ஏசி தேவையில்லை.. கரண்ட் பில் கவலையில்லை! கோடையிலும் வீட்டை 'ஜில்' என்று மாற்ற எளிய வழிகள்!

natural-cooling-tips
natural-cooling-tips
Published on

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க ஏ.சி. போட்டு வீட்டை ஜில் என ஆக்குவது எல்லாரும் வாய்க்காது. அப்படியே வீட்டில் இருந்தாலும் மின்பற்றாக்குறை பிரச்னையும் அது ஓட விடாமல் செய்து விடுகின்றன. குறிப்பாக கோடை காலத்தில் பிரச்னை மிகவும் அதிகம், என்பதால் சிறிது முயற்சி செய்தால் வெயில் வாட்டாமல் வீட்டை ஜிலு ஜிலு என ஆக்கலாம்.

அதற்கு சில வழிகள்.

வெயில் நாட்களில் மொட்டை மாடியில் சுண்ணாம்பு அடிக்கலாம். வெயிலின் உக்கிரத்தை அப்படியே பிரதிபலித்துவிடும் தன்மை கொண்டது வெள்ளை நிறம். அதனால் வீட்டுக்குள் வெப்பம் கசியாது. இதற்கென பிரத்தியேக பெயின்ட்களும் இப்போது வந்து விட்டன.

மாலை நேரத்தில் மொட்டைமாடியில் தண்ணீர் தெளித்துவிடலாம்.

பகல் முழுக்க காய்ந்த வெயிலின் கடுமையை அது உறிஞ்சிக் கொள்ளும்.

மொட்டை மாடியில் கீற்றுப் பந்தல் போடலாம். இதன் மூலம் மொட்டை மாடி கான்கிரீட்டில் வெயில்நேரடியாக படுவது தடுக்கப்படும். இதில் இன்னொரு நன்மையும் உண்டு. இரவில் பவர் கட் ஆகி வீட்டுக்குள் தூங்க முடியாது போனால் இந்த பந்தலுக்குள் கொசு வலையை கட்டிக்கொண்டு நிம்மதியாக தூங்கலாம்.

பகல் முழுக்க வெயிலில் காய்ந்த மொட்டை மாடி தரை ஏதோ கேஸ் ஸ்டவ்போல தகிக்கும். அதில் படுத்து தூங்க முடியாது. ஆனால் கீற்றுப் பந்தல் இருந்தால் தூங்கலாம்.

இதையும் படியுங்கள்:
விட்டுக்கொடுத்தலும் புரிதலும்: காலங்கள் கடந்தும் நிலைக்கும் உறவுகளின் ரகசியம்!
natural-cooling-tips

மொட்டை மாடியில் மணல் பரப்பி தோட்டம் அமைப்பது இப்போது பல ஊர்களில் பிரபலமாய் இருக்கிறது. இப்படி தோட்டம் அமைப்பதால் அந்த செடிகளுக்கு தண்ணீர் விடுவோம்.

அதனால் பரவும் ஈரப்பதம் வெயிலின் கடுமையை குறைக்கும்.

வீட்டின் சுற்றுப்புறம்தான் வீட்டை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

இருக்கும் மொத்த இடத்தையும் வளைத்து வீடு கட்டி விடுகிறார்கள்.

இப்போது தோட்டம் அமைக்கவோ மரங்கள் நடவோ சிலருக்கு மனசில்லை. இருக்கும் மரங்கள் இலைகள் உதிர்ந்து வீட்டை குப்பையாக்குகிறது. சுத்தம் செய்ய முடியவில்லை என்று காரணம் சொல்லி வெட்டி . மரத்தின் நிழல் ஏ.சி யை விட சிறந்தது .வீட்டில் மொட்டை மாடியில் மரங்கள் நிழல் பரப்பினால் குளிர்ச்சியாக இருக்கும் வீடு.

சுற்றுச் சுவருக்கும் வீட்டுக்கும் இடையே இடம் விட்டிருந்தாலும், அதையும் சிமெண்ட் பூசி கான்கிரீட் தளமாக இருப்பதால் அந்த தரையில் படும் வெப்பம் அப்படியே வீட்டுக்குள் நுழையும். சில வீடுகளில் அந்த தரைகளில் சூரிய வெளிச்சம் படாதபடி கீற்றுப் பந்தல் போடலாம். இந்தப் பந்தல் மீதும் வீட்டைச் சுற்றிலும் மாலை நேரத்தில் குளிர்ந்த தண்ணீர் தெளித்து வைத்தால் வீடு ஜில்லுனு இருக்கும்.

வீட்டைச் சுற்றிலும் மண் தரை இருந்தால் அங்கு செடிகளை நட்டு தண்ணீர் ஊற்றுங்கள். மண்ணில் பரவும் அந்த தண்ணீர் வீட்டையும் குளிரவைக்கும். எப்போதோ அபூர்வமாக பெய்யும் கோடை மழையின்போது தண்ணீர் மண்ணுக்குள் இறங்கி சுற்றுச் சூழலையும், வீட்டையும் குளிரச்செய்யும்.

தேங்காய் நார் தரை அமைத்தும் வீட்டை குளிரச் செய்யலாம்.

மாடி வீடுகளில் பால்கனிகளில் தொட்டி செடிகள் வைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் அதுவும் வீட்டுக்கு குளுமை தரும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாகனத்தின் மைலேஜை எகிற வைக்கணுமா? இதோ சில 'ஸ்மார்ட்' டிப்ஸ்!
natural-cooling-tips

வீட்டு ஜன்னலில் வெட்டிவேர் கட்டி வைத்து மாலை நேரத்தில் அதில் தண்ணீர் தெளித்து விடுவதால் வீட்டுக்கு குளிர்ச்சி தரும். வெட்டி வேரால் பின்னப்பட்ட ஜன்னல் திரைகள் இப்போது ரெடிமேடாக கிடைக்கிறது.

படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்கவேண்டும். மரக்கட்டில்கள் வெப்பத்தை உள்வாங்காது. பருத்தி விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.

சமையலறையில் சமைக்கும் வெப்பம் வீடு முழுக்க பரவாமல் இருக்க எக்சார்ஸ்ட்பேன் உபயோகித்து வெப்பத்தை வீட்டினுள் வரவிடாமல் தடுத்தால் வீடு குளிர்ச்சியாகும்.

இதன்படி செய்தால் உங்கள் வீடு இந்த வெயிலுக்கு ஜிலு ஜிலு வீடாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com