ஸ்மார்ட்ஃபோன் யுகத்தில் குழந்தைகளைச் சமூகவாதிகளாக மாற்றுவது எப்படி?

parenting-tips-for-kids
parenting-tips-for-kids
Updated on

ன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பக் கருவிகள் வீடு முழுக்க நிறைந்திருக்கும். இந்த காலத்தில் மனிதர்களுடன் நேரம் செலவிடுவதைவிட, இந்த கருவிகளுடன் இணைந்து இருக்கவே, குழந்தைகள் விரும்புகிறார்கள்.

இதனால் சமூக தொடர்பும் அறுந்துவிடுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசுவதற்கு கூச்சப்படும் குழந்தைகள் நிறைய பெருகிவிட்டனர். சமூக பண்புகளை கற்றுக் கொண்டால்தான் முழுமை பெறமுடியும். குழந்தைகளிடம் சமூகத் திறன்களை வளர செய்யுங்கள் .அவற்றை வளர்ப்பது எப்படி? என பார்க்கலாம்.

கிரிக்கெட் விளையாட்டில் அவுட் ஆனால் கூட பேட்டை கொடுத்து விட்டு வர அடம்பிடிப்பார்கள் சிலர். தம்பி அல்லது தங்கையுடன், விளையாட்டு பொம்மைகளைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். சிலர். சில குழந்தைகள் இப்படி இல்லாமல் அடுத்தவர்களுக்கும் இடம் கொடுக்கவேண்டும் என்பதை பெற்றோர் அவர்களுக்கு புரியவையுங்கள்.

வெற்றிகளைப் போலவே தோல்விகளையும் இயல்பாக எடுத்துக் கொள்ள பழக்குங்கள். ஒரு விளையாட்டு போட்டியில் பலர் பங்கேற்கும்போது ஒருவர் மட்டுமே ஜெயிக்க முடியும், என்ற உண்மையை உணர்த்துங்கள். அப்படி ஜெயித்த ஒருவரும் கூட நண்பராகவே இருப்பார் என்பதையும் புரியவையுங்கள்.

தோல்வியில் இருந்து பாடம் கற்று ஜெயிப்பது எப்படி? என்பதை சொல்லிக்கொடுங்கள். பல தருணங்களில் பேசி ஆகவேண்டும்.

சில சூழ்நிலைகளை அமைதியாக இருக்கவேண்டும். எரிச்சல், குழப்பம் என மனம் சமநிலையில் இல்லாதபோது, அமைதியாக இருக்க பழகுங்கள்.

ஒரு பொம்மையாக இருந்தாலும் சரி, சின்ன பென்சில் ஆக இருந்தாலும், சரி அடுத்தவர்களின் பொருட்களை அனுமதி பெற்று பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துவிடுங்கள். நண்பர்கள் உறவினர்கள் என்று யாரிடமும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்கக்கூடாது என்பதைகுழந்தைகளுக்கு உணர்த்துங்கள். அடுத்தவர்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் எனவும் கற்றுக்கொடுங்கள்.

அடுத்தவர்களின் தவறுகளை விமர்சனம் செய்து சுட்டிக்காட்டுவது போல, தங்கள் தவறை அடுத்தவர்களின் விமர்சனம் செய்தாலும் புரிந்துகொண்டு இருக்கும் பண்பை பெறச்சொல்லிக் கொடுங்கள்.

சாரி சொல்லாமல் வளர்வதுதான் தன்மானம் என்று நினைக்க கூடாது. தவறு செய்துவிட்டால் தயங்காமல் மன்னிப்பு கேட்க பழக்குங்கள். அடுத்தவர்களின் தவறுகளை மன்னிக்கவும் .கற்றுக் கொடுங்கள் அதுவே அவர்களை உயரத்துக்கு கொண்டு செல்லும்.

அன்பானவர்கள் பேசுவதை முழுமையாக கவனித்து கேட்க வேண்டும் என்று உணர்த்துங்கள். குறுக்கே குறுக்கே பேசாமல் அவர்கள் பேசும் வரை காத்திருந்து. பதில் பேசுவதையும் பண்பாடாக சொல்லிக்கொடுங்கள்.

குழுவாக இணைந்து விளையாட ஊக்கப்படுத்துங்கள். அப்படிப்பட்ட தருணங்களில் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய சொல்லுங்கள். ஊக்கப்படுத்த சொல்லுங்கள் இதனால் குழுவில் உள்ள அன்பையும் தலைமைப் பண்பையும் வளர்க்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்டுப் பெரியவர்கள் 'சுமை' அல்ல; நம் வாழ்வின் 'சுயசரிதை'! உதாசீனப்படுத்தலாமா?
parenting-tips-for-kids

நல்ல நண்பனாக இருப்பது எப்படி? என்று கற்றுக் கொடுங்கள். நண்பர்களுக்கு இடையே எப்படி பேசுவார்கள் என்பதை, உங்கள் நண்பர்களை உதாரணம் காட்டி விளக்குங்கள். அடுத்தவர்களுக்காக விட்டுக்கொடுத்து அவர்களின் குறுக்கீடுகளை அனுசரித்து சண்டை போடுபவர்கள்தான் சமாதானமாக போய் தவறுகளை மன்னித்து ஒரு குழுவாக இணைந்து இருப்பதில் கிடைக்கும் நிறைவை அனுபவிக்க செய்யுங்கள்.

விளையாட்டு, படிப்பு / கல்வி தொடர்பான பணிகள் என்று எதிலும் பாதியில் விட்டுவிடாமல் உறுதியாக இருந்து செய்து முடிப்பது எப்படி? என்பதை புரியவையுங்கள். இது குழந்தைகளுக்கு எதிர்கால வாழ்க்கைக்கு உதவும்.

யாருடன் பேசினாலும் கண்களைப் பார்த்து பேச சொல்லுங்கள். இது குழந்தைகளின் கூச்ச சம்பவத்தை இளம் வயதிலேயே அகற்றி விடும்.

இத்தகைய குண நலன்களை தெரிந்து அவர்களை பயமில்லாமல் கூச்சமின்றி பேசவும், தைரியமாகவும் அனைவரிடமும் தயக்கமின்றி பேசும் தன்னம்பிக்கை குழந்தைகளுக்கு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com