட்டுப் போறது, செடி கொடிகளை நாசம் பண்றதுனு இவங்க பண்ற லூட்டிக்கு அளவே இல்ல. 

பல ஊர்களில் இது ஒரு பெரிய தலைவலியாவே மாறிடுச்சு. பாவம் வாயில்லா ஜீவன் என்று நினைத்தாலும், அவை செய்யும் சேட்டை நம் பொறுமையைச் சோதிக்கும். அவங்களை அடிக்காம, துன்புறுத்தாம, அதே சமயம் நம்ம வீட்டை விட்டு எப்படிப் பாதுகாப்பா தள்ளி வைப்பது? வாங்க பார்க்கலாம்.

சாப்பாட்டை மறைச்சா... பாதி பிரச்சனை காலி!

குரங்குகள் நம்ம வீட்டுக்கு விருந்தாளி மாதிரி வர்றதுக்கு முக்கியக் காரணமே 'சாப்பாடு' தான். குப்பைத் தொட்டியைத் திறந்தே வைக்காதீங்க; அதுதான் அவங்களுக்கு இலவச பஃபே சாப்பாடு. ஜன்னல் ஓரத்துல பழங்களையோ, தின்பண்டங்களையோ வெக்காதீங்க. அவங்களுக்கு ஈஸியா சாப்பாடு கிடைச்சா, உங்க வீட்டை அவங்க நிரந்தர இருப்பிடமா மாத்திடுவாங்க. தென்னை மரம், மாமரம் வைத்திருப்பவர்கள், காய்களை முற்றியவுடன் பறித்துவிடுவது நல்லது.

பயமுறுத்தும் உத்திகள்: குரங்குகளுக்கு 'கருங்குரங்கு' என்றால் கொள்ளைப் பயம். இதை நாம் சாதகமாக்கிக்கொள்ளலாம். பெரிய கருங்குரங்கின் படங்களையோ அல்லது பொம்மைகளையோ மாடியில் அல்லது தோட்டத்தில் ஆங்காங்கே கட்டி வைக்கலாம். 

தூரத்தில் இருந்து பார்க்கும் குரங்குகள், "ஓ! இங்க பெரிய டான் இருக்காரு" என்று நினைத்துக்கொண்டு அந்தப் பக்கம் வரத் தயங்கும். அதேபோல, குரங்குகள் வரும்போது பட்டாசு வெடிப்பது அல்லது டிரம்ஸ் அடிப்பது போன்ற பலத்த சத்தம் எழுப்பினாலும் அவை ஓடிவிடும்.

இதையும் படியுங்கள்:
விலங்குகள் பற்றி விந்தையான தகவல்கள்!
Monkey

வாசனையும், தண்ணீரும்!

நமக்குச் சுவையாக இருக்கும் சில வாசனைகள், குரங்குகளுக்கு அலர்ஜி. உதாரணமாக, கருவாட்டு வாசனை அவங்களுக்குப் பிடிக்காது. கருவாட்டுத் துண்டுகளை ஒரு பையில் கட்டித் தொங்கவிடலாம். அல்லது, அவ்வப்போது தோட்டத்தில் காய்ந்த மிளகாயை எரித்துப் புகை மூட்டம் போட்டாலும், அந்த நெடிக்கு அவை ஓடிவிடும்.

இன்னொரு சிறந்த வழி 'தண்ணீர்'. குரங்குகள் வரும்போது, ஓஸ் பைப் மூலம் தண்ணீரைத் திடீரென பீய்ச்சி அடித்தால், அந்தத் திடீர் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தெறித்து ஓடிவிடும். இது அவற்றுக்குக் காயத்தை ஏற்படுத்தாது, ஆனால் பயத்தை உண்டாக்கும்.

இதையும் படியுங்கள்:
குரங்குகள் திருடி சென்ற நகைகள்… நடந்தது எங்கே?
Monkey

குரங்குகள் மிகவும் புத்திசாலியான விலங்குகள். ஒரே ட்ரிக்கை தினமும் பண்ணா, "இவன் நம்மள ஏமாத்துறான்"னு கண்டுபிடிச்சுடும். அதனால, மேலே சொன்ன முறைகளை மாத்தி மாத்தி முயற்சி செய்யுங்க. முக்கியமா, அவங்களைப் பார்த்தா முறைக்கிறதோ, கல்லெறிவதோ கூடாது; அது அவங்களை இன்னும் கோபப்படுத்தும். நம்ம எல்லைகளைப் பாதுகாத்துக்கிட்டாலே, குரங்குகள் தானா வழிமாறிப் போயிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com