‘Pebbling' அன்பைத் தெரிவிக்க ஒரு க்யூட்டான வழி!

Pebbling' is a cute way to express love!
Pebbling' is a cute way to express love!Image Credits: X
Published on

பென்குயின்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் காதல் மொழியை ‘Pebbling’ என்று கூறுவார்கள். அதைப்போலவே மனிதர்களும் தங்களுக்குள் அன்பைப் பரிமாறிக்கொள்ள க்யூட்டான சில விஷயங்களைச் செய்வதுண்டு. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

அண்டார்டிகாவில் வாழும் பென்குயின்களின் காதல் மொழியைதான் Pebbling என்று கூறுவார்கள். இந்த பென்குயின் தன்னுடைய இணையான பென்குயினுக்காக அங்கிருக்கும் கற்களிலேயே பளபளப்பான, அழகான கல்லை தேடுமாம். அத்தகைய கல்லைக் கண்டுபிடித்ததும், அதைத் தன்னுடைய இணையாகக் கருதும் பென்குயினிடம் தன்னுடைய அன்பின் வெளிப்பாடாகக் கொடுக்குமாம். அதை அந்த பென்குயின் ஏற்றுக்கொண்டால், இருவரும் சேர்ந்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஆதாரமாக அது அமையும்.

இத்தகைய அழகிய காதல் மொழி மனிதர்களுக்கும் உண்டு. மனிதர்களும் தங்களுடைய அன்பையும், காதலையும் தன்னையறியாமலேயே Pebbling முறையில் செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தற்போது வளர்ந்திருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக நம்முடைய காதலையும், அன்பையும் நமக்குப் பிடித்தவர்களுக்கு எப்படித் தெரிவிக்கிறோம் தெரியுமா? இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூட்யூப், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் ரீல்ஸ், மீம்ஸ் ஆகியவற்றைத் தேடி அதில் நல்ல ரீல்ஸ், மீம்ஸ்களை நமக்குப் பிடித்தவர்களுக்குப் பகிர்வோம்.

நாம் அந்த நபருடன் வெகு நாட்களாகப் பேசியிருக்க மாட்டோம். எனினும், ‘அந்த மீம்ஸை பார்க்கும்போது உன் நினைவு வந்தது, உன்னுடன் பகிர வேண்டும் என்று தோன்றியது. I’m thinking of you’ என்று சொல்லும் வகையில் க்யூட்டாக செய்வதுதான் மனிதர்களின் Pebbling என்று சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
'Imposter syndrome' என்றால் என்ன தெரியுமா?
Pebbling' is a cute way to express love!

இப்படி நாம் செய்வதன் மூலம், ‘உன்னை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், உன் மீது அன்பு வைத்திருக்கிறேன், இது எனக்கு மகிழ்ச்சி தந்தது. இதை உன்னுடன் பகிரும்போது உனக்கும் மகிழ்ச்சி தரும் என்று நம்புகிறேன்’ என்று அந்த நபருக்கு சொல்லாமல் சொல்லும் செயலாகும்.

இது காதலர்களுக்குள் மட்டும்தான் நடக்க வேண்டும் என்றில்லை, நண்பர்கள், நம் மனதிற்குப் பிடித்தவர்களுடனும் இப்படி பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். Pebbling என்பது ஒரு அக்கறை மற்றும் இணைப்பின் வெளிப்பாடாகும். நீங்களும் இந்த Pebbling காதல் மொழியை யாரிடமாவது பயன்படுத்தியிருக்கிறீர்களா? நினைவுப்படுத்திப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com