கொரியன் உணவு, கொரியன் அழகு சாதன பொருள்கள், கொரியன் உடைகள், கொரியன் Accessories என கொரியன் கலாச்சாரங்களும் வாழ்க்கைமுறைகளும் இந்தியாவில் மட்டுமில்லாமல் பல நாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. இம்மாதிரியான கொரியன் கலாச்சாரங்களை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதில் (பரப்புவதில்) K- சீரிஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் கொரியன் சீரிஸ்களுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. கொரியன் சீரியஸ்களை அதிகம் விரும்பிப் பார்ப்பது பெரும்பாலும் பெண்களாகத் தான் இருப்பார்கள். அது ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா?
கொரியன் சீரிஸில் வருகின்ற அழகான இடங்களுக்காகவோ அல்லது அந்த சீரியஸில் காட்டப்படும் லைஃப்ஸ்டைலுக்காகவோ பெண்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படுகின்றன என்று நாம் யூகித்து வைத்திருப்போம். ஆனால், அதையும் தாண்டி ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
பெண்களால் அதிகமாக விரும்பிப்பார்க்கப்படும் கொரியன் சீரிஸ்களில், ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்ற ஆணோ, பெண்ணோ அதில் 100 சதவீதம் உறுதியாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையில் அவர்கள் இருந்தாலும் தங்களுடைய பார்ட்னர்க்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்களுடைய பார்ட்னர் மீது அக்கறை செலுத்துவதை முழுநேர வேலை மாதிரி செய்துகொண்டிருப்பார்கள். தங்கள் பார்ட்னர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விசயத்திலும், செயலிலும், எடுக்கும் முடிவுகளிலும் ரொம்ப கவனமாக இருப்பார்கள்.
தங்களுடைய பார்ட்னருக்கு support செய்வதற்காக எந்த ஒரு எல்லைக்கும் அதாவது எந்த extreme level-க்கும் போயிட்டு வருவார்கள். தங்களுடைய பார்ட்னரின் வேலை, கனவு, என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கும், அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பு, மரியாதை கொடுத்தும் நடத்துவார்கள்.
தங்கள் பார்ட்னரை ஒருபோதும் அசால்டாக அதாவது அலட்சியமாக எடுத்துக்கொள்ளவும் மாட்டார்கள். அவர்களை அவ்வாறு நடத்தவும் மாட்டார்கள். அவர்கள், ரிலேஷன்ஷிப் என்று வரும்பொழுது அதுக்காக நிறைய முதன்மைத்துவம் கொடுப்பார்கள். தங்களுடைய பார்ட்னரை மதிப்புமிக்க ஒருவராக நடத்துவார்கள். இதுபோன்ற மதிப்புமிக்க காரணங்களுக்காகவும் பெண்கள் கொரியன் சீரிஸை விரும்பிப் பார்க்க்கிறார்கள். அதோடு, கொரியன் கலாச்சரம் மற்றும் வாழ்க்கைமுறையின் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாகவும் பெண்களால் கொரியன் சீரிஸ் விரும்பிப்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, காரணம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்களும் பெண்களை கொரியன் சீரிஸ்களில் காட்டும் அளவிற்கு நடத்தாவிட்டாலும், அவர்களின் ஒவ்வொரு உணர்வுக்கும், கனவுக்கும், வேலைக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவர்களை அலட்சிய நோக்கத்துடன் நடத்தாமல் இருப்பது, ஒரு ரிலேஷன்ஷிப்பை - அது நட்பாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி - அர்த்தமுள்ளதாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படித்தானே?