
நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளில் சில சமயம் நல்லதும் இருக்கும், கஷ்டங்களும் ஏற்படும். எதுவாக இருந்தாலும் அதை நினைத்து வருந்தாமல் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், நம்முடைய பாசிட்டிவான மனப்பான்மை, பாசிட்டிவான வார்த்தைகள், பாசிட்டிவான வைப்பிரேஷன் அந்த கஷ்டங்களையும் நல்லதாக நமக்கு மாற்றித் தரும்.
1994 ல் ஜப்பான் விஞ்ஞானியான Masaru Emoto என்பவர் தரமான ஆராய்ச்சி ஒன்றை செய்தார். நாம் பேசும் வார்த்தைகள் தான் நம்மை சுற்றியுள்ள விஷயங்களை பாதிக்கும் என்பதை அவர் நிரூபித்தார். இதற்கு முதலில் ஒரு குழுவை அழைத்து அவர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை கொடுத்து நெகட்டிவ் வார்த்தைகளை மட்டுமே அந்த தண்ணீர் பாட்டிலிடம் சொல்ல சொன்னார்.
உதாரணத்திற்கு, I hate you, you disgust me... போன்ற வார்த்தைகளாகும். இன்னொரு பக்கம் இன்னொரு குழுவிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை கொடுத்து பாசிட்டிவ் வார்த்தைகளை மட்டுமே பேச சொன்னார். உதாரணத்திற்கு, I love you, Thank you போன்ற வார்த்தைகள் ஆகும்.
இப்போது அந்த இரண்டு தண்ணீரையும் முழுமையாக உறைய வைத்து மைக்ரோஸ்கோப்பில் வைத்து பார்க்கும் போது, நெகட்டில் வார்த்தைகள் சொல்லப்பட்ட தண்ணீர் முழுவதும் திரிந்த நிலையில் அதன் வடிவமும், பாசிட்டிவான வார்த்தைகளை கேட்ட தண்ணீரில் அழகான கிரிஸ்டல் வடிவங்களும் தெரிந்ததாம். இதனால் அவர் சொன்னது என்னவென்றால், தண்ணீருக்கும் உணர்வுகள் உண்டு. நாம் சொல்லும் வார்த்தைகளை புரிந்துக் கொள்ளும். அந்த வார்த்தைகளின் தாக்கம் அவற்றை பாதிக்கும் என்று கூறினார்.
இதில் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நம்முடைய உடலில் 70 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது. எனவே, நாம் தினமும் பேசக்கூடிய வார்த்தைகள் பாசிட்டிவாக இருந்தால் தான் நம்முடைய எனர்ஜி, ஆரோக்கியம், வாழ்க்கை எல்லாம் நல்லப்படியாக இருக்கும்.
ஆகவே, இனிமேல் பேசும் போது பாசிட்டிவான வார்த்தைகளை அன்போடு பேசுங்கள். நம்மிடமும், நம்மை சுற்றியுள்ளவர்களிடமும் அன்பாக இருப்பது, அன்பான வார்த்தைகளை பேசுவது நம்முடைய நாளை மகிழ்ச்சியாக மாற்றும் என்றால் ஏன் அதை செய்யக்கூடாது? அப்படி பேசி தான் பாருங்களேன். வாழ்க்கை செமையாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.