உடல், மன வலிகளைத் தாங்கும் தன்மை ஆண்களுக்கு அதிகமா? பெண்களுக்கு அதிகமா?

Pain tolerance Who has more?
Pain tolerance Who has more?

‘பெண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள்’ என்று ஆண்கள் சொல்வதும், ‘ஆண்கள் என்றால் இப்படித்தான்’ என்று பெண்கள் கூறுவதும் வழக்கமாகிவிட்டது. இது வெறும் நகைச்சுவை என்றிருக்கும்வரை சரிதான். ஆனால், தற்காலத்தில் இதையே பெரிய குற்றமாக மாற்றிவிடுகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு ஆணும் பெண்ணும் துணி கடைக்குச் செல்கிறார்கள். அங்கு அந்தப் பெண் வெகு நேரமாக துணி எடுக்கிறாள் என்றால், அதனை நகைச்சுவை தாண்டி தொல்லையாகப் பார்த்து அந்தப் பெண்ணை திட்டும் ஆண்களும் உண்டு. ஒரு விஷயத்தை நன்றாக, அந்த பெண்ணிற்கு திருப்தியாக செய்தாக வேண்டும் என்பதே அந்த பெண்ணின் நோக்கம்.

அதேபோல், சிக்கனமாக செலவு செய்வது ஆண்களின் குணமாக இருக்கும். ஆனால், அதனை கஞ்சம் என்று அழைப்பார்கள். உண்மையை சொல்லப்போனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் அறிவியல் அடிப்படையிலும் உண்டு, சூழ்நிலை அடிப்படையிலும் உண்டு.

சூழ்நிலை அடிப்படை என்றால், வீட்டை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை பெண்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதால், அவர்களுக்கே ஒரு பிரச்னையை சமாளிக்கும் விதம் நன்றாகத் தெரிந்திருக்கும். அதேபோல், வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு சிக்கனமாக வாழும் யுக்தி தெரிந்திருக்கும்.

இனி, பிரச்னையை எதிர்கொள்வதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்ப்போம்.

1. உடல் ரீதியாக ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வலிகள், பெண்களுக்கு ஏற்படும் வலிகளை விட குறைவாகவே இருக்கும். அதனால் அவர்களால் அதனை எளிதாக தாங்கிக்கொள்ள முடியும். இதன் அடிப்படையில் சிலர் பெண்களை விட ஆண்கள் வலிமையானவர்கள் என்று கூறுவார்கள்.

2. அதேபோல், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதிலும் இருவருக்கும் வேறுபாடுகள் இருக்கும். பெண்கள் ஒரு விஷயத்தை நேரடியாக சொல்லத் தயங்குவார்கள். நல்ல விஷயம் என்றால் சர்ப்ரைஸ் என்றும், கெட்ட விஷயத்தை எப்படிக் கூறுவது என்று தெரியாமலும் கூறுவார்கள். ஆனால், ஆண்கள் எல்லா விஷயங்களையும் நேரடியாகவே கூறும் தன்மையுடையவர்கள். இதனால் ஆண்களுக்கு உணர்ச்சி அற்றவன் என்று பெயர் வைப்பார்கள். ஆனால், அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மறைக்கவே நினைப்பார்கள்.

3. அதேபோல், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் விதமும் இருவருக்கும் வேறுபட்டிருக்கும். ஆண்கள் மன அழுத்தத்திற்குக் காரணமான விஷயத்தில் சண்டையிட்டு ஜெயிக்க நினைப்பார்கள் அல்லது ஓட நினைப்பார்கள். ஆனால், பெண்கள் பொதுவாக ஒப்பந்தம் செய்துகொண்டு நண்பர்களாக மாறிக்கொள்ளவே நினைப்பார்கள்.

4. பெண்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையும் கருத்தில் கொண்டுதான் எந்த முடிவையும் எடுப்பார்கள். ஆனால், ஆண்கள் அவர்கள் என்ன நினைத்தால் என்ன என்று சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள்.

இதுபோன்ற பல விஷயங்களில் இருவருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்கும். இந்த வித்தியாசங்களை அவர்களின் இயல்பு என்று கருதி அப்படியே ஏற்றுக்கொள்வது நல்லது. இல்லை வெறுப்புடன் ஏற்றுக்கொண்டால் அது இருவரின் மனங்களையுமே நோகடிக்கச் செய்து அமைதி இல்லாமல் ஆக்கிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com