பணம் சேர வேண்டுமா? அப்போ வீட்டின் இன்டீரியரில் இந்த மாற்றங்களை செய்யுங்கள்!

Vastu interior designs for money attraction
Vastu interior designs for money attractionImage Credits: Livspace

வீட்டை கட்டும்போதே இன்டீரியர் டிசைனில் சில மாற்றங்கள் செய்வதால், பணம் சேரும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

கண்ணாடி: வீட்டில் கண்ணாடி வைப்பதில் நிறைய நன்மைகள் இருக்கின்றது. உதாரணத்திற்கு, பணம் இருக்கும் இடத்திற்கு எதிரே கண்ணாடியை மாட்டி வைப்பதன் மூலம் பண வரவு அதிகரிக்கும். படுக்கையின் எதிரிலே கண்ணாடி வைக்கக்கூடாது. இதை அபசகுணமாக கருதுகிறார்கள்.

தண்ணீர்: Fish tank, indoor fountain, water painting தண்ணீர் என்பது பாசிட்டிவ் எனர்ஜியின் அடையாளமாகக் இருக்கிறது. இது பணப்புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதை வடக்கிழக்கு திசையில் வைப்பது நல்லது. அடிக்கடி தண்ணீரை மாற்றி தூய்மையாக வைத்துக்கொள்வது சிறந்ததாகும்.

கிரிஸ்டல்: வீட்டில் Citrine and Pyrite ஆகிய கிரிஸ்டல்ஸ் வைப்பதன் மூலம் பணப்புழகத்தை அதிகரிக்கும். இதை வீட்டின் வாசலில் வைப்பது இன்னும் நல்லதாகும்.

குப்பை சேராமல் பார்த்துக்கொள்வது: வீட்டை எப்போதுமே சுத்தமாக குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அப்போதுதான் பணம் சேரும். முக்கியமாக, வடகிழக்கு திசையில் குப்பைகள் இருக்கவே கூடாது. இது வீட்டிற்கு பணப்புழக்கம் வருவதை தடை செய்துவிடும்.

லாக்கர்: உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டும் என்று நினைத்தால் லாக்கரை தென்மேற்கு மூலையில் வைக்கவும். இந்த இடம் Earth element stability ஐ குறிக்கிறது. அது மட்டுமில்லாமல், லாக்கரை மேற்கு மற்றும் தெற்கு திசையை பார்த்து திறக்கக் கூடாது. இது அதிக பண இழப்பை ஏற்படுத்தும்.

வாசற்கதவு: வாசற்கதவு வழியாகத்தான் நாம் சொந்த பந்தங்களையும் மற்றும் பாசிட்டிவ் எனர்ஜியையும் வரவேற்கிறோம். கதவின் தாழ்ப்பாள் சரியாக வேலை செய்கிறதா? என்று பார்த்துக்கொள்ள வேண்டும். கதவில் ஏதேனும் விரிசல் விழுந்திருக்கிறதா? என்று பார்த்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. Wind chimesஐ வீட்டின் வாசற்கதவு அருகே கட்டி வைப்பது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
பாத்ரூமில் செய்யப்படும் அழகிய இன்டீரியர் டிசைன் ஐடியாஸ்!
Vastu interior designs for money attraction

லீக்கேஜ் சரிசெய்ய வேண்டும்: வீட்டின் குழாயில் இருந்து தண்ணீர் சொட்டுவதோ அல்லது லீக்கேஜ்ஜோ இருக்கவே கூடாது. இது பண வரவை தடை செய்யும். எனவே, சின்ன லீக்கேஜ் வீட்டில் இருந்தாலும் அதை உடனடியாக சரிசெய்து விடுவது நல்லது.

கிச்சன்: வீட்டில் கிச்சனை தென்கிழக்கு திசையில்தான் கட்ட வேண்டும். இதற்குப் பயன்படுத்த வேண்டிய நிறம் சிவப்பு, ஆரஞ்ச், பிங்க் ஆகியவையாகும். இது பண வரவை அதிகரிக்கும்.

காப்பர் ஸ்வஸ்திக்: வீட்டில் காப்பர் ஸ்வஸ்திக்கை மாட்டி வைப்பதன் மூலம் பண வரவு ஏற்படும். இதை தென்கிழக்கு திசையில் மாட்டுவது சிறந்தது. காப்பர் ஸ்வஸ்திக்கை வீட்டில் மாட்டி வைப்பது பணம் சம்பந்தமான எல்லா தடைகளையும் போக்கி பண வரவை அதிகரிக்கச் செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com