

வீட்டில் வசிக்கும் இயற்கையான விலங்கான பல்லி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதோடு நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. ஆகவே பல்லிகள் கடவுளுடனும் கலாச்சாரத்துடனும் தொடர்புடையதாகவே இருந்து வருகின்றன. அந்த வகையில் பல்லி இரவில் சத்தம் போடுவதன் திசைவாரியான பலன்களை இப்பதிவில் காண்போம்.
1. வடக்கு திசை
இரவில் பல்லி வீட்டில் வடக்கு திசையில் சத்தம் போட்டால் வீட்டில் நல்ல காரியங்கள் நடத்துவதற்கான அதாவது திருமணம், வீடு கட்டுதல், பதவி உயர்வு, விரும்பிய மேற்படிப்பு, புதிய வேலைவாய்ப்பு போன்ற சுப செய்தி தேடி வரும். இதனால் வடக்கு திசை மகிழ்ச்சியானதாக பார்க்கப்படுகிறது.
2. தென்மேற்கு திசை
இரவில் தென்மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தம் எழுப்பினால் இதுவரை வீட்டிற்கு வராத விருந்தினர்கள் நீண்ட தூரத்திலிருந்து நம் வீடு தேடி வருவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. இவர்களெல்லாம் நம் வீட்டிற்கு வருவார்களா? என நினைத்தவர்கள் வருவார்கள். இதனால் தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிடுவது உறவுகளை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது.
3. தென்கிழக்கு திசை
இரவு நேரத்தில் பல்லி தென்கிழக்கு திசையில் இருந்து சத்தம் போட்டால் சிறிய பிரச்சனைகள் கூட பெரிதாகி வீண் கலவரங்கள் ஏற்பட்டு இதனால் மனக்கசப்புகள் வர வாய்ப்புள்ளது. ஆகவே தென்கிழக்கு திசையில் பல்லி சத்தம் போட்டால் கணவன் மனைவி இருவரும் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
4. கிழக்கு திசை
பல்லி கிழக்கு திசையில் இருந்து எழுப்பும் சத்தத்தினால் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத பயம் ஏற்படும். இதனால் மனக்கவலை உண்டாகி சோர்வு ஏற்பட்டு செயல்களில் தடைகள் தோன்றும். மேலும் விரும்பத்தகாத செய்திகள் காதில் கேட்பதோடு இதனால் மன வருத்தம் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி இழக்க நேரிடும்.
5. மேற்கு திசை
இரவில் பல்லி மேற்கு திசையில் சத்தம் போட்டால் நினைத்த காரியம் வெற்றி அடைவதோடு உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
6. தெற்கு திசை
இரவில் பல்லி தெற்கு திசை நோக்கி சப்தம் எழுப்பினால் மரண பயம் ஏற்படும். மேலும் உறவினர்களின் இழப்பு ஏற்படும் என பாரம்பரிய பல்லி சாஸ்திரத்தின் படி கூறப்பட்டுள்ளது.
இரவில் பல்லி சத்தம் போட்டால் கிழமை வாரியான பலன்கள்
1. திங்கள் மற்றும் வெள்ளி
வாரத்தின் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவில் பல்லி சப்தம் எழுப்பினால் வீட்டில் சுப காரியம் நடத்துவதற்கான சுப செய்திகள் வீடு தேடி வரும். மேலும் வீட்டில் இருக்கின்றவர்கள் செய்கின்ற தொழிலில் தன லாபம் அதிகரிக்கும்.
2. செவ்வாய் மற்றும் சனி
இரவில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பல்லி சத்தம் போட்டால் எதிர்பார்த்து காத்திருந்த புதிய வரவுகளும் எதிர்பாராத வரவுகளும் தேடி வரும். நீண்ட நாட்களாக காதில் கேட்க வேண்டும் என்று நினைத்த நற்செய்திகள் வீடு தேடி வரும். செல்வ வளம் பெருகி வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
வீட்டில் பல்லிகள் தென்படுவது நன்மையா அல்லது தீமையா எனத் தயங்கும் உங்களுக்கு, செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் ஆச்சரியமூட்டும் பல்லி வாஸ்து ரகசியங்கள் இதோ.
3. புதன்
புதன்கிழமைகளில் இரவில் பல்லி சப்தம் போட்டால் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் கூறும் கருத்துக்களை மற்றவர்கள் நன்கு புரிந்து கொண்டு இதனால் வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோசமும் நிலைத்து நேர்மறையான சூழல் நிலவும்.
4. வியாழன்
வியாழக்கிழமைகளில் இரவில் பல்லி சத்தம் போட்டால் அசுப பலன்களைக் குறிக்கிறது. இதனால் வீட்டில் பிரச்சனைகள், தேவையற்ற விவாதங்கள் மனக்கசப்பு, குடும்பத்தினரிடையே ஒற்றுமையின்மை, பணக் கஷ்டம், தொழில் நஷ்டம் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே வியாழக்கிழமைகளில் இரவில் பல்லி சத்தம் போட்டால் வீட்டில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
5. ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லி இரவில் சத்தம் எழுப்பினால் எதிர்பாராத பணவரவு ஏற்படுவதோடு நற்செய்திகள் வரும் என்பது பல்லி சகுனத்தின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.
வீட்டுப் பல்லி விஷமா? பல்லி விழுந்த உணவு, கட்டுப்பாடு பற்றி முழு விளக்கம்.
பல்லி கத்தும் மற்றும் விழும் பலன்கள் பல்லி சாஸ்திரம் காலங்காலமாக தொன்று தொட்டு நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்கப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் எப்பொழுதும் நேர்மறையான சிந்தனையுடனும், நேர்மையுடனும் நேரம் தவறாமையை கடைபிடித்து வந்தால் அவ்வாறு இருப்பவர்களுக்கு நடப்பவை எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
பல்லி சாஸ்திரத்தின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் வீட்டில் நிகழும் சகுனங்களின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, குடும்பத்தில் அமைதியையும் செல்வ வளம் பெருகும் வாய்ப்புகளையும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.