வாகன ஓட்டிகளுக்கான மழை கால எச்சரிக்கை!

Rainy season warning
Rainy season warning
Published on

மழை காலம் நெருங்கி கொண்டிருக்கிறது, ஈரமான மற்றும் வழுக்கும் சாலைகளால் ஏற்படும் சவால்களை கையாள உங்கள் வாகனங்கள் அதற்கேற்றவாறு தயாராக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் செய்யும் முறையான பராமரிப்பு உங்கள் பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்கள் பைக் மற்றும் காரின் ஆயுளையும் நீட்டிக்கும். அப்படி மழை காலம் தொடங்கும் முன் எடுக்க வேண்டிய சில அத்தியாவசிய நடவடிக்கைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

கார்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு:

1. டயர் கிரிப் மற்றும் பிரஷரைச் சரிபார்க்கவும்: டயர்கள் தான் சாலையுடனான உங்கள் முதன்மை தொடர்பு, மழைக்காலத்தில் அவற்றின் நிலையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஈரமான சாலைகளில் போதுமான பிடியை வழங்குவதற்கு உங்கள் டயர்கள் போதுமான டிரெட் டெப்த் (tread depth) இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மற்றும் டயருக்கேற்ற சரியான காற்று அழுத்தத்தை தவறாமல் சரிபார்த்து பராமரிக்கவும், இது சறுக்கல் மற்றும் பல விபத்துகளை தடுக்க வழிவகுக்கும்.

2. பிரேக்குகளை பரிசோதிக்கவும்: ஈரமான சாலைகள் பொதுவாக பிரேக் பிடிக்கும் போது உங்களுக்கு சில நேரங்களில் கிரிப் கிடைக்காமல் போகலாம், ஆகையால் அதற்கேற்ற திறமையான பிரேக்குகளை பராமரிப்பது மிகவும் அவசியம். அதற்கு உங்கள் பிரேக் சிஸ்டத்தை பரிசோதித்து, தேவைப்பட்டால் சர்வீஸ் செய்யுங்கள். காரணம் தேய்ந்து போன பிரேக் பேடுகள் அல்லது செயலிழந்த பிரேக்குகள் விபத்துகளின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கலாம்.

3. வைப்பர்கள் (Wiper) மற்றும் விளக்குகள் செயல்படுவதை உறுதி செய்யவும்: கனமழையின் போது நீங்கள் சாலையை பார்த்து ஓட்டும் போது அடிக்கடி இடையூறு ஏற்படும். அதனால் உங்கள் வைப்பர் பிளேட்கள்(Wiper) தேய்ந்துள்ளதா என்பதை சரி பாருங்கள், தேவைப்பட்டால் அவற்றை மாற்றுங்கள். பின் ஹெட்லைட்கள், டெயில்லைட்கள் மற்றும் இண்டிகேட்டர்கள் உட்பட அனைத்து விளக்குகளும் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
மழைக் காலம் வருதே! முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருப்போமா?
Rainy season warning

4. பேட்டரி பராமரிப்பு: வைப்பர்கள், விளக்குகள் மற்றும் பிற மின் பொருட்களின் பயன்பாடு காரணமாக மழைக்காலங்களில் உங்கள் காரின் பேட்டரியில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதனால் உங்களின் கார் பேட்டரியின் சார்ஜை தவறாமல் சரிபார்த்து கொள்ளுங்கள், பின் என்ஜின் ஸ்டார்ட் செய்யும் போது ஏதேனும் சிக்கல்கள் கொடுக்கவோ அல்லது நீங்கள் அதை உணர தொடங்கினால் அதை மாற்றி விடுங்கள்.

5. துரு தடுப்பு: ஈரம் அடிக்கடி உங்கள் காரின் அடிப்பகுதியில் அடிக்கடி படுவதால் துரு உருவாகலாம். அதனால் துரு எதிர்ப்பு பூச்சு(anti-rust coating) மற்றும் சேறு போன்ற அழுக்குகளை அகற்ற உங்கள் காரை தவறாமல் கழுவுங்கள் இதனால் துரு உருவாவதை தடுக்க முடியும்.

பைக்குகளுக்கான அத்தியாவசிய பராமரிப்பு:

1. டயர் மற்றும் பிரேக் சிஸ்டம் சோதனைகள்: கார்களைப் போலவே, பைக்குகளுக்கும் ஈரமான சாலைகளில் சிறந்த பிடிப்புக்கு நல்ல டிரெட் டெப்த்(Tread Depth) கொண்ட டயர்கள் தேவை. மற்றும் டயர் அழுத்தத்தையும் தவறாமல் சரிபார்த்து, பிரேக் சிஸ்டம் சிறப்பாக செயல்படுகிறதா என்பதையும் உறுதி செய்யவும்.

2. செயின் மற்றும் ஸ்ப்ராக்கெட் பராமரிப்பு: மழைக்காலத்தில் செயின் மற்றும் ஸ்ப்ராக்கெட்(sprocket) துருப்பிடித்து தேய்ந்துவிடும். ஆகையால் துருப்பிடிப்பதை தடுத்து, சீரான செயல்பாட்டை உறுதிப்படுத்த அவற்றைத் தொடர்ந்து சுத்தம் செய்து ஆயில்(Chain Lube) போட்டு கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
மழைக் காலம் நெருங்கிவிட்டது... என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீங்கள் எடுத்துள்ளீர்கள்!
Rainy season warning

3. மின் அமைப்பு சரிபார்ப்பு: விளக்குகள் மற்றும் indicators உட்பட அனைத்து மின் பொருட்களும் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும். சில நேரங்களில் தண்ணீர், ஷார்ட் சர்க்யூட் களை(Short Circuit) ஏற்படுத்தலாம், எனவே பைக்கில் உள்ள அனைத்து மின்சார அமைப்பை நல்ல நிலையில் வைத்திருப்பது அவசியம்.

எனவே, இந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், மழைக்காலத்தில் பாதுகாப்பான மற்றும் மென்மையான ஓட்டுநர் அனுபவத்தை உங்களால் பெற முடியும். வழக்கமான பராமரிப்பு உங்கள் வாகனத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கும் மற்றும் சாலையில் உள்ள மற்றவர்களின் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com