
நம் வீட்டிற்கு வரும் அனைவருக்கும் குறிப்பிட்ட சில பொருட்களையும், குறிப்பிட்ட சில அறைகளையும் காட்டக்கூடாது. சிலர் நம் வீட்டிற்கு வந்து செல்வதால் ஏற்படும் கண் திருஷ்டி வீட்டின் சூழ்நிலையை மாற்றிவிடும். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்து நகை, ஆடை வாங்குவோம். ஆனால், அதை குறிப்பிட்ட சில நபரிடம் காட்டும் போது அதற்கு பிறகு அந்த ஆடை, நகையை போட முடியாமல் போய்விடும். என்ன தான் நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும், நம்மிடம் இருப்பதை பார்த்து சிலர் பொறாமைப்படும் போது நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருளை நம்மாலேயே அனுபவிக்க முடியாமல் போய்விடும் என்று சொல்லப்படுகிறது.
1. சில வீடுகளில் காரணமே இல்லாமல் கணவன் மனைவிக்குள் சண்டை அதிகமாக வரும். கருத்து வேறுப்பாடு அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் திருமணம் ஆன பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை மற்றவர்களிடம் பெருமைக்காக எடுத்துக் காட்டும் போது அதைப் பார்க்கக்கூடிய நபர்கள் படும் பொறாமை அந்த கணவன் மனைவிக்குள் பிரச்னையாக உருவாகும். பொதுவாக மாங்கல்யத்தை யாரிடமும் காட்டக்கூடாது என்று சொல்வார்கள்.
2. நம் வீட்டிற்கு வருபவர்களை ஹாலில் வைத்து உபசரித்து அனுப்ப வேண்டும். அப்படியில்லாமல் நம் வீட்டு படுக்கையறை, சமையலறை, பூஜையறை என்று எல்லா இடங்களையும் அவர்களிடம் காட்டக்கூடாது என்று சொல்லப்படுகிறது. சில வீடுகளில் இருக்கும் பூஜையறையில் பாரம்பரியமாக சில விஷயங்களை பராமரித்துக் கொண்டு வருவார்கள். வலம்புரி சங்கு, சாலிகிராமம், குலதெய்வத்தின் படம் இதையெல்லாம் அவர்கள் எடுத்துப் பார்க்கும் போது அதனுடைய தெய்வீகத்தன்மை குறைந்துவிடும்.
3. நம் வீட்டில் வைத்திருக்கும் நகை மற்றும் புடவையை வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் காட்டுவதை தவிர்ப்பது நல்லது. அவர்கள் அதை பார்த்ததும் அதன் மீது ஆசைப்பட்டு பொறாமைப்படும் போது அந்த நகையையோ அல்லது புடவையையோ பிறகு அணிய முடியாத அளவு சூழ்நிலை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
4. நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் பொழுது மற்றவர்கள் கண் படும்படி உணவு ஊட்டும் போது அதை சிலர் பார்த்து பொறாமைப்பட்டால், குழந்தைக்கு ஆரோக்கிய சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படும். பெரியவர்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது, உணவு ஊட்டும் போதோ அதிகப்படியான மக்கள் இருக்கும் போது செய்யக்கூடாது என்று சொல்வார்கள்.
5. வெகுநாட்களாக திருமணம் வரன் பார்க்கும் நபர் அது கைக்கூடி வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் போது அதை எல்லோரிடம் கூறி தம்பட்டம் அடிக்கக்கூடாது. நல்லப்படியாக அது ஒரு முடிவுக்கு வரும் வரை திருமணம் சம்மந்தமான விஷயத்தை யாரிடமும் சொல்லி விளம்பரப்படுத்தக்கூடாது. அதைப்போல வீடோ அல்லது காரோ வாங்க செல்கிறார்கள் என்றால் அது முடியும் வரை யாரிடமும் பொறாமைப்படும் அளவிற்கு அதைப்பற்றிக் கூறக்கூடாது.
இந்த 5 விஷயங்களிலும் கவனமாக இருந்தால் கண் திருஷ்டி ஏற்படாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.