
வடிவமைப்பாளர்கள் மக்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றனர். தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோல் வடிவமைப்பிலிருந்து விளம்பரப் பலகையில் வண்ணங்களை தேர்ந்தெடுப்பதுவரை ஒவ்வொன்றின் தோற்றம் மற்றும் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த பதிவில் ஒன்பது வகையான வடிவமைப்பாளர் வேலைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
1. ஃபேஷன் டிசைனர்;
ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் போன்ற பொருள்களை வடிவமைத்து உருவாக்கு கிறார்கள். பெரும்பாலும் ஃபேஷன் டிசைனர்கள் சிறப்பு பட்டம் பெறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஆடையை உருவாக்குவதற்கான மிகவும் ஆக்கபூர்வமான வழியை காட்சிப்படுத்த பல்வேறு நுட்பங்கள் மற்றும் ஜவுளி வகைகள் பற்றிய தங்கள் அறிவை பயன்படுத்து கிறார்கள். தினசரி உடைகள் முதல் பண்டிகை மற்றும் விசேஷ கால உடைகள், சீரியல், சினிமாக் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற ஆடைகள்வரை இவர்கள் வடிவமைக்கிறார்கள்.
2. வீடியோ கேம் வடிவமைப்பாளர்;
வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் விளையாட்டு கதாபாத்திரங்களுக்கான கருத்துக்கள், விளையாட்டு இயக்கவியல், காட்சி விளைவுகள், கதைக்களங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்கி கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டுகிறார்கள். கணினி அறிவியல் பாடங்களைப் பற்றிய வலுவான புரிதலையும் வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய விளையாட்டுடன் கதை சொல்லலின் அம்சங்களைப் புகுத்துகிறார்கள்.
3. வெப் (Web) டிசைனர்;
வெப் டிசைனர்கள் வலைத்தளங்களை திட்டமிடுவதற்கும் கட்டமைப்பதற்கும் பொறுப்பாளர்கள் ஆவார்கள் இதில் குறியீடு எழுதுதல் (writing code) வண்ணத் திட்டங்கள், கிராபிக்ஸ் மற்றும் காட்சிப்படுத்துதலுக்கு ஏற்ற வகையில் இணையதள பயன்பாட்டை வடிவமைத்தல் போன்றவற்றை தயாரிக்கிறார்கள்.
4. கிராஃபிக் டிசைனர்;
கருத்துக்கள் மற்றும் செய்திகளை திறம்பட தொடர்பு கொள்வதற்கு லோகோக்கள், சுவரொட்டிகள், வணிக அட்டைகள், விளம்பரங்கள், பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் பொருள்கள் போன்ற காட்சி உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள்.
5. இன்டீரியர் டிசைனர்;
வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொது கட்டிடங்களில் உட்புற இடங்களை வடிவமைத்து ஒழுங்கமைத்தல், அழகியல் செயல்பாடு மற்றும் வாடிக்கையாளர்களின் தனித்துவமான ரசனைகளுக்கு ஏற்ப வடிவமைத்து தருகிறார்கள். இவர்கள் ஒரு கட்டிடத்திற்கான ஒட்டுமொத்த அழகியலை உருவாக்க தளபாடங்கள், வண்ணத்திட்டம், பாகங்கள், வால்பேப்பர்கள், விளக்குகள் மற்றும் அலங்காரத்தை முடிவு செய்கிறார்கள்.
6. கட்டிடக்கலை வடிவமைப்பாளர்கள்; (ஆர்க்கிடெக்ட்டுகள்)
இவர்கள் கட்டிடங்கள், கட்டமைப்புகள் மற்றும் பொது இடங்களுக்கான திட்டங்களை வரைகிறார்கள். பொறியாளர்களுடன் இணைந்து தங்கள் வடிவமைப்புகளின் சரியான விபரப்பு குறிப்புகளை தீர்மானித்து துல்லியமான மாதிரிகளை உருவாக்குகிறார்கள். காகிதத்திலும் 3டி மாடலிங் மற்றும் கட்டிடக்கலை மென்பொருளைக் கொண்டு கணினியிலும் வரைபடங்கள் உருவாக்குகிறார்கள்.
7. தயாரிப்பு வடிவமைப்பாளர்; (Product designer)
வீட்டுப்பொருட்கள் முதல் மின்னணுவியல், பெரிய இயந்திரங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் வரையிலான இயற்பியல் மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகளின் தோற்றம் மற்றும் விவரம் குறிப்புகளை உருவாக்குகிறார்கள். இவர்கள் ஒரு தயாரிப்பு உருவாக்க தேவையான பொருட்கள், பயனர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தயாரிப்பின் அம்சங்கள் பற்றிய வலுவான அறிவைக் கொண்டுள்ளனர்.
8. பயனர் அனுபவ வடிவமைப்பாளர்; (UX -User experience)
பயனர் அனுபவம் அல்லது வடிவமைப்பாளர்கள் வாடிக்கையாளர்களுடன் ஒரு தயாரிப்பு அல்லது ஒரு சேவை மூலம் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தவதில் கவனம் செலுத்துகிறார்கள். பயனர்களின் திருப்தியை மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் சோதனைகளை நடத்துகிறார்கள் .
9. UI வடிவமைப்பாளர்கள்; User interface designer;
UI வடிவமைப்பாளர்கள் தொலைக்காட்சி அல்லது டேப்லெட் போன்ற இயற்பியல் இடைமுகத்துடன் கூடிய பயன்பாடுகள், வலைத்தளங்கள் மற்றும் தயாரிப்புகளிலும் வேலை செய்கிறார்கள். இறுதி பயனர்கள் தங்கள் தயாரிப்பை எளிதாக அணுகுவதை உறுதிசெய்ய இந்த வடிவமைப்பாளர்கள் தாமே பயனர்களைப் போலவே சிந்திக்கிறார்கள்.