வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதை இளைஞர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் ஓர் இலக்காக வைத்திருப்பார்கள். அதிலும் ஒரு சிலருக்கு அங்கேயே குடியேறி விடுவோமா என்ற எண்ணம் கூட வரும். அப்படி இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் நாடுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சிறந்த குடியேற்றக் கொள்கைகள், உயர்ந்த வாழ்க்கைத் தரம் மற்றும் சிறந்த பொதுச் சேவைகள் ஆகியவற்றின் காரணமாக கனடா பெரும்பாலும் இந்திய வம்சாவளிகளின் தேர்வு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எக்ஸ்பிரஸ் நுழைவு அமைப்பு (Express Entry system) போன்ற பல்வேறு குடியேற்ற திட்டங்களை இந்த நாடு வழங்குகிறது. இது திறமையான தொழிலாளர்கள் நிரந்தர குடியிருப்பு பெறுவதை எளிதாக்குகிறது. கூடுதலாக, கனடா இலவச சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குகிறது. இது பிற நாட்டினருக்கு ஒரு ஈர்க்கும் விஷயமாக அமைந்துள்ளது.
இந்தியர்களுக்கு, குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத் துறைகளில் உள்ளவர்களுக்கு அமெரிக்கா ஒரு பிரபலமான இடமாக உள்ளது. இந்த நாட்டில், ஏராளமான வேலை வாய்ப்புகள், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கலாச்சார சூழலில் வாழும் அனுபவங்கள் கிடைக்கின்றன. H-1B விசா திட்டத்தால், திறமையான இந்திய தொழில் வல்லுநர்கள் அமெரிக்காவில் பணிபுரிய ஒரு பொதுவான வழியாக உள்ளது. இருப்பினும் இத்தருணத்தில் இந்த விசாவை பெற பல இந்தியர்களுக்கு குதிரைக் கொம்பாகவும் உள்ளது.
ஆஸ்திரேலியா, அதன் உயர் வாழ்க்கைத் தரம், சிறந்த சுகாதார அமைப்பு மற்றும் வலுவான பொருளாதாரம் ஆகியவற்றால் இந்திய வம்சாவளிகள் அனைவரையும் பெரிதும் ஈர்க்கிறது. நாட்டின் பொதுத் திறன்மிகு இடம்பெயர்வுத் திட்டம் (General Skilled Migration program) இங்கு வரும் திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வாழ்விடம் அமைகிறது. இது நீண்டகாலமாக குடியேற விரும்புவோருக்கு ஒரு கவர்ச்சியான விருப்பமாக அமைகிறது. பன்முக கலாச்சார சமூகம் (multicultural society ) மற்றும் சாதகமான தட்ப வெப்பநிலை (favorable climate) ஆகியவை அதன் கவர்ச்சியை மேலும் கூட்டுகிறது.
UK மற்றொரு விருப்பமான இடமாகும். குறிப்பாக மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு தான் காரணம்; இந்த நாடு, மதிப்புமிக்க பல்கலைக்கழகங்கள், ஒரு வலுவான வேலை வாய்ப்பு மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை சேர்த்து வழங்குகிறது. இங்கு பின்பற்றப்படும் புதிய புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு (new points-based immigration system) திறமையான தொழிலாளர்கள் இங்கிலாந்திற்கு இடம்பெயர்வதை எளிதாக்கியுள்ளது. கூடுதலாக, அங்கு ஏற்கனவே வசிக்கும் பெரிய இந்திய சமூகத்தின் கூட்டம், புதிதாக வருபவர்களுக்கு ஒரு நல்ல உணர்வையும் ஆதரவையும் வழங்குகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபி, இந்தியாவிற்கு அருகாமையில் இருப்பதால், வரி இல்லாத வருமானம் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறை வழங்குவதன் காரணமாக இந்தியர்களுக்கு பிரபலமான தேர்வாக உள்ளது. கட்டுமானம் (construction), விருந்தோம்பல் (hospitality) மற்றும் நிதி (finance) போன்ற துறைகளில் இந்த நாடு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. வெளிநாட்டவர்களுக்கு ஏற்ற சூழல் மற்றும் நவீன உள்கட்டமைப்பு காரணமாக இந்திய தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான கவர்ச்சிகரமான இடமாக இது அமைகிறது.
இப்படி பொருளாதார வாய்ப்புகள், உயர் வாழ்க்கைத் தரம், சாதகமான குடியேற்றக் கொள்கைகள், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவுடனான அருகாமை ஆகியவற்றின் சேர்க்கையானது இந்த நாடுகள் இந்திய மக்களுக்கு கவர்ச்சிகரமான இடமாக அமைகிறது. ஒவ்வொரு நாடும் இந்திய புலம்பெயர்ந்தோரின் பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் தனித்துவமான பலன்களை வழங்குகிறது. வெளிநாட்டில் புதிய வாழ்க்கையை உருவாக்க விரும்புவோருக்கு இதுவே, சிறந்த தேர்வுகளாக தீர்மானிக்க வைக்கிறது.