Marriage
Marriage

திருமணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்!

திருமணம் என்பது ஒவ்வொரு வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். என்னில் இதுதான் ஒரு மனிதனின் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. எனவே இதில் ஏதேனும் தவறு நடந்துவிட்டால் மொத்த வாழ்க்கையும் மோசமாகிவிடும் என்பதால், திருமணம் சார்ந்த முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும். குறிப்பாக திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் பல விஷயங்களை விவாதித்து தெளிவு பெற வேண்டியது அவசியம். அத்தகைய விஷயங்கள் என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம். 

1. ஆசை மற்றும் இலக்குகள்: நீங்கள் திருமண உறவில் நுழையப்போகிறீர்கள் என்றால், உங்கள் துணையின் ஆசைகள் கனவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். இதை அனைவருமே பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியமானது. இதன் மூலமாக தம்பதிகள் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி சார்ந்த விஷயங்களை விவாதித்து, அதற்கு ஏற்றபடி முன்கூட்டியே முடிவு எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் அவர்களது ஆசைகள் மற்றும் இலக்குகளை அடைய இது வழிவகுக்கும்.

2. எத்தகைய வேலை: ஒருவர் எத்தகைய வேலை செய்கிறார் என்பது உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே திருமணத்திற்கு முன்பே வேலை குறித்த விஷயங்களை முழுவதுமாகக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சில வேலைகளில் அடிக்கடி வெளியூர் போக வேண்டி இருக்கும். ஒரு சில வேலைகளில் இடமாற்றம் அவ்வப்போது நடக்கும். எனவே வேலையில் உள்ள சவால்களை பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்வது மூலமாக, ஒர்க் லைஃப் பேலன்ஸ் சமநிலையை முன்கூட்டியே ஏற்படுத்திக்கொள்ள முடியும். 

3. குடும்பம்: குடும்பங்களை பற்றி மணமகள் மற்றும் மணமகனின் பெற்றோர்கள் தெரிந்து கொள்வதை விட, திருமண உறவில் நுழையப்போகும் இருவரும் முன்கூட்டியே தெரிந்து கொள்வது முக்கியமாகும். குறிப்பாக பெண்கள் தன் குடும்பத்திலிருந்து புதிய குடும்பத்திற்கு செல்ல போகிறார்கள் என்றால், குடும்பத்தில் உள்ள கட்டுப்பாடுகள் பின்னணி மற்றும் கலாச்சாரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது, அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்த முடிவை எடுக்க உதவும்.  

இதையும் படியுங்கள்:
வங்கியில் வைப்பு நிதி தொடங்கணுமா? இந்த 12 விஷயங்களைக் கவனியுங்க!
Marriage

4. நிதி மற்றும் வருமானம்: திருமண உறவில் நிதி மற்றும் வருமானம் பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும். பணம் என்ன உண்மையான மகிழ்ச்சியைக் கொடுத்துவிடுமா? என்ற கேள்வி கேட்பதற்கு நன்றாக இருக்கும், ஆனால் திருமணம் செய்துவிட்டாலே பணத்தின் தேவை அதிகம் இருக்கும் என்பதால், அதை அவ்வளவு எளிதில் நாம் விட்டுவிட முடியாது. எனவே ஆணும் பெண்ணும் நிதி மற்றும் வருமானம் சார்ந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் திருமணத்திற்கு முன்பே பகிர்ந்து கொள்வது முக்கியம். 

இது தவிர உங்களுக்கு எதுபோன்ற விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களோ, அவை அனைத்தையும் வெளிப்படையாகக் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. திருமண உறவை அவ்வளவு எளிதாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். முன்கூட்டியே நல்ல மனநிலையுடன் இல்லற வாழ்க்கையில் நுழைவது நல்லது என்பதால், தைரியமாகவும் வெளிப்படையாகவும் இருப்பதில் தவறில்லை.

logo
Kalki Online
kalkionline.com