மொட்டை மாடி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இவ்வளவு ஈஸியான வழிகள் இருக்குனு யாருக்கும் தெரியாது!

Tank Cleaning Tips
Tank Cleaning Tips
Published on

நமது வீட்டை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க எவ்வளவோ விஷயங்களை செய்வோம். ஆனால் வீட்டின் மேல் இருக்கும் மொட்டை மாடி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய பலரும் மறந்து விடுகிறார்கள். ரொம்ப நாட்களாக அதை கண்டுகொள்ளாமல் விடும்போது அதனுள் பாசி, சேறு மற்றும் பலவிதமான குப்பைகள் சேர்ந்து தண்ணீரின் தரத்தை சுத்தமாக கெடுத்துவிடும். இப்படிப்பட்ட அசுத்தமான தண்ணீரை நாம் தினமும் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்தினால் சரும நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் வருவது உறுதி. 

தண்ணீரில் துர்நாற்றம் வீசும்போதோ அல்லது நிறம் மாறும்போதோதான் நாம் இதைப்பற்றி யோசிக்கவே ஆரம்பிக்கிறோம். அப்படி நிலைமை மோசமாவதற்கு முன்பே, உங்களின் வாட்டர் டேங்க்கை ரொம்ப சுலபமாக எப்படி சுத்தம் செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

தொட்டியை காலியாக்குங்கள்!

சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பிக்கும் முன்பு உள்ளே இருக்கும் மொத்த தண்ணீரையும் முழுமையாக வெளியேற்ற வேண்டும். அடியில் கொஞ்சம் தண்ணீர் மிச்சம் இருந்தாலும் ஒரு சிறிய கப்பை வைத்து அதை மொத்தமாக மொண்டு ஊற்றிவிடுவது ரொம்பவே நல்லது. அப்போதுதான் தொட்டியின் உள்ளே எந்த அளவுக்கு அழுக்கு தேங்கியிருக்கிறது என்பது நமக்கு தெளிவாக தெரியும். தொட்டிக்குள் இறங்கி வேலை செய்யும்போது வழுக்கி கீழே விழ அதிக வாய்ப்பு இருப்பதால் ரொம்பவே உஷாராக காலை வைத்து இறங்குவது மிக முக்கியம்.

ஸ்க்ரப்பிங் செய்யும் முறை!

தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிய பிறகு, தொட்டியின் சுவர்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த வழவழப்பான பாசி மற்றும் சேற்றை சுரண்டி எடுக்க வேண்டும். இதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஒரு கடினமான பிரஷ்ஷை பயன்படுத்துவது வேலையை சுலபமாக்கும்.

குறிப்பாக தொட்டியின் மூலை முடுக்குகளில் தான் அதிக அளவில் குப்பைகள் தேங்கியிருக்கும் என்பதால், அந்த இடங்களில் கொஞ்சம் அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும். கைகள் எட்டாத ரொம்ப ஆழமான இடங்களை சுத்தம் செய்ய, அந்த பிரஷ்ஷை ஒரு நீளமான குச்சியில் கட்டி ஸ்க்ரப் செய்வது ரொம்பவே ஸ்மார்ட்டான ஐடியா.

இதையும் படியுங்கள்:
உங்க வீடு இனி கிருமி இல்லாத கோட்டை! மாப் தண்ணில இதெல்லாம் சேருங்க!
Tank Cleaning Tips

கிருமிகளை ஒழிக்கும் ஐடியா!

வெறுமனே பிரஷ் போட்டு தேய்ப்பதால் மட்டும் அங்குள்ள கிருமிகள் முழுவதும் செத்துவிடாது. தண்ணீரை நூறு சதவீதம் பாதுகாப்பானதாக மாற்ற சில ரசாயனங்களை பயன்படுத்துவது அவசியம். ஒரு வாளி தண்ணீரில் கொஞ்சம் படிகாரம் கலந்து, அந்த கலவையை பிரஷ்ஷில் தொட்டு தொட்டியின் உட்புறம் முழுவதும் நன்றாக தேய்த்து விடவும். இது அங்குள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழித்துவிடும். 

அதன் பிறகு, சுவர்களில் பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரை நன்றாக தெளித்துவிட்டு ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டுவிட வேண்டும். கடைசியாக, நல்ல சுத்தமான தண்ணீரை பீய்ச்சி அடித்து தொட்டியை முழுமையாக அலசி அந்த கழுவிய நீரையும் முற்றிலுமாக வெளியேற்றிவிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
7-சீட்டர் ‘Volkswagen Tayron R-Line’... பாதுகாப்பான தொலைதூர குடும்ப பயணத்திற்கு...
Tank Cleaning Tips

உங்களின் குடும்ப உறுப்பினர்கள் எப்போதும் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், குறைந்தது ஒன்று முதல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது இந்த வாட்டர் டேங்க் சுத்தம் செய்யும் வேலையை கட்டாயம் செய்துவிடுங்கள். சரியான பராமரிப்பு இருந்தால் மட்டுமே நாம் பயன்படுத்தும் தண்ணீர் எப்போதும் தூய்மையாக இருக்கும். 

அதோடு சேர்த்து, தொட்டிக்குள் தேவையில்லாத வெளிச்சமும் காற்றும் புகாதவாறு ஒரு நல்ல தரமான மூடியை போட்டு மூடி வைப்பது, உள்ளே பாசி வளர்வதை பெருமளவு தடுத்து நிறுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com