“ஆரஞ்சு பழத்தோல்… வீட்டை மணக்க வைக்கும் சின்ன ட்ரிக்!”

natural-room-freshener
natural-room-freshener
Updated on

ஒரு வீட்டுக்குள் நுழைந்தவுடனே நமக்கு என்ன ஃபீல் வருது தெரியுமா?

அது பெரிய சோஃபா, அழகான டிவி, costly டெகோரேஷன் எல்லாம் இல்ல… அங்க வரும் மணம்தான். சும்மா சுத்தமான, fresh ஆன வாசனை இருந்தா உடனே “வீடு மாதிரி இருக்கு”ன்னு தோணும்.

இப்போ நாம என்ன பண்ணுறோம்?

சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் ஏர் ஃப்ரெஷ்னர் வாங்குறோம்.

Spray பண்ணினா உடனே strong வாசனை வரும்.

ஆனா கொஞ்ச நேரம் கழிச்சா… அது கொஞ்சம் overஆ feel ஆகும்.

ஆனால் நம்முடைய சமையலறையில் ஒரு எளிய தீர்வு இருக்கிறது, ஆரஞ்சு தோல். நாம் பெரும்பாலும் அதை குப்பையில் போடுகிறோம்.

ஆனால் அந்த தோல் வீணானது அல்ல. அது ஒரு இயற்கை மணப்பொருள்.

அப்போ ஒரு simple idea try பண்ணலாமே?

ஆரஞ்சு சாப்பிடுறீங்களா? அதோட தோலை எப்போமே குப்பையில போட்டுடுவீங்கல? அதை இப்போ use பண்ணலாம்.

ஒரு பாத்திரம் எடுங்க. அதுல தண்ணீர் ஊத்துங்க. ஆரஞ்சு தோலை போடுங்க. அதை stoveல வைத்து மெதுவா boil பண்ணுங்க.

5–10 நிமிஷம் கழிச்சா என்ன ஆகும்னு தெரியுமா?

வீட்டுலே ஒரு natural smell பரவ ஆரம்பிக்கும்.

அது strong இல்ல… இதவானது… freshஆ இருக்கும்.

romba pleasantஆ இருக்கும்.

இதற்குப் பின்னால் விஞ்ஞானமும் இருக்கிறது.

ஆரஞ்சு தோலில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வெப்பத்தில் வெளியேறி, காற்றில் கலக்கின்றன.

அவை கெட்ட மணங்களை மறைக்கவில்லை அவற்றை குறைக்கின்றன. மேலும், இந்த மணத்தில் ஒரு சுத்தம் உள்ளது.

சிறிய அளவில் நுண்ணுயிர்களை குறைக்கும் தன்மையும் உள்ளது.

வேணும்னா இன்னும் கொஞ்சம் level up பண்ணலாம்:

சின்ன cinnamon stick, கொஞ்சம் கிராம்பு add பண்ணுங்க.

அப்போ smell இன்னும் superஆ இருக்கும்.

இதையும் படியுங்கள்:
விட்டுக்கொடுத்தலில் விளையும் வெற்றி: கணவன் - மனைவி உறவின் உன்னதம்!
natural-room-freshener

இதில் சிறப்பு என்ன தெரியுமா? செலவே இல்லை. வீணாக குப்பையில் எறியும் பொருள் வீட்டின் நல்ல மணத்திற்கு உதவுகிறது என்பதுதான்

சிம்பிளாச் சொல்லணும்னா: வீட்ட மணம் நல்லா இருக்கணும்னா…

காசு செலவழிக்கணும் அவசியம் இல்லை. ஒரு ஆரஞ்சு தோல் போதும்.

சில நிமிஷம் போதும். அதுக்கப்புறம் —

உங்க வீடு full fresh feel!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com