செலவைக் குறைக்கணும்; அவ்வளவுதானே ரொம்ப ஈஸிங்க!

Reduce expenses is very easy
Reduce expenses is very easyhttps://gromo.in

‘அப்பப்பா… எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் கட்டுப்படியாகவில்லை. என்னதான் செய்வது? எந்தெந்த வழியிலேயோ பார்க்கிறோம், செலவுகளை குறைக்க முடியவில்லை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘நாய் போர்வை வாங்கிய கதை’ என்று. ஒரு நாய் இரவில் கடும் குளிரில் படுத்திருக்கும்போது நினைக்குமாம், ‘காலையில் எழுந்தவுடன் முதலில் ஒரு போர்வை வாங்க வேண்டும்’ என்று. மறுநாள் காலை எழுந்து வெயிலில் வெளியே கிளம்பிய உடன் குளிர் போய்விடும். அப்பொழுது போர்வை வாங்க வேண்டும் என்ற புத்தி நாய்க்கு இருக்காதாம். மறுநாள் இரவும் அப்படியே நினைக்குமாம். ஆனால், கடைசிவரை போர்வையை நாய் வாங்கப்போவதில்லை.

அப்படித்தான் நாமும், ‘செலவை குறைக்க வேண்டும், குறைக்க வேண்டும்’ என்று காசு இல்லாதபோது நினைப்போம். ஆனால், கையில் கொஞ்சம் பணம் வந்து விட்டால்போதும், தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவித்து விடுவோம். சரி, செலவுகளை எப்படித்தான் கட்டுப்படுத்தி பணத்தை மிச்சப்படுத்துவது? இது ரொம்ப ரொம்ப ஈஸி. இந்த பத்து ட்ரிக்ஸை வாழ்வில் கடைபிடியுங்கள் போதும்.

1. செலவு போக சேமிப்பு என்பதைவிட, சேமிப்பு போக செலவு என்பதை கட்டாயமாக கடைபிடியுங்கள்.

2. அத்தியாவசியம் எது என்றும், அனாவசியம் எது என்றும் தெரிந்துகொண்டால் பாதி செலவு தவிர்க்கப்படும்.

3. தினசரி செலவுகளை கணக்கு பார்த்து அதில் எது அதிக செலவுகளை கொடுக்கிறதோ அதில் எவ்வாறு குறைக்கலாம் என்பதை பகுத்தறிந்து செலவழிக்கவும்.

4. உங்கள் சேமிப்புகளை கட்டாயம் ஏடிஎம் மற்றும் google pay, paytm என்ற சேவைகள் இல்லாத மற்றும் உட்படாத வங்கியில் சேமிக்கவும். அவ்வாறு செய்தால் மட்டுமே உங்களது கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் அவ்வப்போது பார்க்காமல் அதை சேமிப்பின் நோக்கத்தில் சேமிப்பீர்கள்.

5. உங்களுக்கு அதிகப்படியான தேவைகளும் மற்றும் உபயோகம் இல்லாத பொருட்களின் மீது உள்ள நாட்டத்தை விட்டு, அதற்கு பதிலாக உங்களுக்குப் பயனுள்ள மற்றும் அத்தியாவசியமான நீண்டகாலம் உதவும் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

6. உங்களிடம் இருக்கும் அதிகப்படியான பணத்தை பணமாக மட்டும் சேமிக்காமல் அதற்கு பதிலாக அதை தங்கத்தில் அல்லது நிலத்தில் முதலீடு செய்து வைப்பது நல்லது. பணத்தை பணமாக சேமிக்கும்போது அதன் மதிப்பை இழந்து விடக்கூடும். அதை நீங்கள் தங்கமாகவும் நிலமாக வாங்கி சேர்த்தால் அதன் மதிப்பு கூடும் மற்றும் வருங்காலத்தில் இரட்டிப்பாகும்.

7. உங்கள் வருமானத்தில் சிறு பகுதியை நம்பிக்கையான மற்றும் தரமான நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் மதிப்பை இரட்டிப்பு செய்து உங்கள் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக செயல்படுத்தவும்.

இதையும் படியுங்கள்:
குறட்டைக்கும் டிவி பார்ப்பதற்கும் என்ன தொடர்பு?
Reduce expenses is very easy

8. சேமிப்பு என்பதன் குறிக்கோள் பணமாக மட்டும் இருக்கக் கூடாது. அதை நீங்கள் பல வருடங்கள் கழித்துப் பார்க்கும்பொழுது அதனுடன் சேர்ந்து சில சந்தோஷங்களும் இருக்க வேண்டும். அதனால் உங்களுடன் இருப்பவர்களை சந்தோஷமாகவும் திருப்தியாகவும் பார்த்துக் கொள்ளுங்கள்.

9. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பணம் சேர்ந்தவுடன் அதை தங்கமாகவோ அல்லது பிளாட் போன்றவையாகவோ வாங்கி வைக்கலாம். அது பாதுகாப்பும்கூட.

அப்புறம் என்ன? எப்படி செலவு செய்தால் எந்த வழியிலெல்லாம் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டோம். இனியாவது பர்சை பாதுகாப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com