வீட்டில் நிம்மதி இல்லையா? தாமரை ஓவியம் மாட்டி பிறகு நடைபெறும் அதிசயத்தைப் பாருங்கள்!
வாழ்க்கையில் ஆரோக்கியம், அமைதி, மனத் தெளிவு, முன்னேற்றம் ஆகியவை சிறப்பாக அமைய, வீட்டிற்குள் நேர்மறை சக்தி நிலவுவது அவசியம். ஜப்பானியரின் ஃபெங் ஷுய் வாஸ்து சாஸ்திரப்படி, தண்ணீருக்குள் மலர்ந்திருக்கும் தாமரை மலரை பெயிண்ட்டால் வரைந்த படத்தை வீட்டில் மாட்டி வைப்பதால் நேர்மறை சக்தி உருவாகி அனைத்து வளங்களும் கிடைக்குமென நம்பப்படுகிறது. தாமரை மலர்ந்துள்ள படத்தை வீட்டில் எங்கு, எந்த திசையில் மாட்டுவது நன்மை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. குடும்பத்திற்கும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை புரிவது கிழக்குத் திசை. இவை இரண்டும் சிறப்பாக அமைய, தாமரைப் பூ வரைந்த பெயிண்டிங் ஒன்றை கிழக்குத் திசையில் மாட்டி வைப்பது நல்லது. தாமரைப் பூ, தூய்மையையும் அமைதியான மனநிலையையும் குறிக்கிறது. கிழக்குத் திசை குடும்பத்தின் சீரான நிலைத் தன்மையையும் குடும்பதினரின் மொத்த நலனையும் காக்க உதவும்.
2. தென்கிழக்கு திசையானது வாழ்வில் வளம் பெருகவும் சொத்துக்கள் சேரவும் உதவி புரியும். தாமரை அழகும் நேர்த்தியும் உடைய ஒரு பூ. இதன் படத்தை தென் கிழக்கு திசையில் மாட்டி வைப்பதால், நிதி நிலைமை உயரவும் சொத்து சேரவும் வாய்ப்புகள் உருவாகும்.
3. வடதிசை, செய்யும் வேலை மற்றும் வியாபாரத்தோடு தொடர்புள்ளதாக ஃபெங் ஷுய் கூறுகிறது. எனவே, வடக்கு திசையில் தாமரைப் பூ பெயிண்டிங் வைப்பது செய்யும் வேலை சிறப்புறவும், பிசினஸ் செழித்தோங்கவும் உதவும்.
4. படுக்கை அறையில், மலர்ந்த தாமரைப் பூ வரைந்த ஓவியங்களை மாட்டி வைப்பது அறைக்குள் அமைதியான சூழல் உருவாகவும் தரமான தூக்கம் பெறவும் உதவியாகும். உடல் நல்ல ஓய்வு பெற்று, ரிலாக்ஸ் ஆகும்போது ஒருவர் சுய சிந்தனையுடன் தன்னைத்தானே பகுப்பாய்வு செய்து மதிப்பிடும் திறன் உண்டாகும்.
5. நுழைவு வாயில் அருகில் மலர்ந்த தாமரைப் பூக்கள் வரைந்த படத்தை மாட்டி வைப்பதால், வீட்டிற்குள் அதிகளவு நேர்மறை சக்திகள் புகுவதற்கு வாய்ப்புண்டாகும். எதிர்மறை சக்திகள் நீங்க, வீட்டின் முன் பகுதியை சுத்தமாக வைத்துப் பராமரித்தல் அவசியம்.
6. வரவேற்பறை குடும்ப உறுப்பினர் பலரும் அமர்ந்து உரையாடும் இடம். டிவி பார்ப்பதும் இந்த வரவேற்பறையில்தான். தாமரை மலர்ந்திருக்கும் ஓவியத்தை இந்த ஹாலில் மாட்டி வைப்பது, ஹாலின் அழகைக் கூட்டவும், வீட்டில் அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் அதிகரிக்க உதவும்.
7. வீட்டிலுள்ள நீரூற்று, நீச்சல் குளம், மீன் தொட்டி மற்றும் சிங்க் போன்ற நீரோட்டம் உள்ள இடங்களில், நீரில் வளரும் தாமரைப் பூ வரைந்த ஓவியங்களை மாட்டி வைப்பதும் வீட்டின் செழிப்பிற்கும் வீட்டிலுள்ளோர்களின் வளர்ச்சிக்கும் உதவுமென ஃபெங் ஷுய் உறுதியாக கூறுகிறது.
எந்த நாட்டு சாஸ்திர சம்பிரதாயமானாலும், நன்மை தருபவற்றை நாமும் பின்பற்றி நலம் பெறுவோம்.