பழைய சுவிட்ச் போர்டையும் புதியதுபோல மின்ன வைக்கும் 5 நிமிட மேஜிக்!

மஞ்சள் நிறமாக மாறிய பிளாஸ்டிக் சுவிட்சுகளை மீண்டும் பளிச்சென மாற்றும் அற்புத வழிகள்.
சுவிட்ச் போர்ட் - , Stain removal tips
சுவிட்ச் போர்ட் - , Stain removal tips
Updated on

வீட்டின் சுவிட்ச் போர்டுகள் அடிக்கடி தொடுதல், தூசி காரணமாக மஞ்சள் நிறமாக மாறுகின்றன. அவற்றை பாதுகாப்பாக சுத்தம் செய்ய உலர்ந்த துணி, மென்மையான மைக்ரோ பைபர் துணி, லேசான சோப்பு கரைசல், சமையல் சோடா, வெள்ளை வினிகர் போன்றவற்றை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அதிக தண்ணீர், கடுமையான துப்புரவாளர்கள் தவிர்த்து, சுத்தம் செய்த பின் நன்றாக உலர்த்துவது அவசியம்.

வீட்டின் இருளை நீக்கி வெளிச்சத்தை கொண்டுவர சுவிட்சுகள் வழியாக மின்சாரத்தை பாய்ச்சுகிறோம். அதனால் அடிக்கடி தொடுவது மற்றும் தூசியின் காரணமாக சுவிட்சுகள் அழுக்கு படிந்து மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றன. அத்தகைய மஞ்சள் நிற சுவிட்சுகளை பாதுகாப்பாக துடைப்பது மிகவும் அவசியம் அதற்கான எளிய வழிகளை இப்பதிவில் காண்போம்.

உலர்ந்த துணியுடன் தொடங்கவும்

கடினமான சொரசொரப்பான துணிகளை பயன்படுத்தாமல், மென்மையான மைக்ரோ பைபர் துணியால் சுவிட்ச் போர்டின் வழவழப்பான பிளாஸ்டிக் மேல் பூச்சிலுள்ள தூசியை அகற்றவும்.

மென்மையான சோப்பு கரைசலை முயற்சிக்கவும்

துணியை நீரில் ஊற வைக்காமல் பாத்திரம் கழுவும் மென்மையான சோப்பை சில துளிகளை தண்ணீரில் கலந்து லேசாக ஒரு துணியில் நனைத்து பலகையை துடைக்க வேண்டும்.

சமையல் சோடாவை கவனமாகப் பயன்படுத்தவும்

சமையல் சோடாவையும் தண்ணீரையும் சிறிய கெட்டியான பசை போல தயாரித்து பிடிவாதமான கறை உள்ள சுவிட்ச் போர்டின் மேற்பகுதியில் மென்மையான துணியில் தடவி பின்னர் மெதுவாக துடைக்கவேண்டும்.

சுவிட்சுகளைச் சுற்றி சுத்தம் செய்யவும்

உலர்ந்த பஞ்சுக்குச்சியை சுவிட்ச் போர்டின் விளிம்பில் உள்ள குறுகிய பகுதிகளில் சுத்தம் செய்வதால் மென்மையாக செயல்பட்டு அடிக்கடி சேரும் தூசிகள் அகற்றப்பட்டு அழுக்கு உள்ளே தள்ளப்படுவது தவிர்க்கப்படும்.

சுவிட்ச் போர்ட் - , Stain removal tips
சுவிட்ச் போர்ட் - , Stain removal tips

அழுக்குக்கு வெள்ளை வினிகரைப் பயன்படுத்தவும்

சிறிதளவு வெள்ளை வினிகரை ஒரு துணியில் தடவி பலகையின் மீது தெளிப்பதற்கு பதிலாக துடைத்து உலர்த்தினால் சுவிட்ச் போர்டின் மேல் உள்ள அழுக்கு மறைந்துவிடும்.

அதிகப்படியான தண்ணீரைத் தவிர்க்கவும்

மின்சாரமும் திரவமும் ஆபத்தான கலவையாக இருப்பதால் சுவிட்ச் பேனல்களின் மீது சுத்தம் செய்யும் திரவங்களை நேரடியாக ஊற்றாமல் ஈரமான துணிகளை பயன்படுத்தி மேற்பரப்பையை சுத்தப்படுத்தி அழுக்கை நீக்கலாம்.

கடுமையான துப்புரவாளர்களைத் தவிர்க்கவும்

சுவிட்ச் போர்டின் பளபளப்பான மேற்பரப்பை வீரியமிக்க திரவங்களும் சொரசொரப்பான தேய்க்கும் பொடிகளும் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தி ம தேய்ந்தும் திட்டு திட்டாகவும் ஆக்கி சுவிட்ச் போர்டை மங்கச் செய்யும் என்பதால் கடுமையான சுத்தம் செய்யும் திரவங்களை தவிர்க்க வேண்டும்.

மென்மையான பல் துலக்கியைப் பயன்படுத்தவும்

சுவிட்ச் போர்டின் மூலை மற்றும் பள்ளங்களில் உள்ள அழுக்கை அகற்ற பல் துலக்கும் தூரிகைக் கொண்டு மென்மையாக தேய்த்து சுத்தப்படுத்தினால் அழுக்குகள் அகன்று பளிச்சென காட்சி தரும்.

மேற்பரப்பைச் சரியாக உலர்த்தவும்

சுவிட்ச் போர்டை சுத்தப்படுத்திய பிறகு மைக்ரோ பைபர் துணியை பயன்படுத்தி சுவிட்ச் போர்டை உலர்த்தி அதனைச் சுற்றி எந்த திரவமும் இல்லை என்பதனை உறுதிசெய்து கொள்வது மிகவும் பாதுகாப்பானது.

தவறாமல் சுத்தம் செய்யவும்

வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டின் புதிய தோற்றத்தை நிரந்தரமாக தக்க வைக்க இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தூசியை துணியால் துடைப்பது அழுக்கு சேர்வதை தடுப்பதோடு வெள்ளை பிளாஸ்டிக் மஞ்சள் நிறமாக மாறுவதையும் தடுக்கும்.

சுவிட்ச் போர்டை சுத்தம் செய்யும்போது பிரதான மின் இணைப்பை அனைத்து வீட்டு சுத்தம் செய்வது மிகவும் பாதுகாப்பானது. வீட்டின் அனைத்து பகுதிகளோடு சுவிட்ச் போர்ட்டையும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தினால் வீடு அழுக்கின்றி அற்புதமாக காட்சி தரும்.

வீட்டின் அழகைக் கெடுக்கும் பிடிவாதமான அழுக்குகளை நொடியில் போக்கி, எந்தவித இரசாயனச் சேதமும் இன்றி சுவிட்ச் போர்டுகளை எப்போதும் புதியது போல் வைத்திருக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com