வீட்டுப் பெரியவர்கள் 'சுமை' அல்ல; நம் வாழ்வின் 'சுயசரிதை'! உதாசீனப்படுத்தலாமா?

family-modern-lifestyle
family-modern-lifestyle
Updated on

காலசக்கரம் தினசரி வெகு வேகமாக சுழன்றுகொண்டே இருப்பதே நிஜம். அதற்கு இளைய தலைமுறைகளின் ஆதிக்கமனப்பான்மை, எடுத்தேன் கவிழ்த்தேன், எனும் வாழ்க்கைமுறை.

கூட்டுக் குடும்பங்கங்களில் இருந்து விலகல், சுயநல மனப்பான்மை, குறுகியவட்டம், சொந்தங்கள் வேண்டாம். பந்தங்கள் தேவையில்லை. இது ஒருமித்த கருத்து செல்போன் வாழ்க்கை.

அதேபோல கணவனின் மனமானது நான் என் குடும்பம், என் மனைவி, என் மாமியாா், என் மாமனாா், என் மைத்துனன், மனைவி சொல்லே வேதவாக்கு, என் ஏடி எம் காா்டு மனைவி கையில் அவளது, காா்டும் அவள் கையில் எனும் நிலைபாடு, கணவனோ மனைவி ஆட்டுவிக்கும் பொம்மை, சில நேரங்களில் மனைவியை அலுவலகம் கொண்டுபோய்விட அழைத்துவர ஊதியமில்லா டிரைவர், முடிந்தால அரைகுறை சுவையோடு சமையல், இல்லாவிடில் வெறும் மையல்தான்.

நீ சாப்பிட்டு விட்டு எங்களுக்கும் வாங்கிவா, குழந்தைகளுக்கு பீட்சா பர்க்கர் சொிமானம் ஆக மாத்திரை வாங்கி வரவும், என குறுஞ்செய்தி பறக்கிறது.

ஹோட்டல் பில் எவ்வளவு என தொலைபேசியில் மனைவியிடம் தொிவித்தால் ஜி பேயில் பணம் வருகிறது.

பெட்ரோல் பங்கிலும் இதே நிலை இப்படி கூட்டுக்குடும்ப பாரம் சுமக்காத இயந்திர கதி. வாழ்க்கையில் கூட்டுக் குடும்பமாவது, கத்தரிக்காயாவது, எல்லாம் வெறும் ஹம்பக். இப்படிப்பட்ட குடும்பசூழலில் பொியவர்களை யாா் பாா்த்துக்கொள்வது?

அவர்களின் உணர்வுகளுக்கு எப்படி வடிகால் தேடுவது, தற்கால இளைய தலைமுறையினர்களே கொஞ்சம் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்கள் உங்களோடு இருப்பதே நல்ல விஷயம்.

அவர்களின் ஆலோசனை மற்றும் அனுபவங்களுக்கு மதிப்பு கொடுங்கள். உங்களின் வரம்பு மீறிய கலாச்சாரங்கள், படாடோபங்கள் அவசரத்தில் அள்ளித்தெளித்த கோலங்கள், எதுவும் அவர்களுக்கு தொியவேண்டாம்.

அதே நேரம் அவர்களைக் காயப்படுத்திட வேண்டாமே!

நேரம் கிடைக்கும்போது அவர்களோடு கொஞ்சம் உரையாடுங்கள், அவர்களின் அனுபவங்களை முறைப்படி கேட்டுத்தொிந்துகொள்ளுங்கள். கூட்டுக்குடும்ப அனுபவ பகிா்வுகளை, அதன் சாதக பாதகங்களை கேட்டுத் தொிந்துகொள்வதே நல்ல செயல்பாடாக அமையும்"! அவர்களின் ஆசா பாங்களை கேட்டுதொிந்து கொள்ளுங்கள்.பழையகால உறவுமுறைகளை தொிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்டில் ஏர் கூலர் இருக்கா? சம்மரில் ஜில் என்று காற்று வர இந்த டிப்ஸை தெரிஞ்சுக்கோங்க..!
family-modern-lifestyle

பொதுவாக அவர்களை உதாசீனம் செய்யவேண்டாம். அவர்களது தேவையை பூா்த்திசெய்ய உதவியாளர்கள் ஏற்பாடு செய்யுங்கள், உறவு முறைகளிடம் பேசுங்கள்.

பொிவர்களின் உடல் நலனினின் அக்கறை கொண்டு அவர்களை மதிக்ககற்றுக் கொள்ளுங்கள். அடிக்கடி மருத்துவ சோதனைகளை செய்து அவர்களுக்கு தேவயான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுப்பததே நல்லது.

அவைகளை பரிவுடன் வேளாவேளைக்கு கொடுங்கள். தொலைக் காட்சிகளில் அவர்களுக்கு விருப்பமான நாடகம், ஆன்மிக நிகழ்வு இவைகளை பாா்த்தால் தடுக்கவேண்டாம். அவர்கள் மீது அன்பு செலுத்துங்கள் அவர்களை மனப்பூா்வமாக நேசியுங்கள்.

பேரன் பேத்திகளோடு அவர்களின் நேரம் செலவாகட்டும். அவர்கள் மனது புண்படும்படியாக பேசவேண்டாம் .

இதுபோன்ற பல நோ்மறை விஷயங்களுடன் வாழ்ந்து பாருங்கள். அதன் மூலம் புண்ணியத்தை சேமியுங்கள்.

அவர்களது சேமிப்புகள் அவர்களின் மறைவுக்கு பின்னர் உங்களுடையதாகட்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com