உங்கள் வாகனத்தின் மைலேஜை எகிற வைக்கணுமா? இதோ சில 'ஸ்மார்ட்' டிப்ஸ்!

fuel-saving-tips
fuel-saving-tips
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

பெட்ரோல் டீசல் தமிழகத்தில் போதுமான அளவில் உள்ளது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் பெட்ரோல் டீசலில் சிக்கனம் காப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பெட்ரோலை டீசலை சேமிப்பதற்கான எளிய குறிப்புகள்:

வாகனத்தை சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டியது அவசியம். எண்ணெய் கசிவை நீக்கவும், மைலேஜ் பரிசோதனையை செய்யவும் வேண்டும்.

சீரான வேகத்தில் வாகனம் ஓட்டுவது எரிபொருள் நுகர்வை குறைக்கும்.

வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்தை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். குறைந்த காற்றழுத்தம் இன்ஜினுக்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்தி, எரிபொருளை அதிகம் செலவழிக்கும். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது; அத்துடன் டயர்களையும் பாதிக்கும்.

வாகனத்தின் செயல்திறன் சிறப்பாக இருப்பதற்கு அவற்றை சரியான கால இடைவெளியில் பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால் தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொதுத்துறை வாகனங்களை பயன்படுத்தலாம். நடக்கக்கூடிய அளவே உள்ள தூரங்களுக்கு நடந்து கூடச் செல்லலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது; பெட்ரோலையும் சேமிக்கலாம்.

புதிய டயர்களை மாற்றும் பொழுது வாகன தயாரிப் பாளர்கள் பரிந்துரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்துவதும் மற்றும் நிறுவனத்தார் கொடுத்த காற்றழுத்தத்தை மட்டுமே பராமரிப்பதும் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறைகளாகும்.

வண்டியின் டேங்கில் எப்போதும் அரை பங்கிற்கு மேல் எரிபொருள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் எரிபொருள் சரியான அழுத்தத்தில் செல்ல பெரிதும் உதவும்.

இஞ்சின் ஆயில் மற்றும் ஏர் பில்டர்களை சரியான நேரத்தில் மாற்றுவது இன்ஜின் செயல்திறனை மேம்படுத்தி மைலேஜை அதிகரிக்கும்.

போக்குவரத்து சிக்னல்களில் 30 வினாடிகளுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தால் வண்டி இன்ஜினை அணைத்து விடுவது பெட்ரோல், டீசலை சேமிக்க உதவும். அதேபோல் சிக்னல்களில் திடீரென வேகம் எடுக்காமல், சீரான வேகத்தில் வாகனத்தை இயக்குவது நல்லது.

இதையும் படியுங்கள்:
இல்லறம் இனிமையாக அமைய... கணவன் - மனைவிக்கான பொன்னான குறிப்புகள்!
fuel-saving-tips

டூவீலரோ காரோ எதுவாக இருந்தாலும் அதிக வேகத்தில் ஓட்டாமல் இருப்பது நல்லது. இது நம் பாதுகாப்புக்கும் சரி பெட்ரோலை சேமிக்கவும் சரி உதவும். அதேபோல் மிக மெதுவாக ஓட்டினாலும் பெட்ரோலை உறிஞ்சிவிடும். அதனால் மிதமான வேகத்தில் ஓட்டுவதே சிறந்தது.

ஏசியை குறைவாகப் பயன்படுத்துவது, குறிப்பாக நகர நெரிசலில், 10% வரை எரிபொருளை சேமிக்க உதவும். வாகனத்தில் தேவையில்லாத பொருட்களை ஏற்றிச்செல்வதை தவிர்ப்பதும் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும். வாகனத்தை வெயிலில் நிறுத்துவதை தவிர்த்து நிழலில் நிறுத்துவது எரிபொருள் ஆவியாதலை தடுக்கும்.

ஹைட்ரோஜென் கருவியை வாகனங்களில் பொருத்துவதன் மூலம் எரிபொருளை 30 சதவீதம் வரை சேமிக்க முடியும். டூ வீலர், கார், லாரி, ஜெனரேட்டர் போன்றவற்றிக்கு ஏற்றவாறு தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துருப்பிடிக்காத உலோகத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் பத்து ஆண்டுகள் வரை இதன் ஆயுட்காலம் நீடிக்கும். இக்கருவியை வாகனங்களில் பொருத்துவதன் மூலம் மாசுக்கட்டுப்பாடு, எரிபொருள் சேமிப்பு மற்றும் எஞ்சின் பாதுகாப்பு போன்ற பலன்களைத் தரும்.

இந்த எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், நம் வாகனத்தின் மைலேஜை கணிசமாக உயர்த்தி, பெட்ரோல்/டீசல் செலவை குறைக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com