ஹேண்ட் பேக் வாங்கும்போது இந்த 7 விஷயங்களை நோட் பண்ணுங்க!

Note these 7 things while buying a handbag
Note these 7 things while buying a handbag

ஹேண்ட் பேக் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருள். 99 சதவீதம் பெண்கள் வெளியே செல்லும்பொழுது ஹேண்ட் பேக் இல்லாமல் செல்வதில்லை. அந்த அளவுக்கு ஒன்றிவிட்டது என்று கூட கூறலாம். பணம், செல்போன், லேப்டாப், சாவி, சார்ஜர், சாப்பாடு, ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில், சீப்பு, கண்ணாடி, மேக்கப் கிட் என அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அதற்குள் அடக்கி, அசால்ட்டாக எடுத்துச் சென்றுவிடலாம். ஹேண்ட் பேக்கை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான 7 விஷயங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

சரியான சைஸ், வெயிட்: ஹேண்ட் பேக்கை கை மற்றும் தோள்பட்டையில் சுமந்து செல்ல வேண்டும் என்பதால் அதனை வாங்கும் முன்பு, எடையை நன்றாக சோதித்துக் கொள்வது அவசியம். டிசைனுக்கு ஆசைப்பட்டு அதிக எடையுள்ள ஹேண்ட்பேக்கை வாங்கிவிட்டு, பின்னால் அவதிப்படாதீர்கள். அதேபோல் நிறைய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக பெரிய சைஸ் ஹேண்ட் பேக்கை வாங்க வேண்டிய அவசியமில்லை. அகலமான ஹேண்ட் பேக்கை வாங்கினாலே போதும்.

தரம்: கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை ஹேண்ட் பேக் வாங்க செலவிடும் முன்பு, அதன் தரத்தை ஒவ்வொரு மூலையிலும் சோதித்து பார்க்க வேண்டும். ஹேண்ட் பேக் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும், தையல் எப்படி இருக்கிறது, ஜீப்கள் சரியாக வேலை செய்கிறதா? என அனைத்தையும் சரிபார்க்க வேண்டும்.

மெட்டீரியல்: தேவை மற்றும் பயன்பாட்டை பொறுத்து என்ன வகையான மெட்டீரியலால் செய்யப்பட்ட ஹேண்ட் பேக்கை வாங்கலாம் என முடிவெடுக்கலாம். தற்போது விலங்குகளின் தோலால் ஆன ஹேண்ட் பேக்கிற்கு பதிலாக வீகன் ஹேண்ட் பேக்குகள் மார்க்கெட்டில் ஈசியாகக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. மிருகங்களின் தோலைப் போன்ற பொருட்களால் ஆன சைவ லெதரைக் கொண்டு தயாரிக்கப்படும் இவையும் நீடித்து உழைக்கவும், பார்ப்பவர்களை எல்லாம் கவர்ந்திழுக்கும் டிசைன்களையும் கொண்டு இருக்கின்றன.

ஹேண்ட் பேக் கம்பார்ட்மெண்ட்: ஹேண்ட் பேக் வாங்கும்போது அதில் எத்தனை ஸ்டோரேஜ் கம்பார்ட்மெண்ட்கள் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். அவசரத் தேவைக்கு குறைவான கம்பார்ட்மெண்ட்களை கொண்ட ஹேண்ட் பேக் சரியான தேர்வு என்றாலும், அதிக பொருட்களை பாதுகாப்பாக வைத்து எடுத்துச் செல்ல நிறைய அறைகளை கொண்ட ஹேண்ட் பேக்குகள் சிறந்தது. இந்த விஷயத்தில் உங்களுடைய தேவை மற்றும் பயன்பாட்டை பொறுத்து முடிவு செய்யலாம்.

பன்முகத்தன்மை: ஹேண்ட் பேக்குகளை தேர்வு செய்யும்போது, அவை பல விஷயங்களுக்கு பயன்படக்கூடிய வகையில் வாங்குவது நல்லது. அலுவலகத்திற்கு ஒன்று, நெடுந்தூர பயணத்திற்கு ஒன்று என பல வகையான ஹேண்ட் பேக்குகளை வாங்கிக் குவிப்பதை தவிர்க்க உதவும். மேலும், ஒரே ஒரு ஸ்ட்ராப்பை மாற்றுவதன் மூலமாக பலவிதங்களில் பயன்படும் ஹேண்ட் பேக்குகளை வாங்கலாம்.

இதையும் படியுங்கள்:
கோடை உஷ்ண அலையை சமாளிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!
Note these 7 things while buying a handbag

நிறம்: நீங்கள் வைத்திருக்கும் ஹேண்ட் பேக் உங்களுடைய ஆளுமையை தீர்மானிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். உடுத்திக்கொள்ளும் ஆடைகளின் நிறத்துடன் ஒத்துப்போக ப்ளாக், பிரவுன் மற்றும் ஒயிட் நிற ஹேண்ட் பேக்குகள் சிறந்தது. சிவப்பு மற்றும் நீலம் போன்ற அடர் நிறங்கள், இளஞ்சிவப்பு, கிரே போன்ற வெளிர் நிறங்கள் தினசரி அலுவலகம் கொண்டு செல்ல சிறப்பானது ஆகும்.

விலை: ஹேண்ட் பேக் வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பல அம்சங்களில் முக்கியமானது அதன் விலை. அதிக விலையுள்ள ஹேண்ட் பேக்கை வாங்கும் முன் அதை பல ஆப்ஷன்களுடன் பொருத்திப் பார்த்து, தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதைய மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்றாற்போல் வாங்கப்போகும் ஹேண்ட் பேக் விலையை முடிவு செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு ஒரு தெளிவு பிறந்து இருக்கும், நாம் காசு கொடுத்து ஒரு பொருள் வாங்கும்போது அந்த பொருளில் எந்த குறைபாடும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாதுதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com