Music that calms the mind
M.S.subbulakshmi

மனதை அமைதிப்படுத்தி, வாழ்க்கையை வளப்படுத்தும் இசை!

Published on

சை என்பது நம் மனதை மயக்குகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. வாழ்க்கையை சுவாரசியப்படுத்துகிறது. அத்துடன் நம் வாழ்க்கையையும் வளப்படுத்துகிறது. இசை வடமொழியில் ‘சங்கீதம்’ என வழங்கப்படுகிறது. பழந்தமிழர்கள் இசையை 'பண்' என்று குறிப்பிட்டனர். வடமொழியில் இசையை 'நாதம்' என்றும் குறிப்பிடுவார்கள். பண்டைய காலத்தில் இசையை 'சிரவண கலை' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இசையின் பன்முகத்தன்மை: இசை என்பது நம்முடைய கலாசாரத்தில் ஒரு அங்கமாகவே இருக்கிறது. திரை இசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, கஜல், நாட்டுப்புறப் பாடல்கள், கிராமிய இசை, பறை என பல வகையான இசைகள் நம் கலாசாரத்தில் ஊறி போய் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மழை, குளிர்கால வீட்டு மருத்துவர்: சீதளப் பிரச்னைகளை விரட்டும் 10 உணவுகள்!
Music that calms the mind

குழந்தை பிறந்தவுடன் பாடும் தாலாட்டு தொடங்கி இறப்பின்பொழுது அடிக்கும் பறை இசை வரை ஒவ்வொரு கட்டத்திலும் நாம் இசையுடன்தான் பயணிக்கிறோம். தாலாட்டு, மங்கல இசை, குத்துப் பாட்டு, மெல்லிசை, கர்நாடக இசை, சினிமா பாடல்கள், இந்துஸ்தானி, கஜல் என பல வகையான இசை வடிவங்கள் தலைமுறை தலைமுறையாக நம் உயிரில் கலந்து உயிர்ப்புடன் இருந்து வருகின்றன.

இசை உலகில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா: இசையை முழுவதுமாக சுவாசித்தவர், இசையை தியானித்தவர், இசையோடு இரண்டறக் கலந்தவரான எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றி நினையாமல் இசை முழுமை அடையாது. சங்கீத உலகின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள். இவருடைய தெய்வீகக் குரல் அனைவரையும் பாம்பு மகுடிக்கு கட்டுப்படுவது போல் கட்டுப்பட வைத்திருந்தது.

இசை சாம்ராஜ்யத்தின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் இவர். இசைப் பயணத்தில் இவருடைய உயரத்தை இன்று வரை எவராலும் தொட முடியவில்லை என்பதுதான் உண்மை. எம்.எஸ்.அம்மா அவர்களை குறிப்பிடும்போது அவரது கணவர் சதாசிவம் அவர்களை நினைவு கூறாமல் இருக்க முடியாது. சங்கீதத்திலும் சமூகத்திலும் எம்.எஸ்.அம்மா சிறப்பு பெற பெரும் பங்காற்றியவர் இவர்.

இதையும் படியுங்கள்:
AI உலகிற்கு குழந்தைகளை தயார் செய்ய பெற்றோர்களுக்கான 5 வழிகாட்டுதல்கள்!
Music that calms the mind

இசைக்காக எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் வாங்காத விருது இல்லை; செல்லாத நாடு இல்லை; எங்கும் அவருடைய புகழ் கொடியை இசையில்  நாட்டியவர் இவர். மனம் ஒன்றி மெய் மறந்து பாடும் இவரை இசை உள்ளதால் என்றுமே மறக்க முடியாது.

உலக அளவில் பிரபலமான இசை வகைகள்: ஒவ்வொரு நாடும் தனது கலாசாரம் மற்றும் மரபுக்கு ஏற்றவாறு தனித்துவமான இசை வகைகளை உருவாக்கி அதைக் கேட்டு மகிழ்கின்றன. பாப் மியூசிக் (Pop music), டிஸ்கோ (Disco) மியூசிக், ராக் மியூசிக் (Rock music), சிம்பொனி (Symphony), சோல் மியூசிக் (Soul music), ஃபோக் மியூசிக் (Folk music), ஹெவி மெட்டல் (Heavy metal), ஹார்டு ராக் (Hard rock) என வகை வகையான இசைகள் உலக அளவில் பிரபலமாக உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com