இணையவழி மோசடிகள் அதிகரிப்பு... அச்சுறுத்தும் 'வாட்ஸ் அப்' ஸ்கேம் - உஷார் மக்களே!

Digital scam
Digital scam
Published on

இணையவழி குற்றம் அல்லது சைபர் குற்றம் என்பது, இணையம் அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சட்டவிரோதச் செயல்களைக் குறிக்கிறது. இணையவழி குற்றங்களில், கணினி ஒரு இலக்காகவோ அல்லது குற்றச்செயலை செய்யவோ பயன்படுத்தப்படுகிறது.

அதிவேகமாக இணைய பயன்பாட்டால் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் கையடக்க செல்போன் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவியில் வளர்ச்சி அடைந்துள்ளதால், இது இணையவழி குற்றங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா!
Digital scam

இந்த இணைய வழி குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், புதுப்புது உத்திகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இணையவழி குற்றங்களை பதிவு செய்வதற்கு தேசிய கணினிசார் குற்றப்பதிவு இணையதளத்தை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி உள்ளது. இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.

இணையவழி குற்றங்களை தடுக்க தமிழக காவல்துறையும் தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் இணையவழி குற்றங்கள் குறைவுதான் என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் படித்த, தொழிநுட்பம் தெரிந்த இளைஞர்கள் என்பது தான் கவலையளிக்கிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் கயமை எண்ணம் இளைஞர்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

இணையவழி குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக ‘வாட்ஸ் அப்’ உள்ளது என்றும், அதற்கு அடுத்த இடத்தில் ‘டெலிகிராம், இன்ஸ்டாகிராம்’ தளங்கள் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
'3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்' - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
Digital scam

இந்தியாவில் கடந்த ஆண்டின் (2024) முதல் 3 மாதங்களில் ‘வாட்ஸ் அப்’ மூலமான இணைய மோசடி தொடர்பாக 43 ஆயிரத்து 797 புகார்களும், ‘டெலிகிராமு’க்கு எதிராக 22 ஆயிரத்து 680 புகார்களும், ‘இன்ஸ்டாகிராமு’க்கு எதிராக 19 ஆயிரத்து 800 புகார்களும் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சைபர் குற்றங்களில் அதிகம் ஈடுபடுபவர்கள் தங்களின் குற்றச்செயல்களுக்கு ‘கூகுள்’ சேவைதளங்களையே அதிகளவில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. முதலீட்டு மோசடி ஒரு உலகளாவிய நிகழ்வு, இது மிகப்பெரிய அளவில் பண மோசடி மற்றும் சைபர் அடிமைத்தனத்தை உள்ளடக்கியது. மோசடி செய்பவர்கள், வேலையில்லா இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் தேவை உள்ள மக்களே இக்குற்றங்களுக்கான இலக்காக நிர்ணயிக்கின்றனர். இவர்களே அதிக அளவிலான பணத்தை இழக்கின்றனர்.

இந்தியாவில், கட்டமைக்கப்பட்ட சைபர் குற்ற நடவடிக்கையான சட்டவிரோத கடன் செயலிகள் தொடங்குவதற்கு நிதியுதவி அளிக்கப்படும் பேஸ்புக் விளம்பரங்கள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இத்தகைய இணைப்புகள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு, தேவையான நடவடிக்கைக்காக பேஸ்புக் பக்கத்துடன் பகிரப்படுகின்றன.

சைபர் குற்றங்கள் தொடர்பாக ஏதாவது அழைப்பு வந்தால், யாரும் பயம் கொள்ள தேவையில்லை. இது தொடர்பாக, 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும்.

இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு லட்சம் அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், தொடர் குற்றங்களுக்கு இரண்டு லட்சம் அபராதம் மற்றும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com