
கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்னு சும்மா சொல்லல. வாழ்க்கை முழுக்க ஒருத்தர் கூட பயணிக்கப் போறோம்னா, காதல் மட்டும் பத்தாது. அவங்களப் பத்தி முழுசா தெரிஞ்சுருக்கணும்.
ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் தெரியும். ஆனா, போகப் போகத்தான் சில விஷயங்கள் நம்ம வாழ்க்கையையே நரகமா மாத்திடும். அப்படிப்பட்ட சில "ரெட் ஃபிளாக்ஸ்" அதாவது அபாய அறிகுறிகள் உள்ள பசங்க யாரு, அவங்கள ஏன் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு வாங்க பார்க்கலாம்.
சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் கத்தி, பொருளைத் தூக்கி எறியுற ஆளா? இன்னைக்கு பொருளைத் தூக்கி எறியுற கை, நாளைக்கு உங்க மேல ஓங்க எவ்வளவு நேரமாகும்? கோபத்தை வன்முறையா வெளிப்படுத்துறது ஒரு மிகப் பெரிய ரெட் ஃபிளாக். இப்படிப்பட்டவங்களால ஒரு நிம்மதியான குடும்பத்தைக் கொடுக்கவே முடியாது. வாழ்க்கை முழுக்க ஒருவித பயத்தோடதான் வாழ வேண்டியிருக்கும்.
ஒரு உறவுல கணவன் மனைவி ரெண்டு பேருமே மனசு விட்டுப் பேசணும். ஆனா, சில பசங்க எதுக்குமே வாயைத் திறக்க மாட்டாங்க. அவங்க கஷ்டம், சந்தோஷம் எதையுமே பகிர்ந்துக்க மாட்டாங்க. இது ஒருபக்கம்னா, இன்னொரு பக்கம், எல்லாத்துக்கும் அவங்க அம்மாகிட்ட போய் நிக்கிற "அம்மா பையன்கள்" இருக்காங்க. வீட்டுல ஒரு சின்னப் பிரச்சனைன்னா கூட, அதைத் தன் மனைவிகிட்ட பேசித் தீர்க்காம, அம்மாகிட்ட ஓடுறது ரொம்பத் தப்பு. உங்க குடும்பத்தோட தலைவன் அவரா இருக்கணும், அவங்க அம்மாவா இருக்கக் கூடாது.
ஒரு பையனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணம் பொறுப்பு. குடும்பத்தை எப்படி நடத்தணும், பணத்தை எப்படி கையாளணும், நாளைக்கு தன் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அப்பாவா எப்படி இருக்கணும்ங்கிற பொறுப்பு இல்லாதவங்க கூட வாழ்றது ரொம்பக் கஷ்டம்.
அதே மாதிரி, தன் உடம்பைப் பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவங்களும் ஆபத்தானவங்கதான். ஃபிட்னஸ், ஆரோக்கியமான சாப்பாடு இதெல்லாம் ஒரு மனுஷனுக்கு அடிப்படை. அதைக் கூட செய்யாதவங்க, குடும்பப் பொறுப்பை எப்படி சரியா செய்வாங்க?
சிலர் இருப்பாங்க, பயங்கர கஞ்சத்தனம் பண்ணுவாங்க. ஒரு டீ குடிக்கக் கூட ஆயிரம் தடவை யோசிப்பாங்க. அவங்க கூட வாழ்றது ஒரு வகை நரகம். அதே சமயம், வர்ற காசை எல்லாம் வாரி இறைக்கிற ஆளாவும் இருக்கக் கூடாது. சேமிப்புங்கிறது ரொம்ப முக்கியம். ஆனா, வாழ்க்கையில முன்னேற சின்னச் சின்ன ரிஸ்க் எடுக்கவும் தயங்கக் கூடாது. இந்த ரெண்டுக்கும் நடுவுல பணத்தை சரியா கையாளத் தெரியுறவர்தான் சரியான பார்ட்னர்.
யாரும் நூறு சதவீதம் சரியானவங்க கிடையாது. ஆனா, மேல சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒருத்தரோட அடிப்படைக் குணங்கள். இதெல்லாம் ஒருத்தர்கிட்ட இருந்தா, அவங்களக் காதலிக்கிறப்பவே சரி பண்ணிடலாம்னு மட்டும் நினைக்காதீங்க.
ஒரு மனுஷனோட குணத்தை மாத்துறது ரொம்பக் கஷ்டம். அதனால, கல்யாணத்துக்கு முன்னாடி நல்லா யோசிச்சு, உங்களுக்கு மரியாதை கொடுக்கிற, உங்க உணர்வுகளைப் புரிஞ்சுக்கிற, பொறுப்பான ஒருத்தர வாழ்க்கைத் துணையா தேர்ந்தெடுங்க. உங்க வாழ்க்கை உங்க கையிலதான் இருக்கு…