ஓசோனை பாதிக்காத குளிர்சாதனங்கள்! வீட்டுக்கு ஒன்று அவசியம்!

Clay pot
Clay pot

நமது முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக முக்கிய காரணம் அவர்கள் வாழ்வியல் முறையும், பாரம்பரியமான உணவுப் பழக்கமும் தான். அந்த ஆரோக்கியமான வாழ்வுக்கு மண் பாண்டங்களின் பங்கு மகத்தானது. எப்படி என்று பார்ப்போம்.

மண்பானை சமையலின் மகத்துவம்:

அடுக்கடுக்காய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பானைகளை பார்க்கவே அழகாக இருக்கும். வருடந்தோறும் சேர்த்து வைக்கும் எண்ணெய், புளி, பருப்பு, தானியம் எல்லாமே பானைகளில்தான் பதுங்கியிருக்கும். அடுப்பங்கரையிலும் மண் பாத்திரங்கள்தான். சோறு வடிக்க வடிதட்டோடு கூடிய பானை, குழம்புக்கு ஒரு பானை, கீரை மசியலுக்கு ஒரு சட்டி, மீன் குழம்புக்கு அகன்ற சட்டி என எல்லாம் சட்டி மயம்தான்.

அவ்வளவு ஏன்... ஆளுயர பானைகள்தான் தண்ணீரைச் சேமித்து வைக்கும் தொட்டி.

உடல் ஆரோக்கியத்தின் மூலதனமே உணவுதான் எனும் போது உணவை இப்படித்தான் சமைக்கவேண்டும் என்று கற்றுத் தந்திருக்கும் நம் முன்னோர்களின் வழியிலிருந்து விலகிவிட்டோம். இப்போது மண் பாத்திரங்களுக்கான இடத்தை சில்வர், அலுமினியம், நான் ஸ்டிக் பாத்திரங்கள் நிரப்பிவிட்டன.பெரும்பாலான நோய்களின் தாக்கத்துக்கு இதுவும் பிரதான காரணம்.

 • மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.

 • மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது.

 • மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.

 • மண்பாத்திரத்தில் சமைப்பதால் உணவு விரைவில் கெட்டுப் போகாது. குறிப்பாக தீயல் வகைகளை மண் சட்டியில் செய்வதால். ஒரு வாரம் கூட கெட்டுப்போகாமல் இருக்கும்.

 • மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமன்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும்போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை

இதையும் படியுங்கள்:
வீட்டு உபயோகப் பொருட்கள் நீண்ட நாட்கள் பயன் தர சில எளிய ஆலோசனைகள்!
Clay pot
 • நல்ல பசியையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

 • மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும்.

 • குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும்.

 • மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும்.

 • உடல் சூட்டைத் தணிக்கும்.

 • மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகும்.

 • மண் பாத்திரங்களில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவியும், காற்றும் உணவில் ஊடுருவுவதால் சரியான பதத்தில் வைட்டமின்களும் கனியுப்புக்களும் அழிவடையாத வகையில் சமைக்க முடியும். இதனால் மண் பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவு பல மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

 • இதில் சமைத்த உணவை சாப்பிடுவதால், வாயு தொல்லை ஏற்படுவதில்லை.

 • நீண்ட நேரம் உணவு சூடாக இருக்கிறது

 • உடல் ஆரோக்கியத்துக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது என்பதனாலேயே சமையலுக்கு தொன்று தொட்டு மண் பாத்திரங்கள் சிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை.

 • மண் பானைகளில் குடிநீர் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும். காரணம் இதன் நுண் துளைகளின் வழியே உள்ளே இருக்கும் நீர் ஆவியாகிக் கொண்டே இருக்கும். பானை வெப்பமும், உள்ளிருக்கும் நீரின் வெப்பமும் ஆவியாகிக்கொண்டே இருப்பதால் நீர் குளிர்ச்சியாக இருக்கிறது.

இயற்கை கொடுத்த, ஓசோனை பாதிக்காத குளிர்சாதனமே மண் பாத்திரங்கள் என்று சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com