தங்கத்தை பிங்க் காகிதத்தில் மடித்துத் தருவது ஏன்? - பாரம்பரியமா? இல்லை அறிவியலா?

pink-paper-in-gold
pink-paper-in-gold
Published on

ங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் வளம், செல்வம் மற்றும் மரியாதைக்கான அடையாளமாக கருதப்படுகின்றது. இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஒரு உலோகம் அல்ல. சுபநிகழ்வுகளின் சின்னம்; பாதுகாப்பான முதலீடு. திருமணம், பூஜை, சடங்கு போன்ற முக்கிய தருணங்களில் தங்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இவ்வளவு மதிப்பு மிக்க பொருளை வாங்கும்பொழுது கடைக்காரர்கள் பிங்க் நிற காகிதத்தில் மடித்து தருவது வாடிக்கையாக உள்ளது. இந்த பழக்கம் பலகாலமாக இருந்து வருகிறது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விலைமதிப்பற்ற தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கும் பொழுது அவற்றை மற்ற பொருட்களிலிருந்து பிரித்து கவனமாக சேமிக்க பிங்க் நிற பேப்பர் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் ஒரு பொருளை பிங்க் நிற பேப்பரில் சுற்றினால் அது மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் மதிப்பு வாய்ந்தது என்றும் நம்பப்பட்டது.

நிற உளவியல் அடிப்படையில் பிங்க் நிறம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஒரு சிறப்பு பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. வணிக அனுபவத்தின் அடிப்படையில் இந்த ரோஜா நிற காகிதம் வணிகத்திற்கும் ஆதாயம் அளிப்பதை உறுதி செய்துள்ளனர். வணிக ரீதியாகவும் பிங்க் நிற பேப்பர் பல நன்மைகளை வழங்குகிறது. இதில் அழுக்கு சுருக்கம் அல்லது மடிப்புகள் எளிதில் தெரியாது. செலவு குறைவாகவும் இருக்கும்.

தங்க நகைகளின் மஞ்சள் நிறத்தைக்கூட இந்த பிங்க் நிற காகிதம் அழகாக பிரதிபலிக்கிறது. இதனால் நகைகள் மிகவும் பிரகாசமாக தோன்றுகின்றன. வேறு நிறங்களில் இதுபோன்ற விளைவுகள் ஏற்படுவதில்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர். இது நகைகளின் பளபளப்பை தக்கவைக்கவும், பார்வையில் அதிக கவர்ச்சியாக காட்டவும் செய்யப்படும் ஒரு பாரம்பரிய மற்றும் அறிவியல் கலந்த நுட்பமாகும்.

நகைகளுக்கு ஒரு விதமான ராயல் தோற்றத்தைைத் தரும் பிங்க் நிறம் தங்கம் மற்றும் வெள்ளியின் நிறத்தை மேம்படுத்தி பிரகாசமாகவும், மதிப்பு மிக்கதாகவும் தோற்றமளிக்க உதவுகிறது. பிங்க் பேப்பரில் உள்ள லேசான பூச்சு காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் வேதிப்பொருட்களால் நகைகள் மங்குவதைத் தடுத்து, நீண்ட நாட்களுக்கு ஜொலிக்க செய்கிறது.

பிங்க் நிறத்தின் பின்னணியில் தங்கம் அதிக மஞ்சள் நிறத்துடனும், வெள்ளி அதிக வெள்ளையாகவும், கவர்ச்சியாகவும் காட்சியளிக்கும். வாடிக்கையாளர் களுக்கு நகையின் தரத்தையும், அழகையும் மேம்படுத்தி காட்ட இது ஒரு சிறந்த மார்க்கெட்டிங் யுக்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
ஃப்ரிட்ஜ் பராமரிப்பு: அழுக்கு படிந்த ரப்பர் மற்றும் கைப்பிடிகளை மின்னச் செய்யும் மேஜிக் டிப்ஸ்!
pink-paper-in-gold

இளஞ்சிவப்பு நிறத்திற்கு பதிலாக பிற வண்ணக் காகிதங்களை பயன்படுத்தினால் வெள்ளி அவ்வளவு சிறப்பாக பிரகாசிக்காது என்பதுடன் வெள்ளியின் வெள்ளை நிறத்தையும் குறைத்தும் காட்டும். வெள்ளை மற்றும் மஞ்சள் போன்ற பிற நிறக் காகிதங்களில் வெள்ளி மற்றும் தங்க நகைகளை மடித்து தருவதன் மூலம் அவற்றின் நிறத்தையும், பளபளப்பையும் அதிகரித்து காட்டாமல் சற்று குறைத்துதான் காட்டும். 

இளஞ்சிவப்பு என்ற பிங்க் நிறத்தைத் தவிர மற்ற வண்ணங்கள் நகைகளின் பளபளப்பை குறைத்து மந்தமாக காட்டும் என்பதால் தான் இளஞ்சிவப்பு காகிதத்தை மட்டுமே நகை கடைக்காரர்கள் தேர்வு செய்கின்றனர்.

அத்துடன் தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் வளம் செல்வம் மற்றும் மரியாதைக்கான அடையாளமாக கருதப்படுகிறது. பொருட்கள் மகாலட்சுமியின் அடையாளமாகக் கருதப்படுவதால் பிங்க்/சிவப்பு நிறங்கள் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இவ்வாறு பாரம்பரியம், மனித மனதை பாதிக்கும் நிற உளவியல் மற்றும் வணிக புத்திசாலித்தனம் போன்ற காரணங்களால் தான் இன்றளவும் பிங்க் நிறப் பேப்பரில் சுற்றிக் கொடுக்கும் பழக்கம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com