Pets
Pets

செல்லப்பிராணிகள் – மனித மனதின் ஆழங்களை நிமிர்த்தும் 'உயிருள்ள மருந்துகள்' !

Published on

அண்மையில் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வு, மனிதர்களின் தனிமையை குறைக்கும் வல்லமை செல்லப்பிராணிகளுக்குப் பெரிதென இருப்பதாக தெரிவித்துள்ளது.

அண்மை காலத்தில் மாணவர்களும், தனிமையில் வாழும் முதியோர்களும் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு நெகிழும் மனங்களை மீட்டெடுக்க செல்லப்பிராணிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

தனிமையின் தீர்வாக செல்லப்பிராணிகள், தனியாக வாழும் ஒருவருக்கு, பேசவும் பகிரவும் ஏதுவாக ஒரு உயிருள்ள தோழன் மாதிரி, தேவைப்படும் நேரங்களில் மிகுந்த ஆதரவாக இருக்கின்றன.

"நான் தனிமையில் இல்லை" என்ற மனநிம்மதியை உருவாக்கி, மனச்சோர்வைக் குறைக்கும் சக்தி இவைக்குண்டு.

உணர்ச்சி ஆதரவை அளிக்கும் செல்லப்பிராணிகளை அன்புடன் தொடுவது அவைகளுடன் பேசுதல் போன்ற செயல்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

மற்ற மனிதர்களுடன் பகிர முடியாத சில உணர்ச்சிகளை இவை அமைதியாக ஏற்றுக்கொள்வதன் மூலம், ஒருவர் தன்னம்பிக்கையை மீண்டும் பெற முடிகிறது.

உடற்பயிற்சி மற்றும் உடல்நல மேம்பாடு

நாய்களை நடைப்பயிற்சி மேற்கொண்டு அழைத்துச் செல்லும் செயல்கள் ஆகியவை மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தையும் தூண்டுகின்றன. இதய நோய் அபாயம் குறைவது, இரத்த அழுத்தம் கட்டுப்படுவது போன்ற பலன்களும் கிடைக்கின்றன.

சமூக உறவுகள் வளர்ப்பு

உரிமையாளர்களுக்கிடையே உரையாடல் உருவாகும். ஒரு நாயை அல்லது பூனை ஒன்றை வளர்க்கும் அனுபவம், புதிய நண்பர்களை உருவாக்கும் வாய்ப்பாக அமைகிறது. இதுவும் தனிமையை குறைக்கும் மற்றொரு வழி ஆகும்.

மாணவர்களுக்கு சிறப்பு பலன்:

படிக்கும் மாணவர்களுக்கு, செல்லப்பிராணிகள் ஒரு நிலையான பாச உறவாக அமைவது மிக முக்கியமானது. படிப்பு அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமின்றி, ஒரு உயிரின் மீது பொறுப்புடன் செயல்படும் பழக்கத்தையும் இவை வளர்க்கின்றன.

செல்லப்பிராணிகள் வெறும் விளையாட்டு பொம்மைகள் அல்ல; அவை மனித மனதின் ஆழங்களை நிமிர்த்தும் உயிருள்ள மருந்துகள். மனநலன், உடல்நலம் மற்றும் சமூக உறவுகள் ஆகிய மூன்றிலும் இவை அளிக்கும் நன்மைகள் ஏராளம். இவற்றின் அன்பும் துணையும், தனிமையின் இருண்ட பரப்பை நம்பிக்கையின் ஒளியால் நிரப்புகின்றன.

மோனாஷ் பல்கலைக்கழக ஆய்வு இதையே உறுதி செய்கிறது.

இதையும் படியுங்கள்:
பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் விருப்பங்கள் - தேவையா? இது நன்மை பயக்குமா?
Pets
logo
Kalki Online
kalkionline.com