பக்தி மணம் கமழச் செய்யும் பூஜை அறை இன்டீரியர் டிசைன்கள்!

Interior design for pooja room
Interior design for pooja roomImage Credits: Livspace

ம்மைக் காத்து ரட்சிக்கும் கடவுளை நாம் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்தானே? அதனால்தான் தற்போது அனைத்து வீடுகளிலும் பூஜையறைக்கு என்று தனி இடம் ஒதுக்கப்படுகிறது. அப்படி அமைக்கப்படும் பூஜை அறையை எப்படி அழகாக மாற்றுவது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பூஜை அறையை உருவாக்குவதற்கு இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, மரத்தைப் பயன்படுத்தி வடிவமைப்பது, Counter top செய்ய கிரேனைட் போன்ற இயற்கையான கல்லைப் பயன்படுத்தலாம்.

Backlit செய்வதற்கு Semi transparent sheet வெட்டி வைத்தால் போதுமானது. இதை செய்யும்போது அதிகமான டிசைன்கள் பயன்படுத்தாமல் சிம்பிளாக செய்வது அழகாகத் தெரியும்.

பூஜை அறையாக செய்யாமல், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு Pocket door சரியாக இருக்கும். பூஜை செய்யும்போது கதவை திறந்தே வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கதவை உள்ளே தள்ளி வைத்துக்கொள்ளும் வசதியும் இதில் உண்டு.

பூஜையறைக்குப் பயன்படுத்தும் நிறம் மன அமைதியைக் கொடுக்க வேண்டும். பூஜையறை சிறிதாக இருக்கும் என்பதால் மென்மையான மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களைப் பயன்படுத்தலாம்.

பூஜையறையின் கதவுகள் மரத்தால் செய்யப்படுவதால் அதில் பயன்படுத்தும் டிசைன்கள் மற்ற கதவுகளை விட வேறுபட்டு இருப்பது அழகைக்கூட்டும். கதவில் மணி வைத்திருப்பது, சிக்கலான வடிவமைப்புகள் போன்ற பாரம்பரியமான டிசைன்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். Transparent glass doors பயன்படுத்துவது தற்போதுள்ள மார்டன் ஆப்சென்னாக உள்ளது. பூஜையறையின் கதவுகளை ஒரே கதவாக அமைக்காமல் இரண்டு கதவுகள் பயன்படுத்தி மூடுவது போல அமைப்பது சிறந்தது.

பூஜையறையில் பயன்படுத்தும் விளக்குகள் மிகவும் முக்கியமாகும். இது அந்த அறைக்கே பாசிட்டிவான லுக்கை கொடுக்கும். LED விளக்குகளை நுழைவாயிலில் அமைப்பது, Chandelier அமைப்பது, Warm lights பயன்படுத்துவது மிகவும் அழகாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பணம் சேர வேண்டுமா? அப்போ வீட்டின் இன்டீரியரில் இந்த மாற்றங்களை செய்யுங்கள்!
Interior design for pooja room

பூஜையறையின் தரைக்கான அலங்காரத்திற்கு ரங்கோலி கோலங்களை மாறுபட்ட நிறத்தில் அமைக்கவும், மலர்களால் நிரப்பப்பட்ட உருளியை வைப்பது மேலும் அழகைக் கூட்டும்.

பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைப்பதே சிறந்ததாகும். இது சிவபெருமானுக்கு உகந்த திசையாக உள்ளதால் புனிதமாகக் கருதப்படுகிறது. பூஜையறையில் இருக்கும் சிலைகள் வடக்கு அல்லது கிழக்கு திசையைப் பார்த்து இருக்க வேண்டும். ஒவ்வொரு சிலைக்கும் நடுவிலே போதுமான இடம் இருக்க வேண்டும். பூஜையறையை சுத்தமாக வைத்துக்கொள்வது பூஜையறைக்கு தெய்வீகத் தன்மையைத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com